பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த 7 நாளில் என்னவெல்லாம் நடக்குமோ? பீதியில் காங். - மஜத கூட்டணி.. பாஜக போடும் புதிய திட்டம்!

அடுத்த ஒரு வாரத்திற்குள் கர்நாடக அரசியலில் இன்னும் பல அதிரடி திருப்பங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Karnataka Political Crisis | பாஜகவின் திட்டங்களை தவிடு பொடியாக்கும் சபாநாயகர்-

    பெங்களூர்: அடுத்த ஒரு வாரத்திற்குள் கர்நாடக அரசியலில் இன்னும் பல அதிரடி திருப்பங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

    கர்நாடகாவில் இன்று எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைய உள்ளது. இன்று மாலை பாஜக சார்பாக எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

    இன்று மதியம் அவர் ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். இதனால் கர்நாடக அரசியலில் நிறைய அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது.

    ஒரு வாரம்

    ஒரு வாரம்

    இந்த நிலையில் எடியூரப்பா இன்னும் ஒரு வாரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். பொதுவாக ஆட்சி பெரும்பான்மையை நிரூபிக்க 2 அல்லது மூன்று நாட்கள் மட்டுமே வழங்கப்படும். ஆனால் எடியூரப்பாவிற்கு ஆளுநர் வாஜுபாய் மொத்தம் 7 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.

    பல சர்ச்சை

    பல சர்ச்சை

    ஆளுநரின் இந்த செயல் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. எப்படி ஆளுநர் இத்தனை நாட்களை அவகாசமாக வழங்குகிறார். எப்படி அவர் 7 நாட்கள் கொடுக்கலாம். இது முறை கிடையாது என்று பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு பின் பாஜகவின் வேறு ஒரு திட்டம் இருப்பதாக தெரிகிறது.

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    225 எம்எல்ஏக்கள் உள்ள கர்நாடக சட்டசபையில் 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா (அல்லது தகுதி நீக்கம்) போக, மீதம் இருப்பது 209 எம்எல்ஏக்கள். இதில் பெரும்பான்மையை நிரூபிக்க 105 எம்எல்ஏக்கள் தேவை. பாஜகவிடம் சரியாக 105 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது. இதனால் அக்கட்சி ஆட்சி அமைக்கும். ஆனால் இது கத்தி மேல் நடப்பது போல மிகவும் சிக்கலானது. இதனால் ஆட்சியை நிலையாக நடத்த பாஜக வேறு திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.

    மேலும் சிலர்

    மேலும் சிலர்

    அதன்படி காங்கிரஸ் - மஜத கூட்டணியில் இருந்து மேலும் சில எம்எல்ஏக்கள் அடுத்த ஒரு வாரத்திற்குள் ராஜினாமா செய்வார்கள். அடுத்த 7 நாட்களுக்குள் 3-4 காங்கிரஸ் - மஜத எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வார்கள். ஆட்சி கவிழ்ந்த அதிர்ச்சியில் இருக்கும் உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள். இதன் மூலம் சட்டசபை பலம் மேலும் குறையும். அப்போது பெரும்பான்மைக்கான மேஜிக் நம்பர் 105 விட குறையும்.

    எல்லாம்

    எல்லாம்

    பெரும்பான்மைக்கான மேஜிக் நம்பர் 105 விட குறைந்தால் பாஜகவிற்கு ஆட்சியை நடத்துவது எளிமையாக இருக்கும். அதன்பின் பொறுமையாக சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்று நிலையான ஆட்சியை கொடுக்கலாம் என்று பாஜக நினைக்கிறது. இதனால்தான் இந்த 7 நாள் அவகாசத்தை பாஜக பெற்றுள்ளது. அடுத்த 7 நாட்களுக்குள் கர்நாடகாவில் அரசியலில் நிறைய பூகம்பங்கள் வெடிக்கும் என்று கூறுகிறார்கள்.

    கலக்கம்

    கலக்கம்

    அதிலும் காங்கிரஸ் கட்சியில் அதிர்ச்சியில் இருக்கும் முக்கிய உறுப்பினர்கள் பலர் பாஜகவிற்கு தாவுவார்கள் என்று செய்திகள் வருகிறது. இதனால் யார் போக போவது, யார் ஷாக் கொடுக்க போவது என்று தெரியாமல் காங். - மஜத கூட்டணி பெரிய கலக்கத்தில் உள்ளது.

    English summary
    In Karnataka, anything may happen in the next 7 days, Worries JDS and Congress alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X