கர்நாடகாவில் மாஸ் காட்டும் காங்கிரஸ்.. பாஜகவுக்கு கஷ்டம் தானாம்.. வெளியான புது எக்ஸிட் போல் சர்வே!
பெங்களூர்: கர்நாடகாவில் இன்று சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே கர்நாடக தேர்தலில் எந்தக் கட்சி வெல்லும் என்பது குறித்து இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
கர்நாடகாவில் இன்று சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அங்கே மொத்தம் 224 தொகுதிகள் இருக்கும் நிலையில், அத்தனை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மதியத்திற்கு மேல் விறுவிறுப்பாக நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
சட்டசபைத் தேர்தல்: கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில், அங்கே இப்போது பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற சூழல் இருக்கிறது. இந்த மெஜாரிட்டி நம்பரைப் பெற பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி இருந்து வருகிறது. ஓல்ட் மைசூர் உள்ளிட்ட பிராந்தியங்களில் ஜேடிஎஸ் கட்சியும் கடும் போட்டி தந்து வருகிறது.
பாஜக இப்போது தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது. இதனால் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக இறங்குகிறது. அதேநேரம் ஊழல் குற்றச்சாட்டுகளால் மாநில பாஜக அரசு மீது கடும் அதிருப்தி இருப்பதால் எளிதாக வெல்வோம் என்று காங்கிரஸ் உடன் இறங்குகிறது. இதனால் கடைசிக் கட்டத்தில் அங்கே கடும் போட்டி நிலவியது.
கருத்துக் கணிப்பு முடிவுகள்: இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இப்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இப்போது இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் காங்கிரஸுக்கு 110-120 இடங்களைப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், அதை அடையக் காங்கிரசுக்கு அதிக வாய்ப்பு இருக்கவே செய்கிறது.
அதைத் தொடர்ந்து பாஜகவுக்கு 80-90 இடங்களும் ஜேடிஎஸ் கட்சிக்கு 20-24 இடங்கள் கிடைக்கும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகள் 1-3 இடங்களில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் பலவற்றில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையைப் பெறும் என்றே கூறப்பட்டது. இருப்பினும், கடைசிக் கட்டத்தில் பாஜக தீவிர பிரசாரத்தில் இறங்கிய நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சற்று கலவையாகவே வந்துள்ளன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
குமாரசாமி: தொங்கு சட்டசபை அமைந்தால் ஆட்சியை அமைக்க எந்தவொரு கட்சியும் நிச்சயம் ஜேடிஎஸ் ஆதரவு தேவைப்படும். அப்போது தன்னை முதல்வராக்க வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்துவார். எனவே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் வந்தது போலத் தொங்கு சட்டசபை அமைந்தால் அது ஜேடிஎஸ் கட்சிக்குக் கொண்டாட்டமாகவே இருக்கும்.
இருப்பினும், கருத்துக்கணிப்புகளில் வரும் முடிவுகள் அப்படியே தேர்தல் முடிவுகளாக இருக்கும் என்று நம்மால் 100% சொல்ல முடியாது. பல நேரங்களில் கருத்துக்கணிப்பும் உண்மை முடிவுகளும் மாறியுள்ளன. எனவே, இந்த முறை கர்நாடக மக்கள் எந்த கட்சி தங்களை ஆள வேண்டும் என்று தீர்மானித்து உள்ளனர் என்பதை அறிந்து கொள்ள நாம் மேலும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications