"ஐயோ முடியல.. நாங்கள் ஒன்றும் மெஷின் இல்லை.." கழுத்து வரை போகும் பிரஷர்.. புலம்பி தள்ளிய ஐடி ஊழியர்
பெங்களூர்: இந்தியாவில் இளைஞர்களுக்கு மிகப் பெரியளவில் வேலைவாய்ப்பைக் கொடுக்கும் துறையாக ஐடி இருக்கிறது. நமது நாட்டில் பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய ஐடி க்ளையண்ட்களுக்கு அவுட்சோர்ஸிங் முறையில் வேலை தரப்படும். இதற்கிடையே ஐடி ஊழியர் ஒருவர் தங்கள் மீதான அழுத்தம் குறித்துப் பதிவிட்ட போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியாவில் கடந்த 20, 25 ஆண்டுகளாகவே ஐடி துறை மிகப் பெரியளவில் வளர்ந்து இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நாம் ஐடி துறை மிகப் பெரியளவில் வேலைவாய்ப்புகளையும் கொடுத்து வருகிறது. அதேநேரம் நமது ஐடி நிறுவனங்கள் பெரும்பாலும் அவுட்சோர்ஸிங் வேலைகளையே பெறுகிறது.

ஐடி ஊழியர்கள்
அதாவது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் க்ளையண்ட்கள் இருப்பார்கள்.. அவர்களுக்கு நாம் வேலை செய்து தர வேண்டும் என்பது போலவே இருக்கும். இதுபோல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலை செய்வதால் நாம் நேரம் காலம் பார்க்காமல் கூட வேலை செய்ய வேண்டி இருக்கும். இது பலருக்கும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.
இதற்கிடையே இந்தியாவில் ஐடி துறையில் அவுட் சோர்சிங் கலாச்சாரம் குறித்து ஊழியர் ஒருவர் தனது ரெட்டிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். அமெரிக்க க்ளையண்ட்கள் இந்தியத் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் கொடுத்துவிட்டு உலகத் தரத்தில் வேலையை எதிர்பார்ப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.
புலம்பல்
"இந்தியாவிற்கு அவுட்சோர்சிங் செய்யும் அமெரிக்க நண்பர்களே, தயவுசெய்து அமைதியாக இருங்கள்" என்ற தலைப்பில் அவர் இதைப் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் வளர்ந்து வரும் ஐடி துறையால் பயனடைந்து கொண்டே இந்தியத் தொழிலாளர்களை அமெரிக்க க்ளையண்ட்கள் மோசமாக நடத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "நீங்கள் இந்தியாவிற்கு வேலையை அவுட்சோர்சிங் செய்துவிட்டு நொடிக்கு நொடி அழுத்தம் கொடுக்கிறீர்கள். கொஞ்சம் சில் செய்யுங்கள். இதோ அடிப்படை யதார்த்தம்: இங்கு புதிய ஐடி ஊழியரின் சராசரி ஊதியம் என்பது ஆண்டுக்கு வெறும் ரூ.7 லட்சம் மட்டும் தான்(~$8,000/ஆண்டு). ஆனாலும், அந்த சம்பளத்தில் கூகுளுக்கு இணையாக நாங்கள் வேலை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எங்கள் மீது வைக்கிறீர்கள். டைம் ஜோன் மாறுவது தொடர் மீட்டிங், கடைசி நிமிட காலக்கெடு எனப் பல விஷயங்களை நாங்கள் கையாள வேண்டி இருக்கிறது.
மெஷின் இல்லை
நாங்கள் ஒன்றும் மெஷின் இல்லை. எங்களுக்கு வேலையைப் பற்றி அக்கறை இருக்கிறது. ஆனால் பரஸ்பர மரியாதை மற்றும் யதார்த்தமான எதிர்பார்ப்புகள் முக்கியம். காலக்கெடு என்பது எங்களுக்கும் முக்கியம் தான். எனவே தொடர்ந்து அழுத்தம் தருவதற்குப் பதிலாக ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவோம். நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்.. நீங்கள் சிறந்ததை விரும்புகிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, நடுவே ஒரு இடத்தில் நாம் சுமுகமாக முடிவுக்கு வருவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
டிரெண்டாகும் போஸ்ட்
அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பலரும் அவரது கருத்துக்கு ஆதரவாகவே கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அதேநேரம் பிரஷர்களுக்கு எல்லா இடங்களிலும் 7 லட்ச ரூபாய் எல்லாம் ஊதியம் கிடைப்பதில்லை என்றும் பல ஊர்களில் ஐடி ஊழியர்கள் ரூ.15,000- ரூ.20,000 சம்பளத்தில் கூட வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவதாகவும் பதிவிட்டுள்ளனர்.
-
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications