fresher hiring அடியோடு குறைகிறது.. இன்ஃபோசிஸ் அதிரடி.. இந்திய ஐடி துறைக்கு பெரிய வார்னிங்
பெங்களூர்: இன்போசிஸ் நிறுவனத்தில் ஆட்டோமேசன் மற்றும் ஏஐ பயன்பாடு அதிகரிப்பதால், எதிர்காலத்தில் புதியவர்களுக்கான வேலைவாய்ப்பு (fresher hiring) குறையும் என்று தெரிவித்துள்ளது. இது இந்திய ஐடி துறையில் முதல் முறையாக வெளிப்படையாக கூறப்பட்ட பெரிய எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. என்ட்ரி லெவல் வேலைகள் தான் அதிகமாக automation மூலம் பாதிக்கப்படும் என்று இன்போசிஸ் கூறுகிறது. சாப்ட்வேர் தயாரிப்புகள் அதிகரிப்பதால், குறைந்த மனித வளத்திலேயே அதே வேலை செய்ய முடிகிறது.
இதுபற்றி ஊடகம் ஒன்றில் வந்துள்ள தகவல்களை பார்ப்போம். இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் , இனிவரும் ஆண்டுகளில் கல்லூரியிலிருந்து நேரடியாக வேலைக்கு எடுக்கப்படும் புதிய பட்டதாரிகளின் (Freshers) எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிட்டிருக்கிறது.

ஏன் இந்த மாற்றம்?
ஆட்டோமேஷன் மற்றும் ஏஐ: ஏஐ மற்றும் தானியங்கி முறைகள் வளர்ந்து வருவதால், மனிதர்களின் தேவை குறைந்து வேலைத்திறன் அதிகரித்திருக்கிறது.
குறைந்த வேலைவாய்ப்புகள்
முன்பெல்லாம் ஆரம்பகட்ட வேலைகளுக்கு (L1, L2 support) நிறைய ஆட்கள் தேவைப்பட்டனர். இப்போது அந்த இடங்களை மென்பொருட்களே நிரப்பிவிடுகின்றன. அதேபோல்அமெரிக்காவில் விசா கட்டுப்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர்கள் செலவுகளைக் குறைப்பது போன்ற காரணங்களாலும் புதிய பணியாளர்களை எடுப்பது குறைந்திருக்கிறது.
பிற நிறுவனங்களின் நிலை என்ன? இன்ஃபோசிஸ் இந்த முடிவை வெளிப்படையாக அறிவித்தாலும், மற்ற நிறுவனங்கள் வேறுபட்ட நிலையில் உள்ளன. டிசிஎஸ் நிறுவனம் ஏஐ நுட்பம் தெரிந்த புதியவர்களைத் தொடர்ந்து வேலைக்கு எடுப்பதில் ஆர்வமாக உள்ளது. கடந்த ஆண்டில் சுமார் 42,000 பேரை வேலைக்கு எடுத்துள்ளது. ஹெச்சிஎல், காக்னிசன்ட், நிறுவனங்கள் இப்போதைக்கு புதிய பட்டதாரிகளை எடுப்பதைக் குறைக்கப்போவதாக அறிவிக்கவில்லை.
மாணவர்களுக்கு ஏற்படும் தாக்கம்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 லட்சம் பொறியியல் மாணவர்கள் படித்து முடித்து வெளிவருகிறார்கள். ஐடி நிறுவனங்களின் இந்த மாற்றத்தால், வரும் காலங்களில் கல்லூரியில் படிக்கும்போதே வேலை கிடைப்பது (Campus Placements) கடினமாகலாம். குறிப்பாக 2026-ல் முடிப்பவர்களுக்கு இது நிச்சயம் பெரிய சவாலாக இருக்கும்.
இதுபற்றி வார்னர் தாமனி என்ற நெட்டிசன் கூறுகையில், "இன்போசிஸ் நிறுவனத்தில் ஆட்டோமேசன் மற்றும் ஏஐ பயன்பாடு அதிகரிப்பதால், எதிர்காலத்தில் புதியவர்களுக்கான வேலைவாய்ப்பு (fresher hiring) குறையும் என்று தெரிவித்துள்ளது. இது இந்திய ஐடி துறையில் முதல் முறையாக வெளிப்படையாக கூறப்பட்ட பெரிய எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. என்ட்ரி லெவல் வேலைகள் தான் அதிகமாக automation மூலம் பாதிக்கப்படும் என்று இன்போசிஸ் கூறுகிறது. சாப்ட்வேர் தயாரிப்புகள் அதிகரிப்பதால், குறைந்த மனித வளத்திலேயே அதே வேலை செய்ய முடிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 லட்சம் பொறிய்யல் மாணவர்கள் பட்டதாரி ஆகிறார்கள். ஆனால் IT நிறுவனங்களில் fresher hiring குறைந்தால், இவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுகிறது. இன்போசிஸ் மட்டும் அல்ல. காக்னிசன்ட்,டிசிஎஸ், ஹெச்சிஎல் போன்ற நிறுவனங்களும் ஏஐ காரணமாக தேர்வு முறையும் மாறும் என்று சொல்கின்றன. Fresher களுக்குப் பதிலாக skilled & AI-ready professionals மீது கவனம் அதிகரித்துள்ளது.

இதன் அர்த்தம் வேலை இல்லை என்பதல்ல. ஆனால் "டிகிரி மட்டும் போதாது" என்ற நிலை. AI, automation, data, cloud போன்ற புதிய skills கற்றுக்கொள்ளாவிட்டால் போட்டியில் பின்தங்க நேரிடும் என்பதே உண்மையாகும்.
இன்றைய மாணவர்களுக்கும், fresh graduates களுக்கும் முக்கிய பாடம்: 📚
👉 Job தேடுவதற்குப் பதிலாக Skill build செய்யுங்கள்
👉 AI-யை பயப்படாமல், அதோடு வேலை செய்ய கற்றுக்கொள்ளுங்கள்
👉 Future-ready ஆக மாறினால், வேலை உங்களையே தேடி வரும் " இவ்வாறு கூறியுள்ளார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications