செக்யூரிட்டியால் விரட்டப்பட்ட 700 ஊழியர்கள்! Infosys அட்டூழியம்! நாராயண மூர்த்தி பேச்சு இதற்குதானா
பெங்களூர்: இன்ஃபோசிஸ் மைசூர் அலுவலகத்திலிருந்து சுமார் 700 ஊழியர்கள், செக்யூரிட்டி மூலம் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் அடிப்படை பயிற்சி பெற்று வந்ததாகவும், ஆனால் மூன்று முயற்சிகளுக்கு பின்னரும்கூட உள்நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று கூறி இந்த பணி நீக்கம் நடந்திருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக இன்ஃபோசிஸ் இருந்து வருகிறது. நிறுவனம் சார்பில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைக்கு பலர் எடுக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு மைசூரு வளாகத்தில் வைத்து அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. பயிற்சி பெற்றவர்களுக்கு உள்நுழைவுத் தேர்வும் நடத்தப்பட்டிருக்கிறது. மொத்தம் 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் ஒன்றில் பாஸ் செய்துவிட்டால் கூட பணியில் தொடர முடியும். ஆனால் தற்போது வெளியேற்றப்பட்டவர்கள் 3 வாய்ப்புகளிலும் தேர்ச்சி அடையவில்லை. அதனால்தான் வெளியே அனுப்பிவிட்டோம் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஆனால், இங்கு நடந்த விஷயமே வேறு. இன்ஃபோசிஸ் நிறுவனம் பாதி உண்மையை மட்டும்தான் கூறுகிறது என ஐடி தொழிலாளர்கள் சங்கமான என்ஐடிஇஎஸ் (NITES) குற்றம்சாட்டியுள்ளது.
அதாவது, "நிறுவனம் சார்பில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைக்கு எடுக்கப்பட்டு தற்போது வெளியே அனுப்பப்பட்ட பலர் 2022 பேட்ஜை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு பின்னர்தான், ஆண்டுக்கு ரூ.3.2-3.7 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என பணி ஆணை வழங்கப்பட்டிருக்கிறது. 2023 அக்டோபரில்தான் இவர்கள் பயிற்சிக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அதன் பிறகு நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று சொல்லி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
பவுன்சர்களையும், செக்யூரிட்டியையும் வைத்து ஊழியர்களை விரட்டியிருக்கிறார்கள். நிறுவனம் சார்பில் 350 பேரைத்தான் வெளியே அனுப்பினோம் என சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இதன் உண்மையான எண்ணிக்கை 700. வளாகத்திற்குள் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி கிடையாது என்பதால், ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட அத்துமீறலை வெளியில் கொண்டுவர முடியவில்லை.
இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் அதிகாரப்பூர்வமாக நாங்கள் புகார் அளிக்க இருக்கிறோம். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தன்னிச்சையான முடிவு கண்டனத்திற்கு உரியது" என்று தெரிவித்திருக்கிறது.
இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வரை உழைக்க வேண்டும் என்றும், நான் காலை 6.30 மணி முதல் இரவு 8.30 வரை உழைக்கிறேன். இப்படி உழைத்தால்தான் இந்தியா வேகமாக வளர்ச்சியை எட்ட முடியும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி சமீபத்தில் பேசியிருந்தார்.
வாரத்திற்கு 70 நேரம் எனில், ஒரு நாளைக்கு 11.6 மணி நேரம் உழைக்க வேண்டி இருக்கும். இந்தியாவில் 9 மணி நேரம்தான் வேலை நேரம் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் பல நிறுவனங்கள் தொழிலாளர்களை 10-12 மணி நேரம் வரை கரும்பு போல பிழிந்து எடுக்கின்றன. ஆனால் அதற்கேற்ற சம்பளம் எதையும் கொடுப்பதில்லை. இவ்வளவு பிரச்சனை இருக்கும்போது, 11 மணி நேரம் வேலை குறித்து நாராயணன் பேசியிருந்தது விவாதங்களை கிளப்பியிருந்தது.
ஒருவேளை, தற்போது வெளியேற்றப்பட்ட ஊழியர்கள் 11 மணி நேரம் வேலை செய்ய மறுத்து இருப்பதால்தான் வெளியேற்றப்பட்டிருக்கிறார்களோ? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முடிவு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
-
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.. வேளாண்மை அலுவலர் பதவி! அப்ளை பண்ணுவது எப்படி? -
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications