2030க்குள் பெண் ஊழியர்களின் எண்ணிக்கையை 45% ஆக உயர்த்த இன்போசிஸ் முடிவு! புதிய பிளான் அறிவிப்பு
பெங்களூர்: இந்திய மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ், பணி இடைவெளிக்குப் பிறகு பெண் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் நோக்கில் ஒரு சிறப்பு பரிந்துரை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. "ரீஸ்டார்ட் வித் இன்ஃபோசிஸ்" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம், பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் அனுபவ நிலைகளில் உள்ள பணிகளுக்கு தகுதியானவர்களை பரிந்துரைக்க தலைமை நிர்வாகிகளையும், சக ஊழியர்களையும் ஊக்குவிக்கிறது. இதன் மூலம் 2030க்குள் பெண் ஊழியர்களின் எண்ணிக்கையை 45% அளவுக்கு உயர்த்த இன்போசிஸ் முடிவு செய்திருக்கிறது.
ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் இது குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவம் கொண்டு, ஆறு மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியான இடைவெளி எடுத்தவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. வழிகாட்டுதல் மற்றும் திறன் மேம்பாடு மூலம் பெண்கள் மீண்டும் தன்னம்பிக்கை பெறவும், நிறுவன வாழ்க்கைக்கு எளிதாக திரும்புவதற்கும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜாவா, .நெட், SAP, ஆரக்கிள், சேல்ஸ்ஃபோர்ஸ், ரியாக்ட், பைதான், ஆங்குலர் மற்றும் செலினியம் டெஸ்டிங் போன்ற பல துறைகளில் காலியிடங்கள் உள்ளன. டெவலப்பர், டெக் லீட் மற்றும் மேலாளர் பதவிகளிலும் காலியிடங்கள் இருக்கின்றன.
ஊழியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, நிரப்பப்படும் பதவியின் முக்கியத்துவத்தைப் பொறுத்து ₹10,000 முதல் ₹50,000 வரை பரிந்துரை வெகுமதிகளை இன்ஃபோசிஸ் வழங்குகிறது. அதிகபட்சமாக 6 பதவிகளுக்கு பொருத்தமான பரிந்துரைகள் வழங்குபவர்களுக்கு ஊக்கத்தொகையாக ₹50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்த முயற்சியின் மூலம் 2030-ஆம் ஆண்டுக்குள் அதன் பணியாளர்களில் 45% பெண்களாக இருக்க வேண்டும் என்று நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது அதன் 3.23 லட்சம் ஊழியர்களில் பெண்கள் 39% பேர் உள்ளனர்.
இன்ஃபோசிஸின் தலைமை மனிதவள அதிகாரி ஷாஜி மேத்யூ, இந்த திட்டம் குறித்து கூறுகையில், "இந்த முயற்சி, இன்ஃபோசிஸுக்கு மட்டுமல்ல, முழு தொழில்துறைக்கும், பன்முகத்தன்மைக்கான எங்கள் முதலீடாகும்" என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், "ரீஸ்டார்ட்" திட்டம் கிட்டத்தட்ட 1,400 பெண்களை மத்திய-மேலாண்மை பதவிகளில் பணியமர்த்த உதவியுள்ளது. ஊழியர்களின் தீவிர பங்கேற்பு மூலம் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க இன்ஃபோசிஸ் திட்டமிட்டிருக்கிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications