சோகம்! கடைசி வரை முயன்ற சிஎஸ்கே.. தூக்கிய ஆர்சிபி.. நிறைவேறாமல் போன டிகே கனவு -என்ன நடந்தது?
பெங்களூர்: 2022 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி தினேஷ் கார்த்திக்கை 5.50 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது. இவரை எடுக்க சிஎஸ்கே அணி கடுமையாக முயன்றது.
2022 ஐபிஎல் தொடரின் ஏலம் தீவிரமாக நடந்து வருகிறது. பல முக்கிய வீரர்கள் வெவ்வேறு அணிகளுக்கு இன்று மாற்றி உள்ளனர்.
இஷான் கிஷான் மீண்டும் மும்பை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 15.25 கோடி ரூபாய்க்கு இஷான் கிஷானை மும்பை அணி ஏலம் எடுத்தது.

தினேஷ் கார்த்திக்
இதில் தினேஷ் கார்த்திக் அடிப்படை விலை 2 கோடி ரூபாய்க்கு விடப்பட்டார். தொடக்கத்திலேயே சிஎஸ்கே அணி இவரை வைத்து அக்கவுண்ட் ஓபன் செய்தது. அதே சமயம் பெங்களூர் அணியும் தினேஷ் கார்த்திக்கை எடுக்க தீவிரமாக முயன்றது. இந்த ஏலத்திற்கு முன்பாகவே தினேஷ் கார்த்திக்கை பெங்களூர் அல்லது சென்னை அணி எடுக்கும் என்று கணிப்புகள் தெரிவித்தன. சிஎஸ்கேவில் ஆட வேண்டும் என்று தினேஷ் கார்த்திக்கும் குறிப்பிட்டு இருந்தார்.

பெங்களூர்
அதன்படியே சிஎஸ்கே அணி தொடர்ந்து தினேஷ் கார்த்திக்கை எடுக்க முயன்றது. ஆனால் பெங்களூர் அணியும் விடாமல் ஏலம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் சிஎஸ்கே 4.20 கோடி ரூபாய்க்கு தினேஷ் கார்த்திக்கை கேட்டது. அதன்பின் பெங்களூர் அணி தினேஷ் கார்த்திக்கை 4.40 கோடிக்கு கேட்டது. இதனால் களத்தில் பெரும் போட்டி நிலவியது. அதன்பின் சிஎஸ்கே 4.60 கோடிக்கு தினேஷ் கார்த்திக்கை கேட்டது.

சிஎஸ்கே
ஆனால் உடனே பெங்களூர் தினேஷ் கார்த்திக்கை 4.80 கோடிக்கு கேட்க, பின்னர் சிஎஸ்கே இவரை 5 கோடிக்கு கேட்டது. அதன்பின்பும் விலை உயர்ந்த நிலையில் கடைசியில் பெங்களூர் அணி 5.50 கோடி ரூபாய்க்கு கேட்டது. ஆனால் அதற்கு மேல் சிஎஸ்கே அணி இவரை எடுக்க முன் வரவில்லை. சிஎஸ்கே அணியில் மிடில் ஆர்டர் வீரர்கள் அதிகம் இல்லை. கீப்பர் ஏற்கனவே 3 பேர் இருக்கிறார்கள்.
Recommended Video

கடும் போட்டி
ஆனாலும் மிடில் ஆர்டரில் நன்றாக பேட்டிங் செய்ய கூடிய வீரர்கள் இல்லை. இதனால் தினேஷ் கார்த்திக்கை எடுக்க சிஎஸ்கே கடுமையாக முயன்றது. ஆனால் பெங்களூர் அணி வலுவான மிடில் ஆர்டரை விரும்புவதால் கடைசியில் தினேஷ் கார்த்திக்கை போட்டிபோட்டு 5.50 கோடி ரூபாய்க்கு எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணி தினேஷ் கார்த்திக்கை எடுக்க போராடி கடைசியில் தோல்வி அடைந்தது.












Click it and Unblock the Notifications