நாளை IPL ஃபைனல்.. வெறியில் RCB ரசிகர்கள்! பெங்களூரில் பார், பப்களில் நிரம்பி வழியும் புக்கிங்!
பெங்களூர்: நாளை ஐபிஎல் இறுதி போட்டி நடக்க இருக்கிறது. இதில் பெங்களூர்(ஆர்சிபி) அணியுடன் பஞ்சாப் மோதுகிறது. இதற்கு முன்னர் மூன்று முறை இறுதி சுற்றுக்கு சென்று கப் அடிக்காமல் ஆர்சிபி தவறவிட்டிருக்கிறது. எனவே இந்த முறையாவது கப் அடிக்குமா? என்று எதிர்பார்ப்புகள் எழுந்திருப்பதால், நாளைய தினம் பெங்களூரில் ஓட்டல்கள், பப்கள், பார்களில் முன்பதிவு எகிறியிருக்கிறது.
"கண்ணன் தேவன் டீ குடி.. 'ஆர்சிபி' புடி புடி" என அவர்கள் பாட்டை, அவர்களுக்கு எதிராகவே சிஸ்எஸ்கே ட்ரெண்ட் செய்து வரும் நிலையில், இந்த முறையாவது "டேய் பரமா கப் அடிடா" என ஆர்சிபி ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். எனவே நாளை நடக்கும் ஃபைனல் மேட்சை தவறவிடும் மனநிலையில் யாரும் இல்லை. இதனால் பெங்களூரில் வணிகர்களுக்கு கல்லா கட்ட தொடங்கியிருக்கிறது. முன்பதிவுகள் முன்னெப்போதைவிடவும் இப்போது எகிறியிருப்பதாக ஓட்டல் ஓனர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

"வழக்கமாக செவ்வாய்க்கிழமைகளில் கடையில் ஈ அடிக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக காதல் ஜோடிகள்தான் இருக்கும். ஆனால் இந்த செவ்வாய்.. கோல்டன் செவ்வாய். ஃபைனல் மேட்ச் இருப்பதால், புக்கிங் நிரம்பியிருக்கிறது. மேலும் புக்கிங் செய்ய அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. என்ன செய்வதென்றே தெரியவில்லை" என ஓட்டல் ஓனர்கள் கூறியுள்ளனர்.
மராத்தஹள்ளியில் உள்ள 'லாங் போட் ப்ரூயிங் கோ' எனும் பார் உரிமையாளர் கூறுகையில், "நம்ம கடையில் என்னைக்குமே கூட்டம் இருக்கும். செவ்வாய்க்கிழமைகளில் 350-400 பேர் வரை வழக்கமாக வருவார்கள். ஆனால் இந்த செவ்வாய் அன்று 700-800 பேர் வருவார்கள், எண்ணிக்கை டபுள் ஆகும் என்று எதிர்பார்க்கிறோம்" என கூறியுள்ளார்.
அதேபோல, "நாளை வழக்கத்தை விட 3 மடங்கு அதிகமான ஆட்கள் வருவாருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை ஆர்சிபி தகுதி சுற்றில் ஜெயித்தபோதும் நன்றாக கல்லா கட்டியது. எல்லா கிளைகளிலும் ரசிகர்கள் குவிந்திருந்தனர். நாளையும் இதேபோல இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என Impresario Handmade ரெஸ்டாரன்ட்டின் வணிக மேலாளர் கூறியுள்ளார்.
ஆர்சிபி ரசிகர்களை வாடிக்கையாளர்களாக மாற்ற, ஓட்டல்கள், பார்கள், பப்புகள், தீவிரமாக வேலை பார்க்க தொடங்கியுள்ளன. பெரிய எல்இடி திரையை அமைத்து மேட்சை லைவாக ஒளிபரப்புவது, பிரபலமான கன்னட பாலங்களை ஒலிக்கவிடுவது, ஆர்சிபி டாட்டூ, முகத்தில் ஆர்சிபி வண்ணத்தை வரைதல் என பல யுக்திகளை வணிகர்கள் கையில் எடுத்திருக்கின்றனர்.
இரண்டு தளங்களில் பார் வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், "8க்கு 12ft அளவுக்கு பெரிய எல்இடி டிஸ்ப்ளே வைத்து அதில் மேட்சை நாங்கள் ஒளிபரப்ப இருக்கிறோம். நாளைய தினம் சிறப்பு உணவாக 32 அங்குல பீட்சாவையும் அறிமுகப்படுத்த இருக்கிறோம்" என்றும் கூறியுள்ளார். சமீபத்தில் பீர் விலை ஏறியதால் பார் வணிகம் கொஞ்ச காலமாக டல்லாகவே போய்க்கொண்டிருந்தது. இதனை நாளை நடக்கும் ஃபைனல் மேட்ச் சரி செய்யும் என்றும் எதிர்பார்ப்பதாக வணிகர்கள் கூறியுள்ளனர்.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
76 பந்துகளுக்கு பின் முதல் சிக்ஸ்.. சூர்யவன்ஷி கிட்ட சொல்லிடாதீங்க.. குஜராத்தை வெளுக்கும் ரசிகர்கள்! -
இதுக்கு பேருதான் ஆதிக்கம்.. ஆர்சிபிக்கு எதிராக 3வது முறை.. பவர்பிளேயிலேயே சுருண்ட கில் - சுதர்சன்! -
குஜராத் அணி கதை ஓவர்.. ஹேசல்வுட்டிடம் 3வது முறையாக வீழ்ந்த சுப்மன் கில்.. சைலண்ட்டான அகமதாபாத்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications