115 ஆண்டு ‛ரெக்கார்டு'காலி? காலை முதல் பெங்களூரில் கொட்டித்தீர்த்த கனமழை.. 1909க்கு பின் அதிசயம்
பெங்களூர்: பெங்களூரில் இன்று அதிகாலை முதல் பல இடங்களில் கன மழை பெய்தது (Bangalore Rain). இந்நிலையில் தான் 115 ஆண்டுகள் கழித்து 1909ம் ஆண்டு ரெக்கார்டை இன்றைய மழை காலி செய்ய வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெங்களூரில் 105.5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனால் நேற்றைய தினம் பெங்களூரில் தாழ்வான இடங்களில் மழைநீர் புகுந்தது. குடியிருப்புகள், சாலைகளை மழைநீர் சூழ்ந்து கொண்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பெங்களூரில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 105.5 மில்லிமீட்டர் மழை பெய்திருந்தது. இது கடந்த 2011ம் ஆண்டில் இருந்து பார்த்தால் மே மாதத்தில் 24 மணிநேரத்தில் அதிக மழை பெய்த ரெக்கார்டில் 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் கடந்த 2022ம் ஆண்டு மே மாதத்தில் 24 மணிநேரத்தில் 114.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

மேலும் மே மாதத்தை எடுத்து கொண்டால் இதற்கு முன்பு 1909 ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி மட்டும் 153.9 மில்லிமீட்டர் மழை பெய்தது. இன்று காலை முதல் பெங்களூரில் பல இடங்களில் கனமழை பெய்துது. காலை 9 மணிக்கு மேல் மழை விட்டுள்ளது. ஆனால் மிதமானது முதல் கனமழைக்கான மஞ்சர் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் 1909ம் ஆண்டில் தான் மே மாதத்தில் ஒரு நாளில் அதிக மழை பெய்தது என் ரெக்கார்ட் இந்த ஆண்டு உடைக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த கனமழையின் காரணமாக சில்க்போர்டு, எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் அதனை சுற்றிய பல இடங்களில் மழை வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. கார்கள், பைக்குகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மேலும் பெங்களூரில் இன்று பெய்த கனமழையின் காரணமாக காலையில் பணிக்கு சென்ற மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும் மழையின் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

இப்லூர் சந்திப்பில் இருந்து சர்ஜாபரா ரோடு, கஸ்தூரி நகரில் இருந்து டின் பேக்டரி, ஹூடி பாலத்தில் இருந்து ஹூடிசர்க்கிள் வரை, கொரகுண்டே பாளையாவில் இருந்து முத்தியம்மா சந்திப்பு வரை வாகனங்கள் மிகவும் மெதுவாக நகர்ந்து சென்றன. அதேபோல் மழை வெள்ளம் காரணமாக பெங்களூர் ஓசூர் ரோட்டில் சில்க் ரோடு முதல் ரூபேன அக்ரஹாரா வரை சாலை மற்றும் மேம்பாலம் என்பது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications