"சைக்காலஜி".. 20 முறை கிளம்பி போன மோடி.. பதறிப்போன பாஜக.. அப்போ கர்நாடகாவில் போச்சா? ட்விஸ்ட்
பெங்களூர்: கர்நாடகாவில் கிட்டத்தட்ட அங்கே ஆட்சி மாற்றம் உறுதி ஆகிவிட்டது மோடிக்கு அது தெரிந்து இருக்கிறது, என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. அங்கு மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அங்கே வேட்பாளர்களை அறிவித்து உள்ள காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி ஒன் இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், கர்நாடகா சட்டசபை தேர்தல் தீவிரமாகி வருகிறது. இந்துத்துவா சோதனைக் கூடமாக அவர்கள் கர்நாடகாவை நடத்தி வந்தனர். ஆனால் அது நடக்கவில்லை. அவர்கள் திட்டமிட்டது அங்கே நடக்கவில்லை.
அதனால் தற்காலிகமாக இதை நிறுத்தி வைத்து உள்ளனர். ஆனால் தேர்தலுக்கு பின் அவர்கள் இதை அவர்கள் மீண்டும் எடுக்கலாம். இப்போது தேர்தல் களத்தில் கள நிலவரம் காங்கிரசுக்கு கொஞ்சம் ஆதரவாக உள்ளது.
ஆனால் எதையும் கணிக்க முடியாது. பாஜக காங்கிரசை விட 10 மடக்கு பணத்தை இறக்கும். அங்கே மதம் வேலை செய்யவில்லை. மத ரீதியான மோதல் அங்கே பயன் அளிக்கவில்லை. அங்கே இஸ்லாமியர்கள் வாக்குகள் 13 சதவிகிதம் உள்ளது.
அந்த மத வாக்குகள் பிரிய வாய்ப்பு குறைவு. ஒரே கட்சிக்கு இந்த வாக்குகள் செல்லும் என்று கூறுகிறார்கள். அரசுக்கு எதிரான நிலைப்பாடு அங்கே மோசமாக உள்ளது. விலைவாசி, ஊழல் தொடங்கி பல்வேறு விஷயங்கள் மக்களுக்கு எதிராக உள்ளது.
அங்கே 70 தொகுதிகளில் இஸ்லாமியர்கள் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருக்கிறார்கள். இஸ்லாமியர்களுக்கு எதிராக அங்கே பாஜக கடுமையான வன்முறைகளை அவிழ்த்துவிட்டது. பொம்மை ஆட்சிக்கு கீழ் பாஜக அங்கே ஒரு சமூகத்தை குறி வைத்தது.
இதனால் இஸ்லாமியர்கள் இந்த முறை கண்டிப்பாக திட்டமிட்டு வாக்களிப்பார்கள். யாருக்கு வாக்களித்தால் பாஜக ஆட்சிக்கு வர மாட்டார்கள் என்பதுதான் இஸ்லாமியர்களின் திட்டமாக இருக்கும். அதனால் இஸ்லாமியர்கள் வாக்குகள் கண்டிப்பாக இந்த தேர்தலில் பாஜகவிற்கு பெரிய பின்னடைவை கொடுக்கும்.
ஆனால் எதையும் உறுதியாக சொல்ல முடியாது. அங்கே மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட அங்கே ஆட்சி மாற்றம் உறுதி. மோடிக்கு அது தெரிந்து இருக்கிறது. அதனால்தான் 20 முறை அவர் அங்கே பிரச்சாரம் செய்ய செல்கிறார்.
ஒரு மாநில தேர்தலில் 20 முறை செல்வது ஏன்? அதிலும் ஆட்சி செய்யும் மாநிலத்தில்? காங்கிரசுக்கு அங்கே ஆதரவான சூழ்நிலை நிலவி வருகிறது. காங்கிரஸ் அங்கே வெல்ல வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.
தோல்வி மனப்பான்மையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா எதிர்க்கட்சிகளும் வெளியே வர வேண்டும் என்ற நிலையை கர்நாடகா தேர்தல் ஏற்படுத்தும். தேர்தலில் தோல்வி அடைவதை விட தோல்வி மனப்பான்மையை மோடி எதிர்க்கட்சிகளுக்கு கொடுத்துள்ளார்.

அந்த தோல்வி மனப்பான்மையில் இருந்து வெளியே வருவதற்கு காங்கிரசுக்கு கர்நாடகா தேவை. சைக்காலஜி ரீதியாக கர்நாடகாவிற்கு காங்கிரஸ் வெற்றி மிக முக்கியமானது, என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications