‛கள்ளக்காதல்’ வேறொருவருடன் மனைவி வாழ்ந்தால் பராமரிப்பு தொகை உண்டா? கர்நாடகா ஐகோர்ட் பரபர தீர்ப்பு
பெங்களூர்: மனைவி இன்னொருவருடன் உறவு வைத்து அவருடன் சேர்ந்து வாழும்போது கணவர் தரப்பில் இருந்து பராமரிப்பு தொகை வழங்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த தம்பதி திருமணம் ஆகி மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கினர். இந்நிலையில் தான் அந்த பெண்ணுக்கு பக்கத்து வீட்டுக்காரருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதுபற்றி அறிந்த கணவர் கள்ளக்காதலை கைவிடும்படி தனது மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் அதனை கண்டுக்கொள்ளவில்லை. இதையடுத்து அந்த நபர் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ தொடங்கினார். கணவரால் கைவிடப்பட்ட மனைவி தான் தொடர்பில் இருக்கும் நபருடன் சேர்ந்து வாழ தொடங்கினார்.
இந்நிலையில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005 (டிவி சட்டம்) பிரிவு 12ன் கீழ் தனது வாழ்க்கைக்கான அடிப்படை செலவுகளுக்கான பராமரிப்பு தொகையை கணவரிடம் இருந்து பெற்று தர வேண்டும் என அந்த பெண் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முறையிட்டார். அதனை விசாரித்த நீதிமன்றம் கணவர் சார்பில் மாதந்தோறும் அந்த பெண்ணுக்கு பராமரிப்பு செலவாக ரூ.1,500, வீட்டு வாடகைக்கு ரூ.1,500 மற்றும் இழப்பீடாக ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து அந்த பெண்ணின் கணவர் செசன்ஸ் நீதிமன்றத்தில் முறையிட்டார். அதனை விசாரித்த நீதிமன்றம் கணவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதாவது பராமரிப்பு தொகையாக மனைவிக்கு வழங்க வேண்டிய பணத்தை கொடுக்க வேண்டாம் என தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து செசன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மனைவியான அந்த பெண்ணின் சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ராஜேந்திர பதாமிகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், ‛‛மனுதாரரான மனைவி தனது கணவருக்கு உண்மையாக இல்லை. அவர் பக்கத்து வீட்டுக்காரருடன் திருமணத்துக்கு புறம்பான உறவில் உள்ளார். தற்போது அவருடனே வசித்து வருகிறார் என்பது ஆதாரங்கள் மூலம் தெரியவருகிறது. மனுதாரர் இன்னொருவருடன் வசிக்கும்போது அவர் பராமரிப்பு தொகை கோருவதற்கான கேள்வி என்பது எழவே எழாது.
மேலும் திருமணம் முடிந்துவிட்டது என்பதற்காகவும், மனைவி என்பதற்காகவுமே ஒருவர் பராமரிப்பு தொகை பெற தகுதியுடைவராக முடியாது'' எனக்கூறிய நீதிபதி செசன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உறுதி செய்தார். அதோடு பராமரிப்பு தொகை கோரிய அந்த பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதுமட்டுமின்றி மனைவி தாக்கல் செய்த மனுவில், தனது கணவர் உறவினரின் மகளுடன் தகாத உறவில் இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். இதுபற்றி கருத்து தெரிவித்த நீதிமன்றம், தன்னை நேர்மையானவர் என காட்டுவதற்காக கணவர் மீது ஆதாரமின்றி குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications