கர்நாடகா கனகபுரா சர்ச்சை-குமாரசாமி,டிகே சிவகுமார் இடையே கடும் மோதல்! ‘ஒக்கலிகா’ சதி என பாஜக புகார்!1
பெங்களூர்: ராம்நகர (ராம்நகர்) மாவட்டத்தில் உள்ள கனகபுராவை பெங்களூர் மாவட்டத்துடன் இணைப்போம் என்ற துணை முதல்வர் டிகே சிவகுமாரின் கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
ராம்நகர மாவட்டத்தில் கனகபுரா பகுதி உள்ளது. பெங்களூர் ரூரல் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ராம்நகர மாவட்டம் 2007-ல் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் ராம்நகர, சன்னபட்டன, கனகபுரா, மாகடி ஆகிய வட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

தற்போது ராம்நகர மாவட்டத்தின் கனகபுர பகுதியை பெங்களூர் மாவட்டத்துடன் மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறியுள்ளார். இதற்கு மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி, பாஜகவின் யோகேஷ்வர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒக்கலிகா சதி: இது தொடர்பாக பாஜகவின் யோகேஷ்வர் கூறுகையில், ராம்நகர் மாவட்டம் தற்போது சரியான நிர்வாக அமைப்பைக் கொண்டிருக்கிறது. நாங்கள் அனைவரும் பெங்களூர்வாசிகள்தான். பெங்களூர் பெருநகரம் வளர்ந்த காரணத்தால் ராம்நகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. கனகபுரா, ராம்நகர் மாவட்டத்தில் இருப்பதால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. துணை முதல்வர் டிகே சிவகுமார், கட்டுமான தொழிலில் இருப்பதால் அதற்காக கனகபுராவை பெங்களூர் மாவட்டத்தில் சேர்க்க விரும்புகிறார். அதேபோல ஒக்கலிகா ஜாதியினரை ஒருங்கிணைத்து அதிகாரத்தை கைப்பற்ற பெங்களூர் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என டிகே சிவகுமார் நினைத்திருக்கலாம் என்றார்.

ஏழு ஜென்மம் ஆனாலும்: கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறுகையில், ராமநகர் மாவட்டத்தை யாராலும் பிரிக்க முடியாது; ஏழு ஜென்மம் எடுத்தாலும் அது நடக்காது. அப்படி எல்லாம் கனகபுராவை பெங்களூர் மாவட்டத்தில் மீண்டும் சேர்த்தால் மக்கள் கிளர்ச்சி உருவாகும். கனகபுரா மக்களுக்கு யார் நல்லது செய்தார்கள் என்பது அந்த மக்களுக்குதான் தெரியும் என்றார்.
அறிவே இல்லை: இதனை நிராகரித்துள்ள கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், குமாரசாமிக்கு அறிவு என்பதே இல்லை; அவரது தந்தை தேவகவுடாவிடம் இருந்து கொஞ்சமாவது அறிவை பெற்றிருக்க வேண்டும். ராம்நகர் மாவட்ட மக்கள் தங்கள் நிலத்தை விற்க வேண்டாம். அங்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது என்றார். இந்த விவகாரத்தில் தம்மிடம் டிகே சிவகுமார் ஆலோசனை நடத்தவில்லை என முதல்வர் சித்தராமையா அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications