பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேவகவுடா குடும்பத்துக்கு குட்பை சொன்ன ‘கவுடா’க்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections 2019: படுதோல்வியைத் தழுவிய ஐக்கிய ஜனதா தளம்- வீடியோ

    மாண்டியா: லோக்சபா தேர்தலில் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளத்தின் கோட்டையாக கருதப்பட்ட மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் இம்முறை அக்கட்சி படுதோல்வியைத் தழுவியுள்ளது.

    லோக்சபா தேர்தலில் காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. காங்கிரஸ் 20 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 8 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

    தேவகவுடாவையே சாய்ச்சிபுட்டாங்க.. குமாரசாமி மகன் நிலை பரிதாபம்.. பெங்களூர் மத்தியை பறிகொடுத்தது பாஜக தேவகவுடாவையே சாய்ச்சிபுட்டாங்க.. குமாரசாமி மகன் நிலை பரிதாபம்.. பெங்களூர் மத்தியை பறிகொடுத்தது பாஜக

    கை கொடுக்காத கூட்டணி

    கை கொடுக்காத கூட்டணி

    கூட்டணி என்பதால் எளிதில் வெல்ல முடியும் என இரு கட்சிகளும் கணக்குப் போட்டன. ஆனால் தேர்தல் களத்தில் அது கை கொடுக்கவில்லை.

    படுதோல்வி முகம்

    படுதோல்வி முகம்

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா மட்டும் ஹாசன் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். மாண்டியாவில் தேவகவுடாவின் மற்றொரு பேரனும் முதல்வர் குமாரசாமியின் மகனுமாகிய நிகில் குமாரசாமி அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் சுமலதா அம்பரீஷூடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸில் சீட் கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்ட சுமலதாவுக்கு பாஜக ஆதரவு அளித்தது.

    தோற்கும் தேவகவுடா

    தோற்கும் தேவகவுடா

    தும்கூரில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் பின்னடைவை சந்தித்துள்ளார். கர்நாடகத்தின் பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான ஒக்கலிகா கவுடாக்கள்தான் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வாக்கு வங்கியாக இருந்து வருகின்றனர்.

    வாக்கு வங்கி எங்கே?

    வாக்கு வங்கி எங்கே?

    ஆனால் இம்முறை அந்த வாக்கு வங்கியும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு முழுமையான ஆதரவைத் தரவில்லை. இதனால் படுதோல்வியை சந்தித்து வருகிறது மதச்சார்பற்ற ஜனதா தளம்.

    English summary
    Karnataka's Ruling coalition partners Congress and JDS facing trails in Loksabha Elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X