பெங்களூர் பாஜக எம்எல்ஏவை கொல்ல சதி! கைமாறிய 2 கோடி! சிக்கிய சிறுவன்.. பரபரப்பு
கர்நாடக பாஜக எம்எல்ஏ சதீஷ் ரெட்டியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளார்கள்.
பெங்களூரு: கர்நாடக மாநில பாஜக எம்.எல்.ஏ சதீஷ் ரெட்டியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை அம்மாநில போலீசார் கைது செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொம்மனஹல்லி எம்.எல்.ஏவான சதீஷ் ரெட்டியை கொலை செய்வதற்கு 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கர்நாடகா மாநிலம் பொம்மனஹல்லி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சதீஷ் ரெட்டி. இவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக அவரது உதவியாளர் ஹரிஷ் பாபு என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார்.
அந்த புகாரில் வில்சன் கார்டன் பகுதியை சேர்ந்த நாகா என்ற ரவுடி, சித்ரதுர்காவை சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட சிலர் எம்.எல்.ஏ. சதீஷ் ரெட்டியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக பிப்ரவரி 3 ஆம் தேதி புகார் கொடுத்து உள்ளார்.

கொலை செய்ய ரூ.2 கோடி
தனக்கு அறிமுகமான சந்துரு என்ற நபர், எம்.எல்.ஏ சதீஷ் ரெட்டியை கொலை செய்வதற்கு 2 கோடி பேசப்பட்டதாக தன்னிடம் தெரிவித்தார் என தன்னுடைய புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்து ஹரிஷ் தெரிவிக்கையில்,
"சந்துருவுக்கு இந்த விவகாரம் அவரது நண்பர் பைரேஷ் மூலமாக தெரிந்து இருக்கிறது.

பகிரப்பட்ட ஆடியோ
பைரேஷ்தான் இதில் 17 வயது சிறுவனின் தலையீடும் இருப்பதாக கூறி உள்ளார். அந்த சிறுவனும் வெளிப்படையாக சந்தேகிக்கப்படும் நபரான ரவுடி நாகாவின் படத்தை அனுப்பி உள்ளார். பைரேஷ் தன்னிடம் பேசிய உரையாடலின் ஆடியோவையும் சந்துரு பகிர்ந்து உள்ளார். இதனை தொடர்ந்து வில்சன் கார்டன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

சிறுவன் உள்ளிட்டோர் கைது
சித்ரதுர்காவை சேர்ந்த 17 வயது சிறுவன் மீது கொலை மிரட்டல் பிரிவிலும், கொலை செய்ய சதித்தட்டம் தீட்டிய பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த சிறுவனையும் ஹோல்காரே பகுதியை சேர்ந்த கிரிஷ் என்பவரையும் காவல்துறை கைது செய்து பெங்களூருவுக்கு அழைத்து வந்து உள்ளது. முதல் கட்டமாக அவர்கள் மீது NCR பதிவு செய்த காவல்துறை நீதிமன்ற அனுமதியுடன் FIR பதிவு செய்து இருக்கிறது.

எம்.எல்.ஏ. பேட்டி
இதுகுறித்து கர்நாடக தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ. சதீஷ் ரெட்டி, "கர்நாடகாவில் நான் இதுவரை இதுபோன்ற பழிவாங்கல் அரசியலை பார்த்தது கிடையாது. எனக்கு எந்த பயமும் இல்லை. நான் யாருக்கும் தொந்தரவு செய்தது கிடையாது. போலீசார் நல்ல முறையில் விசாரணை செய்கிறார்கள். அவர்களுக்கு நான் உரிய ஒத்துழைப்பை வழங்குவேன்.

உள்துறை அமைச்சர் பேட்டி
கர்நாடக முதலமைச்சரிடமும் இந்த விசயத்தை தெரிவித்து உள்ளேன். நான் மக்களுடன் நெருக்கமாக இருப்பவன். நான் பாதுகாவலர்களுடன் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்ல மாட்டேன். நான் எந்த கட்சி மீதும் குறைகூற விரும்பவில்லை. போலீசார் விசாரணை முடியும் வரை காத்திருக்கிறேன்." என்றார். இதுகுறித்து பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, "பாஜக எம்.எல்.ஏவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக 3 பேரை காவல்துறை கைது செய்து உள்ளது." என்றார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்'












Click it and Unblock the Notifications