13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அவமானத்தில் கபடி பயிற்சியாளர் தற்கொலை!
பெங்களூர்: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளான கபடி பயிற்சியாளர் ருத்ரப்பா ஹோசாமனி அவமானம் தாளாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் மூத்த கபடி பயிற்சியாளராக இருந்தவர் ருத்ரப்பா ஹோசாமனி (59). உடை மாற்றும் அறைக்கு வந்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 9-ஆம் தேதி பெற்றோரிடம் இவர் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் திரண்டு வந்து ருத்ரப்பாவை கடுமையாக தாக்கினர். இதையடுத்து சிறுமி சார்பில் போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டது. இதனால் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.
[டுபாக்கூர் சாமியாரைப் பிடிக்க வந்த இடத்தில் கும்மாங்குத்து வாங்கிய போலீ்ஸ்.. வேலூரில் கலகல!]

தற்கொலை
இதையடுத்து அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்தார். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து நேற்று அவர் தங்கினார். அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வரவில்லை
ஹோட்டலை விட்டு வெளியே வராததாலும் கதவு திறக்கப்படாததாலும் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் கதவை உடைத்து சென்று பார்த்த போது ருத்ரப்பா இறந்து கிடந்தது தெரியவந்தது.

தானம்
ருத்ரப்பா தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்து கடிதம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றினர். அதில் தற்கொலை செய்வதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் இப்போது யார் உதவியும் இல்லாமல் உள்ளேன். அதனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. மனைவியை நன்கு பார்த்துக் கொள்ளுமாறு மகளுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

விசாரணை
தனது உடலை மருத்துவமனைக்கு தானம் செய்துவிடுமாறும் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். எனினும் அழுகிய நிலையில் ருத்ரப்பாவின் உடல் மீட்கப்பட்டுள்ளதால் தானம் செய்வது கடினம் என தெரிவித்துள்ள போலீஸார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications