சிவராஜ் குமாருக்கு சங்கடம்.. கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் கிடையாது.. கமல்ஹாசன் கடிதம்!
பெங்களூர்: கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் கிடையாது என்று நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் எழுதியுள்ளார். நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நோக்கத்திலேயே பேசியதாக கூறியுள்ள கமல்ஹாசன், கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட மக்கள் மீது மிகுந்த மரியாதை இருப்பதாகவும் கூறியுள்ளார். தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தம் அளிப்பதாக கூறிய கமல்ஹாசன், பொது அமைதியின்மை, விரோதத்திற்கு ஒருபோதும் நான் இடம் கொடுக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், தமிழில் இருந்து பிறந்ததே கன்னடம் என்று கூறி இருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்து கர்நாடகாவில் கடுமையான எதிர்ப்பை சந்தித்தது. அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தக் லைஃப் படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டது.

நீதிமன்றம் சென்ற கமல்ஹாசன்
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக் லைஃப் படத்தை திரையிட அனுமதிப்போம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும், வெளியாகும் திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
உயர்நீதிமன்றம் கேள்வி
இதற்கு கர்நாடகா உயர்நீதிமன்றம், கன்னட மொழியை பற்றி பேசுவதற்கு அவர் என்ன மொழியியல் வல்லுநரா அல்லது வரலாற்று ஆய்வாளரா? உங்களின் பேச்சால் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டிருந்தால், பிரச்சனை எளிதாக முடிவுக்கு வந்திருக்கும்.. உங்களால் சிவராஜ் குமாருக்கும் பிரச்சனை.
மன்னிப்பு மட்டுமே தீர்வு
கர்நாடகாவில் சில கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்றால், நீங்கள் மன்னிப்பு கேட்டுதான் ஆக வேண்டும். கமல்ஹாசன் பேசிய கருத்தை திரும்ப பெற முடியாது. அதனால் மன்னிப்பு ஒன்றுதான் தீர்வு என்று கூறினர். இதன்பின் வழக்கு பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் கமல்ஹாசன் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
கமல்ஹாசன் கடிதம்
இந்த நிலையில் கர்நாடகா வர்த்தக சபைக்கு கமல்ஹாசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தம் அளிக்கிறது. சிவராஜ் குமாரை வரவேற்பதற்காக கூறிய வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நோக்கத்திலேயே பேசினேன்.
கன்னட மொழி மீதான அன்பு
அதில் கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எந்த எண்ணமும் கிடையாது. கன்னட மொழியின் வளமான பாரம்பரியம் குறித்து எந்த சர்ச்சையோ, விவாதமோ கிடையாது. கன்னட மக்களின் மொழி மீதான அன்பின் மீது மிகுந்த மரியாதை உள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட அத்தனை மொழிகளின் மீதான பந்தம் உணர்வுப்பூர்வமானது.
சிவராஜ் குமாருக்கு சங்கடம்
நான் சினிமாவின் மொழியை அறிவேன். சினிமா எப்போதும் அன்பையும், பிணைப்பையும் மட்டுமே கொடுக்கும். என் மீதான அன்பினால் மட்டுமே சிவராஜ் குமார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அதற்காக சிவராஜ் குமார் சங்கடங்களையும், நெருக்கடியையும் அனுபவிக்க நேர்ந்தது வருத்தம் அளிக்கிறது. எங்கள் இடையில் உண்மையான அன்பும், மரியாதையும் எப்போதும் இருக்கும்.
தவறான புரிதல்
சினிமா மக்களுக்கு இடையிலான பாலமான இருக்க வேண்டுமே தவிர, அது மக்கள் பிரிக்கும் சுவராக இருக்க கூடாது. அதுதான் என் நோக்கமும். பொது அமைதியின்மை மற்றும் விரோதத்திற்கு ஒருபோதும் இடம் கொடுத்தது இல்லை. இப்போதும் இடம் கொடுக்க விரும்பவில்லை. இந்த தவறான புரிதல் தற்காலிகமானது என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications