காதலியை கிண்டல் செய்த நபர்.. கொன்று நாய்க்கு இரை.. கன்னட ஹீரோ "டி பாஸ்" தர்ஷன் கைது.. ஷாக்
பெங்களூர்: கொலை வழக்கு தொடர்பாக கன்னட நடிகர் "டி பாஸ்" தர்ஷன் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளார்.
நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பிய ரேணுகா சுவாமி என்ற நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சித்ரதுர்காவை சேர்ந்த ரேனுகா சுவாமி சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். உயிரிழந்த ரேணுகா சுவாமி, சித்ரதுர்காவை சேர்ந்த மெடிக்கல் ஷாப்பில் பணிபுரிந்து வந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு நகர கமிஷனர் பி தயானந்தா, "ஜூன் 9-ம் தேதி இந்த கொலை நடந்தது. இந்த வழக்கில் பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் தர்ஷன் காவலில் வைக்கப்பட்டுள்ளார். விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும். இறந்த ரேணுகா சுவாமிக்கு வயது 33. மேலும் விசாரணைக்குப் பிறகே கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க முடியும்" என்றார்.
மைசூரில் இன்று காலை 8.30 மணியளவில் விஜயநகர் ஏசிபி சாந்தனால் தர்ஷன் கைது செய்யப்பட்டார். அவர் படப்பிடிப்புக்காக மைசூருவில் உள்ள ராடிசன் ப்ளூ பிளாசா ஹோட்டலில் இருந்தார்.
தர்ஷனின் பவுன்சர்கள் ரேணுகா சுவாமியை அவர் முன்னிலையில் கொன்று, அவர் வசிக்கும் காமாட்சி பாளையத்தில் உடலை அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சடலம் கண்டுபிடிக்கப்பட்டபோது, அதை நாய்கள் தின்று கொண்டிருந்தன. அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த காவலாளி இதை பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய தொடக்க கட்ட விசாரணையில், ரேணுகா சுவாமி சமூக வலைதள கணக்கு ஒன்றின் மூலம் பவித்ரா கவுடா என்ற நடிகைக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்தார்.
இதையடுத்து போலீசார் பவித்ரா கவுடாவின் சமூக ஊடக கணக்குகளை சோதனை செய்தனர். அதில் அவர் பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பியது தெரியவந்தது. முன்னதாக, பவித்ரா கவுடாவுடன் தர்ஷனுக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின. இருவருக்கும் இடையில் திருமணம் தாண்டிய உறவு இருந்ததாகவும் கூறப்பட்டது.
முக்கியமாக கன்னட நடிகர் தர்ஷனின் மனைவி விஜய லட்சுமி, பவித்ரா கவுடாவை விமர்சனம் செய்து இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றையும் போட்டு இருந்தார். இருவருக்கும் உறவு இருப்பதை விமர்சனம் செய்யும் வகையில் போஸ்ட் செய்தார்.
பவித்ராவும் தர்ஷனும் 10 வருடங்களாக திருமண உறவை தாண்டி காதலித்து வந்தனர். நவம்பர் 2024 இல், பவித்ரா தனது மகள் குஷியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார், அங்கு தர்ஷன் அவருடன் கேக் வெட்டி அவருடன் நடனமாடுவதைக் காணலாம்.
இப்படிப்பட்ட நிலையில்தான் பவித்ராவிடம் இணையத்தில் தவறாக பேசிய ரேணுகா சுவாமி கொலை செய்யப்பட்டு உள்ளார். சடலம் கண்டுபிடிக்கப்பட்டபோது, அதை நாய்கள் தின்று கொண்டிருந்தன.
தர்ஷனின் பவுன்சர்கள் ரேணுகா சுவாமியை அவர் முன்னிலையில் கொன்று, அவர் வசிக்கும் காமாட்சி பாளையத்தில் உடலை அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த காவலாளி இதை பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலை நடந்து உள்ளது.












Click it and Unblock the Notifications