சீரியல் நடிகர் ஆர்யன் திடீர் மூளைச்சாவு.. பிறந்தநாளில் பிரிந்த உயிர்.. கேக் வெட்டி உறுப்புகள் தானம்
பெங்களூர்: கர்நாடகாவில் சீரியல் நடிகர் ஆர்யன் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கினார். பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார். தனது பிறந்தநாளிலேயே அவர் மூளைச்சாவு அடைந்ததால் அவரது கையால் கேக் வெட்டி உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானமாக கொடுத்தது அனைவரையும் கண்கலங்க வைத்தது.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கனககிரியை சேர்ந்தவர் ஆர்யன் (வயது 22). இவர் கன்னட மொழியில் வெளியாகும் சீரியல்களில் நடித்து வருகிறார். பெங்களூரில் தங்கியிருந்தார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் ஹாசனுக்கு சென்றார். அங்கு எதிர்பாராத விதமாக அவர் விபத்தில் சிக்கினார். மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவர் விபத்தை சந்தித்தார்.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஆர்யன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஹாசனில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக பெங்களூர் கொண்டு வரப்பட்டார். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு பிறந்தநாள் ஆகும். இதனால் எப்படியும் அவர் மீண்டு வருவார் என்று குடும்பத்தினர் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் அன்றைய தினம் டாக்டர்கள் சொன்ன தகவல் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
அதாவது பிறந்தநாளன்று ஆர்யன் உடல்நலம் மோசமானது. அவர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். இருப்பினும் அவரது பிறந்தநாளை கொண்டாட பெற்றோர், குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து கேக் வாங்கி வந்து அவரது கையை வைத்து வெட்டி பிறந்தநாள் கொண்டாடி பிரியா விடை அளித்தனர். ஆர்யனின் கையை பிடித்து பெற்றோர்கள் கேக் வெட்டி கதறி அழுதனர்.
மேலும் மகன் இனி மீண்டும் வரப்போவது இல்லை என்பதை அறிந்த பெற்றோர், அவரது உடல் உறுப்புகளை தானம் வழங்க ஒப்புக்கொண்டனர். இதையடுத்து டாக்டர்கள் ஆர்யனின் உடல் உறுப்புகளை தானமாக பெற்று பிற மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு ஆர்யன் உடல் பெங்களூரில் இருந்து கொப்பல் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான கனககிரிக்கு எடுத்து சென்று இறுதி சடங்குகள் நடத்தி அடக்கம் செய்யப்பட்டது. இது அனைவரையும் கலங்க வைத்தது.
-
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications