"வேண்டாம் சார் விட்ருங்க".. கெஞ்சிய மாணவி.. சீரழித்து கொடூரமாக கொன்ற டியூஷன் மாஸ்டர்!
பெங்களூர்: டியூஷனுக்கு சென்ற 10 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, ஆசிரியர் ஒருவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மாலவல்லி பகுதியைச் சேர்ந்தவர் காந்தராஜ் (51). அந்தப் பகுதியில் கணக்கு டியூஷன் நடத்தி வருகிறார். அவரது வீட்டின் மொட்டை மாடியில் உள்ள ஒரு அறையில் டியூஷன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
கணக்கு பாடம் சொல்லி தருவதில் நல்ல பெயர் பெற்றவரான காந்தராஜிடம் ஏராளமான பிள்ளைகள் டியூஷன் படித்து வருகின்றன. காலை முதல் இரவு வரை ஷிப்ட் முறையில் மாணவ- மாணவிகள் டியூஷனுக்கு வந்து சென்றனர்.

பள்ளிக்கு வராத மாணவி
இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமி ஒருவர், கடந்த ஒரு மாதமாக காந்தராஜிடம் டியூஷன் பயின்று வந்துள்ளார். அவர் தினமும் காலை 6 மணிக்கு டியூஷன் செல்வது வழக்கம். அங்கு டியூஷன் முடித்துவிட்டு நேரடியாக பள்ளிக்கு செல்வதை அந்த சிறுமி வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை காலையும் எப்போதும் போல அந்த மாணவி டியூஷன் வகுப்புக்கு சென்றிருக்கிறார். இந்த சூழலில், பிற்பகல் 11 மணியவளில் பள்ளியில் இருந்து சிறுமியின் தாய்க்கு ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் வந்திருந்தது. அதில் உங்கள் மாணவி பள்ளிக்கு வரவில்லை. உடல்நிலை சரியில்லையா? எனக் கேட்கப்பட்டிருந்தது.

பதறிய பெற்றோர் - போலீஸில் புகார்
இதை பார்த்து பதறிப்போன அவரது பெற்றோர், சிறுமி காணாமல் போனது குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, டியூஷன் ஆசிரியர் காந்தராஜிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், டியூஷன் முடிந்ததும் மற்ற மாணவிகளுடன் சேர்ந்து சிறுமியும் சென்றுவிட்டதாக கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் தோழிகளிடம் விசாரித்த போது, அவர் தன்னுடன் வரவில்லை என அவர்கள் கூறினர். இதனால் டியூஷன் ஆசிரியர் காந்தராஜ் மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்தது.

கொடூரக் கொலை - டியூஷன் மாஸ்டர் வாக்குமூலம்
பின்னர், அவரிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கினர். அப்போது, சிறுமியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக அவர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலம்: ஒரு மாதத்துக்கு முன்புதான் அந்த சிறுமி என்னிடம் டியூஷன் வந்தார். சிறுமியை பார்த்ததும் எனக்கு அவரை அடைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் அதற்கான சூழல் அமையவில்லை. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை காலை அனைத்து மாணவர்களும் புறப்பட்ட பிறகு, தாமதமாகவே அந்த சிறுமி புறப்பட்டார். இதனை வாய்ப்பாக பயன்படுத்தி, சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றேன். ஆனால், அவர் பயங்கரமாக கூச்சலிட்டார். இதனால் அவரது வாயில் துணியை வைத்து அடைத்து பலாத்காரம் செய்தேன். பின்னர், இந்த விஷயம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அவரை பக்கத்து இடத்தில் புதிதாக கட்டி வரும் கட்டிடத்தின் கிணற்றில் போட்டுவிட்டேன். இவ்வாறு காந்தராஜ் கூறினார்.

கைது - போராட்டம்
இதன்பேரில், போலீஸார் அந்தப் பகுதிக்கு சென்று கிணற்றில் இருந்து சிறுமியின் உடலை மீட்டு, பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த ஆசிரியர் காந்தராஜ் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழே போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், ஆசிரியர் காந்தராஜுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என வலியறுத்தி மாண்டியாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாண்டியா பகுதி முழுவதும் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications