ஆண்களுக்கு சேலை கட்டி... கர்நாடகாவில் 100 நாள் வேலை.. பார்க்க பார்க்க வித்தியாசம்.. பாய்ந்த ஆக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகாவில் நடந்த ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் சேலை அணிந்து ஆண்கள் போஸ் கொடுத்துள்ளார்கள்.. இந்த போட்டோவை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.. இதனால், உண்மையில் வேலை அவசர தேவையாக உள்ள பெண் பணியாளர்களும் இதனால் ஏமாற்றப்பட்டும் உள்ளனர். இதுபற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று சம்பந்தப்பட்ட அதிகாரி விளக்கம் தந்திருந்தார். ஆனாலும் இந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், வேலை தேடி வெளியூர் செல்வதை தவிர்ப்பதற்காகவும், மத்திய அரசு, மஹாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது..

100 நாள் திட்டம்

இதில், ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கப்படும். எனவே இதனை 100 நாள் திட்டம் என்று பொதுமக்கள் சுருக்கமாக அழைக்கிறார்கள்.. நாள் ஒன்றுக்கு 349 ரூபாய் வழங்கப்பட்டு வந்த கூலித்தொகை நடப்பாண்டு கடந்த 1 முதல், 370 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், கர்நாடகாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், யாத்கீர் மாவட்டத்தில், மல்தார் கிராமத்தில் சன்னலிங்கப்பா என்பவரின் பண்ணை அருகில் கால்வாய் அமைக்கும் பணி நடந்துள்ளது.. அங்கு ஆண்கள், பெண்கள் என பலரும் ஈடுபட்டிருந்தனர்..

போட்டோ இணையத்தில் பரவியது

இந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குழு போட்டோவானது, தேசிய கண்காணிப்பு அமைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த படத்தை பார்த்த அதிகாரிகள், சேலை அணிந்திருந்த 4 பெண்களின் தோற்றத்தில் வித்தியாசம் இருந்ததை கவனித்திருக்கிறார்கள்.. அதனை உற்றுப்பார்த்தபோதுதான், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அந்த 4 பேருமே சேலை உடுத்தியிருந்த ஆண்கள் ஆவர்.

பெண்களும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பொய்யாக காட்டியிருக்கின்றனர். சேலை கட்டி, பெண்கள் போன்று உடையணிந்து இந்த திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டு, ரூ.3 லட்சம் வரை ஆண்கள் பலன்களை பெற்றுள்ளனர் என்பது தற்போது அம்பலமாகி அதிர்ச்சியை தந்துள்ளது. நடப்பு ஆண்டின் பிப்ரவரியில் இந்த மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியால் அரசுக்கு நிதியிழப்பு ஏற்பட்டு உள்ளது.

கிராமத்தின் பஞ்சாயத்து வளர்ச்சி

அதுமட்டுமல்ல, வேலை அவசர தேவையாக உள்ள உண்மையான பெண் தொழிலாளர்களும் இதனால் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.. ஆனால், இந்த குற்றச்சாட்டை மல்ஹார் கிராமத்தின் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி சென்னபசவா மறுத்திருந்தார்..

"எனக்கும் இந்த விவகாரத்தில் எனக்கு எந்த பங்கும் இல்லை. ஏற்கனவே ஒரு அவுட்சோர்ஸ் ஊழியர் இப்படி செய்தபோது, அது என்னுடைய கவனத்துக்கு வந்தது.. உடனே அந்த ஊழியரை நான் சஸ்பெண்ட் செய்துவிட்டேன். இப்போது இந்த கிராமத்தில் MGNREGA பணிகள் தடையின்றி நடந்து வருகின்றன. இதுவரை நாங்கள் 2,500 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியுள்ளோம்" என்று விளக்கம் தந்திருந்தார்..

வேலைவாயப்பு திட்ட பணம்

எனினும், ஆண்கள் சேலை கட்டி வேலை பார்த்த போட்டோ இணையத்தில் வேகமாக பரவி பலருக்கும் அதிர்ச்சியை தந்தது.. ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணத்தில் மோசடி நடந்ததா என்ற விவாதத்தையும் எழுப்பியது.

இந்நிலையில், மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி லாவிஷ் ஓராடியா சொல்லும்போது, ''இந்த சம்பவம் பிப்ரவரியில் நடந்துள்ளது. இது தொடர்பாக வந்த புகாரையடுத்து விசாரணை நடத்தப்பட்டது.. முறைகேட்டில் ஈடுபட்ட பஞ்சாயத்து அதிகாரி வீரேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நரேகா திட்டத்தின் கீழ், இதுவரை பணம் எதுவும் விடுவிக்கப்படவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+