அயோத்தி சிறப்பு ரயிலில் அலறிய பயணிகள்..தீவைத்து எரிப்பதாக மிரட்டிய 3 பேர் கும்பல்..அதிர்ந்த கர்நாடகா
பெங்களூர்: அயோத்தியில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூருக்கு திரும்பி கொண்டிருந்த சிறப்பு ரயிலில் திடீரென்று மாற்று மதத்தை சேர்ந்த 3 பேர் ஏறியதோடு, தீவைத்து ரயிலை எரிப்பதாக மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. நாகரா கட்டடக்கலை நுட்பத்தில் சிற்ப தூண்களுடன் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.

கடந்த மாதம் 22ம் தேதி மதியம் 12.15 மணி முதல் 12.45 மணிக்குள் நடந்த கும்பாபிஷேகத்தில் பிரதமர் மோடி பங்கேற்று கோவிலில் நிறுவப்பட்டுள்ள 5 வயது பால ராமர் சிலைக்கு சடங்குகள் செய்து வைத்தார். அதன்பிறகு சிலையின் கண்கள் திறக்கப்பட்டது. தற்போது பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள இந்த 5 வயது பால ராமர் சிலையை கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செய்துள்ளார். 51 இன்ச் உயரம் 200 கிலோ எடையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சென்று வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி கர்நாடகா மாநிலம் மைசூர்-அயோத்தி இடையே சிறப்பு ரயில் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் அயோத்தியில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் சிறப்பு ரயிலில் நேற்று மைசூருவுக்கு திரும்பி கொண்டிருந்தனர். இந்த ரயில் கர்நாடகா மாநிலம் ஒசப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது 2ம் எண் கொண்ட முன்பதிவு பெட்டியில் 3 பேர் திடீரென்று ஏறினர். இதை பார்த்த பயணிகள் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர்.
இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் ஆபாசமாக அவர்களை திட்டியது. மேலும் தங்களை எதிர்த்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். ரயிலை தீயிட்டு எரித்து விடுவோம் என மிரட்டியது. இதனால் பயந்துபோன பயணிகள் அவர்களை பிடித்து ஒசப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது அவர்கள் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
அதோடு அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரிக்காமல் அலட்சியம் காட்டியதோடு, எச்சரித்து அனுப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பயணிகள் உடனடியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என கூறினர். ஆனால் போலீசார் பயணிகளை சமாதானம் செய்து ரயிலை அங்கிருந்து புறப்பட வைத்தனர். இருப்பினும் பயணிகள் விடவில்லை. அவர்களை கைது செய்தால் தான் ரயிலை நகர விடுவோம் எனக்கூறி அவசர சங்கிலியை பிடித்து இழுத்து ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ரயில் நிலையம் வந்தனர். அவர்கள் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும் என கூறினர். அதற்கு போலீசார் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டனர். அதன்பிறகு அந்த சிறப்பு ரயில் ஒசப்பேட்டையில் இருந்து புறப்பட்டு மைசூருக்கு சென்றது. இந்த சம்பவத்தால் ஒசப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications