Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஜராத் பார்முலா வேண்டாம்.. பிறகட்சி எம்எல்ஏக்களுக்கு குறி.. கர்நாடகா தேர்தலில் கியரை மாற்றும் பாஜக

குஜராத்தை போல் அல்லாமல் கர்நாடகாவில் ஒவ்வொரு தொகுதியிலும் எம்எல்ஏக்கள் தனிப்பட்ட செல்வாக்கை வைத்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கர்நாடகா தேர்தலில் குஜராத் பார்முலாவை பயன்படுத்த பாஜக திட்டமிட்ட நிலையில் அதில் இருந்து பின்வாங்கி உள்ளதாகவும், மாறாக மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளின் எம்எல்ஏக்களை பாஜகவில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் கர்நாடகா அரசியல்களம் தேர்தல் தேதிக்கு முன்பாகவே சூடுபிடித்துள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் துவங்கி உள்ளது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் அங்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியை துவங்கி விட்டன.

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன நிலையில் தனிப்பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்றால் 113 இடங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். ஆனால் கடந்த 2018 தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பாஜக தீவிரம்

பாஜக தீவிரம்

இதையடுத்து காங்கிரஸ் -ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. அதன்பிறகு இந்த கூட்டணியில் இருந்து 15க்கும் அதிக எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவினர். இதையடுத்து கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பாஜக அதிகாரத்தை கைப்பற்றியது. தற்போது பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரசும், செல்வாக்கை நிரூபிக்கும் நோக்கத்தில் ஜேடிஎஸ், ஆம்ஆத்மி கட்சிகளும் களப்பணியை தொடங்கி உள்ளன.

குஜராத் பார்முலா

குஜராத் பார்முலா

இந்நிலையில் தான் கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்க பாஜக, குஜராத் பார்முலாவை பின்பற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதாவது குஜராத்தில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் 41 எம்எல்ஏக்களுக்கு சீட் மறுக்கப்பட்டது. தொகுதியில் அதிருப்தியை சம்பாதித்த எம்எல்ஏக்கள், வயது முதிர்வு, உடல்நல பிரச்சனையை எதிர்கொண்ட எம்எல்ஏக்களை பாஜக புறம்தள்ளியது. அவர்களுக்கு பதிலாக புதிய முகங்களுக்கு வாய்ப்பளித்தது. இது குஜராத்தில் பாஜகவுக்கு பெரிதும் கைக்கொடுத்தது.

கர்நாடகாவிலும் அமல் என தகவல்

கர்நாடகாவிலும் அமல் என தகவல்

அதன்படி குஜராத்தில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் அக்கட்சியின் சாதனை பயணம் இந்த தேர்தலிலும் தொடர்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், ஆம்ஆத்மி கட்சி 5 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதனால் குஜராத் மாநிலத்தை போல் ஏராளமான சிட்டிங் எம்எல்ஏக்கு கர்நாடகாவிலும் பாஜகவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

பின்வாங்கிய பாஜக

பின்வாங்கிய பாஜக

அதன்படி உள்கட்சி சர்வேயில் வெற்றி வாய்ப்பு இல்லாதவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என கூறப்பட்டது. பாஜகவுக்கு தற்போது சபாநாயகர் உள்பட 118 பேர் எம்எல்ஏக்களாக உள்ள நிலையில் சுமார் 39 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்ற தகவல்கள் பரவின. இந்நிலையில் தான் குஜராத் மாடைலை கர்நாடகா தேர்தலில் அமல்படுத்துவதில் இருந்து பாஜக பின்வாங்கி உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

அதாவது குஜராத் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமாகும். அங்கு அதிருப்தி வந்தாலு் அதனை இருவரும் சமாளித்து விடுவார்கள். மேலும் இருவருக்கும் மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதியின் களநிலவரமும் இருவருக்கும் தெரியும். இதுதான் அங்கு பாஜகவுக்கு கைக்கொடுத்தது. ஆனால் கர்நாடகா என்பது வேறு. இங்கு ஆளும் பாஜக அரசு மீது தற்போது பல ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் பல கருத்து கணிப்புகள் காங்கிரசுக்கு சாதகமாக உள்ளன. பாஜகவின் உள்கட்சி சர்வேயும் கூட தேர்தலில் கடந்த முறையை விட வெற்றி இடங்கள் குறையும் என தெரிவித்து இருந்தது. இதனால் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தால் இது இன்னும் கூட அதிருப்தியை அதிகரிக்கலாம் என பாஜக கருதுகிறது.

தனிப்பட்ட செல்வாக்கு

தனிப்பட்ட செல்வாக்கு

மேலும் கர்நடாகாவில் ஒவ்வொரு தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தங்களுக்கு என்று தனி செல்வாக்கையும், ஓட்டு வங்கியையும் வைத்துள்ளதாகவும், மாநிலம் முழுவதும் மொத்தம் 120 தொகுதிகளில் தனிப்பட்ட செல்வாக்கு தேர்தல் வெற்றியை நிர்ணயம் செய்திருப்பதாக பாஜகவுக்கு தகவல் சென்றிருக்கிறது. இதனால் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தால் அவர்கள் தாராளமாக வேறு கட்சிகளுக்கு செல்வார்கள். இது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். மேலும் கர்நாடகாவில் 2வது முறையாக ஆட்சியை பிடிக்க முடியாமல் போகும் நிலை உருவாகும் என அக்கட்சியினர் நினைக்கின்றனர். இதனால் மாநிலத்தில் தற்போது பாஜகவில் எம்எல்ஏக்களாக உள்ள பலருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்றே கூறப்படுகிறது.

 குறைந்த அளவில் மாற்றம்

குறைந்த அளவில் மாற்றம்

இருப்பினும் கூட பாஜக ஒவ்வொரு தேர்தல்களிலும் புது முகங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குவதையும், புதிதாக அமையும் அமைச்சரவையில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. இது கர்நாடகா தேர்தலிலும் நடக்கலாம். இருப்பினும் குஜராத்தை போல் 41 எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது போல் இல்லாமல் அதனை விட குறைந்த அளவிலான தற்போதைய சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு பதில் புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

எடியூரப்பா சொன்னது என்ன?

எடியூரப்பா சொன்னது என்ன?

இதனை தான் கர்நாடகா முன்னாள் முதல்வரும், கர்நாடகா பாஜக முகமாகவும் உள்ள எடியூரப்பா ஏற்கனே தெளிவுப்படுத்தி இருந்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛தற்போதைய எம்எல்ஏக்களில் 6 முதல் 7 எம்எல்ஏக்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்படாமல் இருக்கலாம். சிலர் 75 வயதை நெருங்குகின்றனர். சிலர் உடல் நல பிரச்சனையை சந்திக்கின்றனர். இதனால் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படலாம்'' என தெரிவித்து இருந்தார். மேலும் இவ்வாறு எம்எல்ஏக்கள் கைவிடப்பட்டாலும் கூட தொகுதி வேட்பாளர் தேர்வில் அவர்களின் ஆலோசனைகள் கேட்கப்படும். ஏனென்றால் இமாச்சல பிரதேசத்தில் 11 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் அவர்களிடம் கருத்துகள் கேட்காமல் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதனால் அவர்கள் தனித்து களமிறங்கி ஓட்டுகளை பிரித்தனர். இது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியதோடு, இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸிடம் அக்கட்சி ஆட்சியையும் பறிகொடுத்தது. இதனால் இந்த விஷயத்தை பொறுத்தமட்டில் கர்நாடகாவில் பாஜக மிகவும் கவனமாக செயல்பட உள்ளது.

பிற கட்சி எம்எல்ஏக்களுக்கு குறி

பிற கட்சி எம்எல்ஏக்களுக்கு குறி

மேலும் தேர்தலுக்கு பிற கட்சிகளில் இருந்து குறிப்பாக காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளில் இருந்து எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வந்தால் கட்சியில் சேர்த்து கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான தனியாக திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி பிற கட்சியில் இருந்து பாஜகவில் சேர்வோருக்கு மீண்டும் அதேதொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் கர்நாடகாவில் பாஜகவின் முகமாக பார்க்கப்பட்ட எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகி உள்ளார். இருப்பினும் பாஜகவுக்காக தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அரசியலில் இருந்து எடியூரப்பாவின் விலகல் என்பது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் அதிகமான சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுத்தால் அது பின்னடைவை ஏற்படுத்தலாம் என்பதால் குஜராத் மாடலை கர்நாடகா தேர்தலில் முழுமையாக பயன்படுத்துவதை பாஜக கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரதமர் மோடி, அமித்ஷா ஆர்வம்

பிரதமர் மோடி, அமித்ஷா ஆர்வம்

இருப்பினும் கூட கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த ஆண்டு மட்டும் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவுக்கு 6 முறை சென்றுள்ளார். மேலும் பிரதமர் மோடி பெங்களூர் -மைசூர் 10 வழிச்சாலை உள்பட ஏராளமான திட்டங்களை துவக்கி வைத்துள்ளார். மேலும் இந்த மாதத்தில் பிரதமர் மோடி இன்னும் 2 முறை கர்நாடகாவுக்கு விசிட் அடிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் மாநிலம் முழுவதும் நடக்கும் விஜய சங்கல்ப யாத்திரையின் பேரணிகளை முடித்து மார்ச் 25ல் தாவணகெரேயில் பெரிய பொதுக்கூட்டம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக மார்ச் 19 அல்லது 21ல் அரசு நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் பிரதமர் மோடி கர்நாடகா செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 23, 24 என 2 நாள் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதோடு , பாஜக தலைவர் ஜேபி நட்டாவும் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் பாஜக மேலிடம் கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியோடு உள்ளது. இதனால் தேர்தலில் கட்சிக்கு மைனஸாக மாறக்கூடிய முடிவுகளை அக்கட்சி கைவிடும் வகையில் குஜராத் மாடலை புறம்தள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+