கர்நாடகா தேர்தல்: பாஜகவுக்கு செம்ம ஆப்பு வைக்கப் போகிறாரா புதுகட்சி தொடங்கிய ஜனார்த்தன ரெட்டி!
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் புதிய திருப்பமாக சுரங்க மாஃபியா ஜனார்த்தன ரெட்டி புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உள்ளார். ஹைதராபாத் கர்நாடகா அல்லது கல்யாண் கர்நாடகா பிராந்தியத்தில் பாஜகவின் வாக்குகளை ஜனார்த்தன ரெட்டியின் இப்புதிய கட்சி கணிசமாக பிரித்துவிடும். இது காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளுக்கு பெருமளவு சாதகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் ஆளும் பாஜகவுக்கு அவ்வளவு எளிதாக வெற்றி கிடைக்காது; போராடித்தான் ஆக வேண்டும் என்பதையே அடுத்தடுத்த நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. கர்நாடகா பாஜகவின் வாக்கு வங்கியான லிங்காயத்துகள் கூடுதல் இடஒதுக்கீடு போராடி வருகின்றனர். லிங்காயத்துகளின் இந்த திடீர் போராட்டம் பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை தரக் கூடியது என்றே கூறப்படுகிறது. பாஜகவின் உட்கட்சி பூசலின் வெளிப்பாடாக சில பாஜக மூத்த தலைவர்கலே லிங்காயத்துகளின் போராட்டத்தின் பின்னணியில் இருக்கின்றனர் என்பது தகவல்.
இதனைத் தொடர்ந்து பாஜகவுக்கு அடுத்த பேரிடியாக சுரங்க மாஃபியா ஜனார்த்தன ரெட்டி புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி இருக்கிறார்.கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா என்பதுதான் ஜனார்த்தன ரெட்டியின் புதிய கட்சியின் பெயர். கர்நாடகா அரசியலில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பேசுபொருளாக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி. மறைந்த மூத்த பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் சீடராக சுட்டிக்காட்டப்பட்டவர் ரெட்டி. 1999-ல் பெல்லாரி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து சுஷ்மா ஸ்வராஜ் போட்டியிட்டார். அப்போதைய லோக்சபா தேர்தலில் பெரும் கவனத்தைப் பெற்றது பெல்லாரி தொகுதி. அத்தொகுதியில் சுஷ்மா ஸ்வராஜின் தளபதியாக களமிறங்கி தேர்தல் பணியாற்றியவர் ஜனார்த்தன ரெட்டி. அத்தேர்தலில் சுஷ்மா ஸ்வராஜ் தோல்வி அடைந்த போதும் கணிசமான வாக்குகளைப் பெற அவர் காரணகர்த்தாவாக இருந்தார்.

2008-ம் ஆண்டு கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக வென்று எடியூரப்பா முதல்வரானார். அப்போது எடியூரப்பா அமைச்சரவையில் ஜனார்த்தன ரெட்டி இடம்பிடித்தார். இந்த காலகட்டங்களில் கர்நாடகா அரசியலில் அசைக்க முடியாத செல்வாக்கு மிக்க நபராக ஜனார்த்தன ரெட்டி விஸ்வரூபம் எடுத்தார். அதே வேகத்தில் பல்வேறு சுரங்க முறைகேடு வழக்குகளும் சரமாரியாக ஜனார்த்தன ரெட்டி மீது பாய்ந்தன. ஒரு கட்டத்தில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ரெட்டி. அப்போதே பாஜகவும் ஜனார்த்தன ரெட்டியை கைகழுவிவிட்டது. பின்னர் சிறிது காலம் அரசியல் துறவறம் போல அமைதி காத்தார் ரெட்டி.
இப்போது கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிவிட்டார் ஜனார்த்தன ரெட்டி. தாம் பாஜகவை சேர்ந்தவராகவே பொதுமக்கள் கருதுகின்றனர்; அதனை மறுக்கவும் அப்படி இல்லை என்பதை வெளிப்படுத்தவுமே புதிய கட்சி தொடங்கிவிட்டேன் என்கிறார் ஜனார்த்தன ரெட்டி. ஆனால் ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர்கள் இன்னமும் பாஜக எம்.எல்.ஏவாக, நிர்வாகியாக உள்ளனர். ஜனார்த்தன ரெட்டியின் தளபதி ஶ்ரீராமுலு, கர்நாடகா அமைச்சராகவும் இருக்கிறார்.
இந்நிலையில் ஜனார்த்தன ரெட்டி, ஹைதராபாத் கர்நாடகா அல்லது கல்யாண் கர்நாடகா பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறப்படுகிறது. இப்பகுதிகளைத்தான் ஏற்கனவே தெலுங்கானா முதல்வர் கேசிஆரும் குறிவைத்திருக்கிறார். ஜனார்த்தன ரெட்டியின் கட்சி இந்தப் பிராந்தியத்தில் கவனம் செலுத்தினால் பாஜகவின் வாக்குகள் பெருமளவு பிரியக் கூடும்; இது காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளுக்கு பெரும் ஆதாயமாக அமையும் எனவும் கூறப்படுகிறது. இப்படியான அடுத்தடுத்த நிகழ்வுகள் பாஜக தலைவர்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது என்கின்றன கள தகவல்கள்.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications