கர்நாடகா தேர்தல்: காங், 128-131 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும்- அடித்து சொல்லும் LokPoll சர்வே
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 128 முதல் 131 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றும் என LokPoll சர்வே தெரிவித்திருப்பது காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தி உள்ளது.
கர்நாடகாவின் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளிடையேதான் பிரதான போட்டி. மூன்று கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதில் பாஜகவில்தான் கலகக் குரல் பெரிதாக வெடித்திருக்கிறது.

பாஜகவின் முன்னாள் மாநில தலைவர், மாஜி முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் என பலரும் கட்சி தலைமை மீது அதிருப்தி தெரிவித்து காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். கர்நாடகாவில் பெரும்பான்மைக்கு தேவையான 113 எம்.எல்.ஏக்களை இம்முறை பாஜக பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
கர்நாடகா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளும் கூட காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும்; ஆளும் பாஜகவுக்கு தோல்விதான் கிடைக்கும் என கூறி வருகின்றன.
கர்நாடகா தேர்தல் தொடர்பாக LokPoll நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு விவரம்: கர்நாடகாவில் காங்கிரஸுக்கு 128 முதல் 131 இடங்கள் கிடைக்கும் .அதாவது காங்கிரஸ் கட்சிக்கு 42% முதல் 45% வாக்குகள் கிடைக்குமாம்.

பாஜகவுக்கு 66 முதல் 69 இடங்கள் மட்டுமே கிடைக்கும்; தேர்தலில் 30% முதல் 33% வாக்குகள்தான் பாஜகவுக்கு கிடைக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு.
ஜேடிஎஸ் கட்சிக்கு 21 முதல் 25 இடங்கள் அதாவது 15% முதல் 18% வரை வாக்குகள் கிடைக்குமாம். இதர கட்சிகளுக்கு 1 முதல் 4 இடங்கள் கிடைக்கக் கூடுமாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications