கர்நாடகா ஆளும் பாஜகவுக்கு நெருக்கடி- இடஒதுக்கீடு கோரி பஞ்சமசாலி லிங்காயத் சமூகம் பிரம்மாண்ட பேரணி!
பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் பாஜகவுக்கு நெருக்கடி தரும் வகையில் இடஒதுக்கீடு கோரி பஞ்சமசாலி லிங்காயத்துகள் பிரம்மாண்ட பேரணி நடத்தியிருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில் பாஜகவின் வாக்கு வங்கியான லிங்காயத்துகள் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்துவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் படுதீவிரமாக உள்ளன. இதில் ஜேடிஎஸ் கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையே அறிவித்தும்விட்டது.

கர்நாடகாவில் ஆளும் பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். இதனை சமாளிக்கும் வகையில் அமைச்சரவையை மாற்றி அமைப்பது தொடர்பாக பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக கர்நாடகா பாஜக தலைவர்கள் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் பஞ்சமசாலி லிங்காயத்துகள் தங்களுக்கான கல்வி,வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி பெலகாவியில் பிரம்மாண்ட பேரணியை நடத்தினர். இதில் பஞ்சமசாலி லிங்காயத்து மடாதிபதிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த கோரிக்கை நியாயமானது என முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா கூறியுள்ளார். அதேநேரத்தில் எடியூரப்பா, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எதிரான பாஜக தலைவர்களே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர்.

இதனிடையே பஞ்சமசாலி லிங்காயத்துகளுக்கான இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தி வருகிறார். கர்நாடகாவில் பாஜகவின் வாக்கு வங்கியாக லிங்காயத்து சமூகத்தினர் உள்ளனர். கர்நாடகாவின் மொத்த மக்கள் தொகையில் 17% லிங்காயத்துகள். மற்றொரு பெரும்பான்மை சமூகமான ஒக்கலிகா கவுடா வாக்குகள் காங்கிரஸ், ஜேடிஎஸ்-க்கு கிடைக்கக் கூடியவை. ஆகையால் லிங்காயத்துகளின் இந்த கோரிக்கை ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.
கர்நாடகாவில் மொத்தம் 50% இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. உயர்ஜாதியினராகிய லிங்காயத்துகளின் உட்பிரிவினர் பஞ்சமசாலி லிங்காயத்துகள். லிங்காயத்துகளில் வீர சைவ லிங்காயத்துகள் ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்டோர்) இடஒதுக்கீட்டில் பிரிவு 3B-ல் 5% இடஒதுக்கீடு பெறுகின்றனர். ஆனால் பிரிவு 2A-க்குள் தங்களை கொண்டு வந்து 15% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் பஞ்சமசாலி லிங்காயத்துகள் கோரிக்கை.
லிங்காயத்துகள் மட்டுமல்லாது ஒக்கலிகா கவுடாக்கள், மராத்தாக்கள் என பல சமூகங்களும் தற்போது இடஒதுக்கீடு அளவை அதிகரிக்க வலியுறுத்துகின்றன. இதனால் கர்நாடகா சட்டசபை தேர்தலில் இடஒதுக்கீடு பிரதான பிரச்சனையாக இடம்பெறும் என தெரிகிறது. கர்நாடகா சட்டசபையில் எஸ்சி இடஒதுக்கீட்டை 15%-ல் இருந்து 17% ஆக உயர்த்தவும் எஸ்டி இடஒதுக்கீட்டை 3%-ல் இருந்து 7% ஆக உயர்த்தவும் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இது உச்சநீதிமன்றத்தின் இடஒதுக்கீடு வரம்பான 50% என்கிற அளவை தாண்டியதாக இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் அண்மையில் 77% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்றியது.
தமிழகத்தில் மொத்தம் 69% இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. இதனையே பல மாநிலங்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு இருக்கின்றன. தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு சட்டமானது அரசியல் சாசனத்தில் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டிருப்பதால் பாதுகாப்பானதாக இருக்கிறது. இதேபோலவே ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனும் 77% இடஒதுக்கீட்டை 9-வது அட்டவணையில் சேர்க்க தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications