தேர்தல் வந்துட்டா போதுமே.. ஒக்கலிகா கவுடா ஜாதி ஓட்டுகளுக்கு குறி! கெம்பே கவுடா சிலை திறக்கும் மோடி!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில பெரும்பான்மை ஜாதியினராகிய ஒக்கலிகா கவுடா வாக்குகளுக்கு குறிவைத்து பெங்களூர் நகரத்தை நிர்மாணித்த மன்னர் கெம்பே கவுடா சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
கர்நாடகா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) ஆகிய கட்சிகள்தான் களத்தில் உள்ளன.

ஒக்கலிகா கவுடா வாக்குகள்
கர்நாடகா மாநில தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் பெரும்பான்மை ஒக்கலி கவுடா மற்றும் லிங்காயத் ஜாதி வாக்குகள் மிக முக்கியமானவை. தற்போதைய நிலையில் லிங்காயத் ஜாதி வாக்குகள் தங்கள் பக்கம் இருக்கிறது என்பது பாஜகவின் நம்பிக்கை. ஒக்கலிகா கவுடா வாக்குகளை மட்டுமே மதச்சார்பற்ற ஜனதா தளம் நம்பி வந்தது. ஆனால் அண்மைகாலமாக குறிப்பாக கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக டிகே சிவகுமார் நியமிக்கப்பட்டது முதலே ஒக்கலிகா கவுடா வாக்குகள், காங்கிரஸ் கட்சிக்கு பக்க பலமாக இருந்து வருகிறது.

பாஜக வியூகம்
கர்நாடகாவில் கடந்த 2018 சட்டசபை தேர்தலின் போதும் ஒக்கலிகா கவுடா ஜாதி வாக்குகளை குறிவைத்து பாஜக பகீரத முயற்சிகளை மேற்கொன்டது. ஒக்கலிகா கவுடா ஜாதியின் மடங்களுக்கு பாஜக தலைவர்கள் அடிக்கடி விசிட் செய்தனர். ஆனாலும் அந்த மக்கள் பாஜகவை நம்பவில்லை.

கவுடா ஜாதி வாக்குகளுக்கு குறி
2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கும் அதே பார்முலாவை பாஜக தற்போது கையில் எடுத்திருக்கிறது. ஒக்கலிகா கவுடா வாக்குகளை கவரும் வகையில் அந்த ஜாதியை சேர்ந்த பெங்களூர் நகரை நிறுவியவரான மன்னர் கெம்பே கவுடாவின் 108 அடி உயர சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பெங்களூர் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை நவம்பர் 11-ந் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது.

கர்நாடகா பாஜக அரசு மும்முரம்
இச்சிலை திறப்பு விழா தொடர்பாக ஒக்கலிகா கவுடா ஜாதியினரின் உயர்பீடமான ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமியை கர்நாடகா அமைச்சர்கள் அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பாக பல்வேறு ஒக்கலிகா கவுடா ஜாதி சங்க பிரதிநிதிகளுடனும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். முன்னதாக கெம்பே கவுடா சிலை திறப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணிக்கு கர்நாடகா மாநில அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.
-
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications