தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து.. கர்நாடக ஆளுநரும் அவையில் இருந்து வெளிநடப்பு.. என்ன நடந்தது!
பெங்களூர்: கர்நாடகச் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பெங்களூர் விதான சௌதாவில் நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இன்று அவைக்கு வந்த கவர்னர் தாவர்சந்த் கெலாட், ஆளுநர் உரையை வெறும் 2 வரிகள் மட்டுமே வாசித்தார். மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள் இருந்ததாகச் சொல்லி ஆளுநர் உரையை வாசிக்க கவர்னர் மறுத்துவிட்டு வெளிநடப்பு செய்தார்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் இன்று வியாழக்கிழமை சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பிக்கிறது. காலை 11 மணியளவில் பெங்களூரு விதான சௌதாவில் நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் தொடங்குகிறது. எப்போதும் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரை உடனேயே தொடங்கப்பட வேண்டும்.

இருப்பினும், தமிழகத்தை போலவே கர்நாடகாவிலும் ஆளுநர் உரையை தாவர்சந்த் கெலாட் வாசிக்க மாட்டார் என்றே கூறப்பட்டது. இதனால் ஆளுநர் உரை இல்லாமல் அவை நடவடிக்கையைத் தொடங்குவது குறித்து முதல்வர் சித்தாரமையா ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியானது.. இருப்பினும், இன்றைய தினம் ஆளுநர் கெலாட் அவைக்கு வருகை தந்தார்.
ஆனாலும், அவர் முழு உரையையும் வாசிக்கவில்லை. வெறுமன 3 வரிகளை மட்டுமே வாசித்துவிட்டு தனது உரையை முடித்துக் கொண்டார். மேலும், அத்தோடு அவர் சட்டசபையில் இருந்தும் வெளியேறினார். தமிழக ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறிய நிலையில், கேரள ஆளுநர் சில பக்கங்களை வாசிக்காமல் வெளியேறினார். இந்தச் சூழலில் தான் கர்நாடகா ஆளுநரும் 3 வரிகளை மட்டுமே வாசித்துவிட்டு வெளியேறி இருக்கிறார்.
ஆளுநரின் இந்த உரையில் 100 நாள் வேலைத் திட்டம் மாற்றம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டிக்கும் வரிகள் இடம் பெற்று இருந்தது. அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதைப் படிக்க ஆளுநர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஜனவரி 31 வரை இந்தக் கூட்டத்தொடரை நடத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த தொடரில் மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த விபி ஜி ராம் ஜி திட்டத்துக்கு எதிராகத் தீா்மானம் நிறைவேற்ற கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக விபி ஜி ராம் ஜி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்த நிலையில், அதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் எதிர்க்கட்சிகளும் பல்வேறு விவகாரங்களை எழுப்பத் திட்டமிட்டுள்ளது. கோகிலு லேஅவுட் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வீடுகளை இடித்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று வீடு ஒதுக்க அரசு முடிவு எடுத்துள்ள விவகாரம், சமீபத்தில் அங்கு உயர் போலீஸ் பதவியில் இருக்கும் நபரின் தனிப்பட்ட வீடியோக்கள் வெளியான நிலையில், அதையும் சட்டசபையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் அங்கு இந்த சட்டசபை கூட்டத்தொடர் முழுக்கவே பரபரப்பைக் கிளப்பும் எனத் தெரிகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications