பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்துக்கு மகாராஷ்டிரா உரிமை கோரி வருகிறது. இந்த பெலகாவி மாவட்டம் கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடகா அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்சில் பெலகாவியில் இருந்து பாலேகுந்திரி என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது பஸ்சில் இருந்த பெண் ஒருவர் மராத்தியில் பேசி டிக்கெட் கேட்டார். அதற்கு கண்டக்டர் மகாதேவ் ஹுக்கேரி, ‛‛எனக்கு மராத்தி மொழி தெரியாது. கன்னடத்தில் பேசுங்கள்'' என்று கூறினார்.
இது இருவருக்கும் இடையே வாக்கு வாதத்தை ஏற்படுத்தியது. அப்போது மராத்தி மொழி பேசுவோர் கண்டக்டர் மகாதேவ் ஹுக்கேரியை தாக்கினர். இதனை கன்னட அமைப்பினர் கொந்தளித்ததோடு, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்தும், பெலகாவியில் செயல்பட்டு வரும் மகாராஷ்டிரா ஏகிகிரண் சமிதி என்ற மராத்திய அமைப்பு உள்பட பிற அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்றும், கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லையில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் கன்னட மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமையை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று கன்னட அமைப்பினர் பெங்களூர் உள்பட மாநிலம் முழுவதும் பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய பந்த் போராட்டம் இன்று மாலை 6 மணி வரை 12 மணிநேரம் நடைபெற உள்ளது. இந்த பந்த் போராட்டம் குறித்த லைவ் அப்டேட்டுகள் வருமாறு:
Mar 22, 2025, 3:41 pm IST
பெங்களூர் டவுன்ஹாலில் தடையை மீறி வாட்டாள் நாகராஜ் உடன் போராட்டம் நடத்த முயன்ற கன்னட அமைப்பினரை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றி சென்றனர்.
#WATCH | Karnataka bandh protest | Police stop pro-Kannada activists who came to protest near Town Hall in Bengaluru. They have now been detained by Police. pic.twitter.com/enenaJl1iY
பெங்களூர் டவுன்ஹாலில் இருந்து சுதந்திர பூங்காவுக்கு ஊர்வலமாக செல்ல முயன்ற கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கைது. டவுன்ஹாலில் போராட்டம் நடத்த அனுமதிக்க மறுக்கப்பட்டு இருந்தது. அனுமதியை மீறி வாட்டாள் நாகராஜ் ஊர்வலம் செல்ல முயன்றதால் கைது
Mar 22, 2025, 1:34 pm IST
பெங்களூரில் தற்போது வரை எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை - பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்த்
Mar 22, 2025, 12:33 pm IST
பந்த் காரணமாக மகாராஷ்டிரா - கர்நாடகா இடையே பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இருமாநிலங்கள் இடையே பயணம் செய்வோர் எல்லை அருகே இறங்கி நடந்து செல்கின்றனர்.
Mar 22, 2025, 11:46 am IST
சிக்கமகளூரில் பந்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கன்னட அமைப்பினர் கடைகளை கட்டாயப்படுத்தி மூட வைத்தனர்.
#WATCH | Karnataka: Pro-Kannada activists make people shut down shops in Chikkamagaluru amid the 12-hour bandh called by pro-Kannada organisations. The bandh has been called in protest against the alleged assault on a bus conductor in Belagavi for not speaking Marathi. pic.twitter.com/WLMnvkeETB
பெங்களூரில் சுதந்திர பூங்காவை தவிர்த்து பிற இடங்களில் போராட்டம், பேரணி நடத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்த் எச்சரிக்கை.
Mar 22, 2025, 9:46 am IST
மண்டியா சஞ்சனா சர்க்கிளில் கன்னட அமைப்பினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
#WATCH | Karnataka: Pro-Kannada activists protest in Mandya amid the 12-hour bandh called by pro-Kannada organisations. The bandh has been called in protest against the alleged assault on a bus conductor in Belagavi for not speaking Marathi. Visuals from Sanjaya Circle in the… pic.twitter.com/M51tPDwR0L
கர்நாடகா - தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். பஸ்களை மறிக்கும் வகையில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் கன்னட அமைப்பினரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
Mar 22, 2025, 8:48 am IST
சிக்கமகளூர், மண்டியா உள்பட பல இடங்களில் கன்னட அமைப்பினர் மராத்தி அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகை, பேனருடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Mar 22, 2025, 8:34 am IST
பெங்களூர் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் வழக்கம்போல் பிஎம்டிசி பஸ்கள் இயங்கி வருகின்றன.
#WATCH | Karnataka: Passengers arrive at a bus terminal in Bengaluru amid pro-Kannada groups' 12-hour statewide bandh in protest against the alleged assault on a bus conductor in Belagavi for not speaking Marathi. pic.twitter.com/rT5yseoLna
பந்த்க்கு நடுவே கலபுரகியில் வழக்கம்போல் அரசு பஸ்கள் இயங்கி வருகிறது.
#WATCH | Karnataka: Several pro-Kannada groups have called a bandh in the state today from 6 am to 6 pm, in protest against the alleged assault on a bus conductor in Belagavi for not speaking Marathi.
பெங்களூர் உள்பட கர்நாடகா மாநிலம் முழுவதும் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளுக்கு தேர்வு இருப்பதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படவில்லை.
மைசூரில் கேஎஸ்ஆர்டிசி பஸ்ஸை இயக்க முயன்ற டிரைவரிடம் கன்னட அமைப்பினர் கடும் வாக்குவாதம். பஸ்சை இயக்க விடாமல் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு. பஸ்சின் முன்பு அமர்ந்து இயக்க விடாமல் கன்னட அமைப்பினர் தடுத்து நிறுத்தி ஆக்ரோஷம்.
Mar 22, 2025, 7:08 am IST
சிக்கமகளூரில் கட்டாயமாக ஹோட்டலை அடைக்க முயன்ற கன்னட அமைப்பினரால் பரபரப்பு. தடுத்து நிறுத்தியதால் கன்னட அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்.
Mar 22, 2025, 7:08 am IST
காலை 7 மணி நிலவரப்படி பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கும், தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்கும் வழக்கம்போல் அரசு, தனியார் பஸ்கள் இயங்கி வருகிறது.
Mar 22, 2025, 6:52 am IST
பந்த் போராட்டத்தையொட்டி மகாராஷ்டிராவில் இருந்து அரசு பஸ்கள், மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட வாகனங்கள் பெலகாவி எல்லையில் நிறுத்தம்
Mar 22, 2025, 6:51 am IST
பெங்களூரில் வழக்கம்போல் பிஎம்டிசி, தனியார் பஸ்கள் இயங்கி வருகின்றன. ஆட்டோக்கள் குறைந்த அளவில் இயங்கி வருகிறது.
Mar 22, 2025, 6:47 am IST
கர்நாடகாவில் காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்கியது
பெலகாவியில் மராத்தி மொழி பேச வலியுறுத்தி கர்நாடகா கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது
கண்டக்டர் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் இன்று பந்த் அறிவிப்பு
இன்றைய பந்த் போராட்டத்துக்கு கர்நாடகா அரசு சார்பில் ஆதரவு இல்லை
பெங்களூரில் வழக்கம்போல் அரசு பஸ்கள் இயங்கி வருகிறது
பெங்களூரில் ஹோட்டல்கள் குறைந்த அளவில் திறக்கப்பட்டுள்ளது
அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
6:47 AM, 22 Mar

6:51 AM, 22 Mar
பெங்களூரில் வழக்கம்போல் பிஎம்டிசி, தனியார் பஸ்கள் இயங்கி வருகின்றன. ஆட்டோக்கள் குறைந்த அளவில் இயங்கி வருகிறது.
6:52 AM, 22 Mar
பந்த் போராட்டத்தையொட்டி மகாராஷ்டிராவில் இருந்து அரசு பஸ்கள், மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட வாகனங்கள் பெலகாவி எல்லையில் நிறுத்தம்
7:08 AM, 22 Mar
காலை 7 மணி நிலவரப்படி பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கும், தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்கும் வழக்கம்போல் அரசு, தனியார் பஸ்கள் இயங்கி வருகிறது.
7:08 AM, 22 Mar
சிக்கமகளூரில் கட்டாயமாக ஹோட்டலை அடைக்க முயன்ற கன்னட அமைப்பினரால் பரபரப்பு. தடுத்து நிறுத்தியதால் கன்னட அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்.
7:14 AM, 22 Mar
கேஎஸ்ஆர்டிசி பஸ்சை தடுத்து நிறுத்தி போராட்டம்
மைசூரில் கேஎஸ்ஆர்டிசி பஸ்ஸை இயக்க முயன்ற டிரைவரிடம் கன்னட அமைப்பினர் கடும் வாக்குவாதம். பஸ்சை இயக்க விடாமல் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு. பஸ்சின் முன்பு அமர்ந்து இயக்க விடாமல் கன்னட அமைப்பினர் தடுத்து நிறுத்தி ஆக்ரோஷம்.
7:34 AM, 22 Mar
கர்நாடகா பந்த் எதிரொலியால் மாநிலத்தில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வழக்கம்போல் உள்ளது. குறைந்த அளவில் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கி வருகிறது.
பெங்களூர் உள்பட கர்நாடகா மாநிலம் முழுவதும் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளுக்கு தேர்வு இருப்பதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படவில்லை.
பந்த்க்கு நடுவே கலபுரகியில் வழக்கம்போல் அரசு பஸ்கள் இயங்கி வருகிறது.
#WATCH | Karnataka: Several pro-Kannada groups have called a bandh in the state today from 6 am to 6 pm, in protest against the alleged assault on a bus conductor in Belagavi for not speaking Marathi.
பெங்களூர் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் வழக்கம்போல் பிஎம்டிசி பஸ்கள் இயங்கி வருகின்றன.
#WATCH | Karnataka: Passengers arrive at a bus terminal in Bengaluru amid pro-Kannada groups' 12-hour statewide bandh in protest against the alleged assault on a bus conductor in Belagavi for not speaking Marathi. pic.twitter.com/rT5yseoLna
சிக்கமகளூர், மண்டியா உள்பட பல இடங்களில் கன்னட அமைப்பினர் மராத்தி அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகை, பேனருடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
9:10 AM, 22 Mar
கர்நாடகா - தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். பஸ்களை மறிக்கும் வகையில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் கன்னட அமைப்பினரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
9:46 AM, 22 Mar
மண்டியா சஞ்சனா சர்க்கிளில் கன்னட அமைப்பினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
#WATCH | Karnataka: Pro-Kannada activists protest in Mandya amid the 12-hour bandh called by pro-Kannada organisations. The bandh has been called in protest against the alleged assault on a bus conductor in Belagavi for not speaking Marathi. Visuals from Sanjaya Circle in the… pic.twitter.com/M51tPDwR0L
பெங்களூரில் சுதந்திர பூங்காவை தவிர்த்து பிற இடங்களில் போராட்டம், பேரணி நடத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்த் எச்சரிக்கை.
11:46 AM, 22 Mar
சிக்கமகளூரில் பந்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கன்னட அமைப்பினர் கடைகளை கட்டாயப்படுத்தி மூட வைத்தனர்.
#WATCH | Karnataka: Pro-Kannada activists make people shut down shops in Chikkamagaluru amid the 12-hour bandh called by pro-Kannada organisations. The bandh has been called in protest against the alleged assault on a bus conductor in Belagavi for not speaking Marathi. pic.twitter.com/WLMnvkeETB
பந்த் காரணமாக மகாராஷ்டிரா - கர்நாடகா இடையே பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இருமாநிலங்கள் இடையே பயணம் செய்வோர் எல்லை அருகே இறங்கி நடந்து செல்கின்றனர்.
1:34 PM, 22 Mar
பெங்களூரில் தற்போது வரை எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை - பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்த்
2:41 PM, 22 Mar
பெங்களூர் டவுன்ஹாலில் இருந்து சுதந்திர பூங்காவுக்கு ஊர்வலமாக செல்ல முயன்ற கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கைது. டவுன்ஹாலில் போராட்டம் நடத்த அனுமதிக்க மறுக்கப்பட்டு இருந்தது. அனுமதியை மீறி வாட்டாள் நாகராஜ் ஊர்வலம் செல்ல முயன்றதால் கைது
3:41 PM, 22 Mar
பெங்களூர் டவுன்ஹாலில் தடையை மீறி வாட்டாள் நாகராஜ் உடன் போராட்டம் நடத்த முயன்ற கன்னட அமைப்பினரை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றி சென்றனர்.
#WATCH | Karnataka bandh protest | Police stop pro-Kannada activists who came to protest near Town Hall in Bengaluru. They have now been detained by Police. pic.twitter.com/enenaJl1iY
Karnataka Bandh Today [கர்நாடகா பந்த் இன்று] LIVE Updates in Tamil: Get the latest updates on Karnataka Bandh today on March 22, 2025. Follow live coverage of the ongoing strike, roadblocks, government responses, and public reactions in tamil language at Oneindia Tamil.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.