Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்தமாக ஒதுக்கி தள்ளிய பாஜக.. கர்நாடக வேட்பாளர் லிஸ்ட்.. ஒரு இஸ்லாமியர் வேட்பாளர் கூட இல்லை!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக பாஜக வெளியிட்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் ஒரே ஒரு இஸ்லாமியர் கூட இடம்பெறவில்லை. இஸ்லாமியர்களை மொத்தமாக பாஜக புறக்கணித்துள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அங்கு தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

கர்நாடகா- 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

Karnataka BJP candidates list: Muslims are completely snubbed from it

தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 5.21 கோடி வாக்காளர்களில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

அங்கே ஹிஜாப் விவகாரம், பெங்களூரில் திட்டங்களுக்கு கமிஷன் பெற்ற விவகாரம், மத மோதல், ஜாதி ரீதியிலான மோதல் உள்ளிட்ட பல விஷயங்கள் தேர்தல் நேரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 189 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. 9 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. காங்கிரசில் இருந்து பாஜக வந்த பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

பாஜக எம்எல்ஏவும் வருவாய்த்துறை அமைச்சருமான ஆர் அசோக் தனது சொந்த தொகுதியான பத்மநாபநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகிறார், மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாரை எதிர்க்க ஆர் அசோக் களமிறக்கப்பட்டு உள்ளார்.

இன்னொரு பக்கம் வருணா தொகுதியில் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவை எதிர்த்து எம்.எல்.ஏ.வும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான வி.சோமன்னா போட்டியிடுகிறார். சோமன்னா இன்னொரு பக்கம் சாமராஜ்நகரிலும் போட்டியிடுகிறார். இரண்டு முக்கிய தலைவர்களுக்கு எதிராக அங்கு அமைச்சர்கள் போட்டியிடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரசின் இரண்டு முக்கிய தலைவர்களும் வெற்றிபெற கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது தெளிவாகிறது.

Karnataka BJP candidates list: Muslims are completely snubbed from it

முதல்வர் பொம்மை தனது தற்போதைய தொகுதியான ஷிகான் தொகுதியில் போட்டியிடுகிறார்.

முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பாவின் மகனான பி.ஒய்.விஜயேந்திரா, ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். 1983-ம் ஆண்டு முதல் எடியூரப்பா 7 முறை வெற்றி பெற்ற தொகுதியான ஷிகாரிபுரா தொகுதியில் அவர் இந்த முறை மீண்டும் போட்டியிடுகிறார்.

அமைச்சர் ஸ்ரீராமுலு பெல்லாரி ரூரல் தொகுதியில் போட்டியிடுகிறார்.

உடுப்பியில், தற்போதைய எம்எல்ஏ ரகுபதி பட் போட்டியிடவில்லை. அவருக்கு பதிலாக யஷ்பால் சுவர்ணா முதல்முறையாக போட்டியிடுகிறார். சுவர்ணாதான் ஹிஜாப் பிரச்னையை கிளப்பியது. ஹிஜாப் தடைக்காக தீவிரமாக அவர்தான் பிரச்சாரம் செய்தார். இதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

பாஜக வெளியிட்ட பட்டியலில் பின்வரும் ஜாதி ரீதியான வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

52 புதிய முகங்கள்
32 ஓபிசி வேட்பாளர்கள்
30 எஸ்சி
16 எஸ்.டி
9 பெண்கள்
5 வழக்கறிஞர்கள்
2 ஓய்வு பெற்ற அதிகாரிகள்

ஆனால் இந்த பட்டியலில் ஒரே ஒரு இஸ்லாமியர் கூட இடம்பெறவில்லை. இஸ்லாமியர்களை மொத்தமாக பாஜக புறக்கணித்துள்ளது.

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரி வருவதற்கு ஒருதரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு சமூக மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், சில நாட்களிலேயே இந்த விவகாரம் கர்நாடகாவில் உள்ள மற்ற கல்லூரிகளிலும் காட்டுத் தீ போல பரவியதுடன், வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின.

இதையடுத்து, கல்வி நிலையங்களில் ஹிஜாபை அணிந்து வர கர்நாடாகா அரசு தடைவிதித்தது. பின்னர் உச்ச நீதிமன்றமும் இந்த தடை செல்லும் என்று அறிவித்தது.

Karnataka BJP candidates list: Muslims are completely snubbed from it

இது போக உடுப்பியில் உள்ள ஹொஸா மார்குடி கோவிலில் நடக்கும் விழாவில் இஸ்லாமியர்கள் கடை போட தடை விதிக்கப்பட்டது.இங்கு எல்லா வருடமும் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கடை போட்டு வந்தனர். இந்த வருடம் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கர்நாடகாவில் ஹலால் பொருட்களை வாங்க கூடாது என்றும் இந்துக்கள் இடையே பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இது போக இஸ்லாமியர்களின் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று கடுமையாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இப்படி இந்துக்கள் இஸ்லாமியர்கள் இடையிலான பிரிவினை, மத மோதல் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. இந்த நிலையில்தான் அங்கு வழிபாட்டு தளங்களில் லவுட் ஸ்பீக்கர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலில் சிக்மங்களூர் நகராட்சியில் இந்த கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

தற்போது பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகாவின் மற்ற பகுதிகளிலும் மசூதிகள், சர்ச்கள், கோவில்களில் இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. காற்று மாசு ஏற்படுத்துவதாக கூறி இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மசூதிகளில்தான் அதிகமாக ஸ்பீக்கர் இருக்கும் என்பதால் அங்கே இந்த தடை தீவிரமாக நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. அங்கே மதம் பெரிய பிரச்சனையாக உள்ள நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக மதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான் கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக பாஜக வெளியிட்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் ஒரே ஒரு இஸ்லாமியர் கூட இடம்பெறவில்லை. இஸ்லாமியர்களை மொத்தமாக பாஜக புறக்கணித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+