நான் யாருக்கும் அடிமையில்லை.. சித்தராமையா முதலமைச்சராகனும்! குண்டை தூக்கி போட்ட கர்நாடக பாஜக அமைச்சர்
பெங்களூரு: கர்நாடகா மாநில முதலமைச்சராக சித்தராமையா மீண்டும் வர வேண்டும் என்று பாஜக அமைச்சர் பி.ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. உட்கட்சிப் பூசல் காரணமாக எடியூரப்பா பதவி விலகியவுடன் பசவராஜ் பொம்மை மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
பசராஜ் பொம்மை முதலமைச்சரானதில் இருந்தே அக்கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் முதலமைச்சருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சித்தராமையா முதலமைச்சராக வேண்டும்
இந்த நிலையில், கர்நாடகா மாநில பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு பெல்லாரி மாவட்டத்தில் வணிக வளாகம் மற்றும் மாணவர் விடுதியை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மற்றவர்களை போலவே நானும் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா மீண்டும் கர்நாடகா முதலமைச்சராக வேண்டும் என்று விரும்புகிறேன்.

நல்ல நண்பர்கள்
நாங்கள் அரசியல் காரணங்களுக்காக ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்வோம். இதில் எந்தவிதமான தனிப்பட்ட விருப்பு வெறுப்பும் இல்லை. நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்கள். இந்த கருத்தை வெளிப்படையாக தெரிவிப்பதற்கு எனக்கு எந்த பயமும் இல்லை. ஏனென்றால் நான் யாருக்கும் அடிமை கிடையாது.

வெற்றிக்கு உதவி
2018 சட்டமன்றத் தேர்தலில் பதாமி தொகுதியில் யாருடைய உதவியால் அவர் வெற்றிபெற்றார் என்பதை கேளுங்கள். அவர் பொதுவெளியில் அதை வெளிப்படையாக தெரிவிக்க மாட்டார். ஆனால், தனிப்பட்ட முறையில், கதவுகள் மூடப்பட்ட அறையில் இருந்துகொண்டு அவர் அதை தெரிவித்தார். நானும் சித்தராமையாவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்காக உழைத்து கொண்டிருக்கிறோம்.

சித்தராமையாவின் விருப்பம்
நான் குருபா சமுதாய மக்கள் மற்றும் சித்தராமையாவுக்கு எதிரானவன் கிடையாது. ஒருநாள் நானும் சித்தராமையாவும் ஒரே அரங்கில் நிற்போம்.
ஒரு நாள் என்னை முதலமைச்சராக பார்க்க வேண்டும் என்று சித்தராமையாவும் விரும்புவார் என்பதை உறுதியாக நம்புகிறேன். இதே கருத்தை சித்தராமையா முன்பாகவும் நான் கூறுவேன்.
Recommended Video

2வது தேவராஜ்
சித்தராமையாதான் 2வது தேவராஜ் (பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்த மறைந்த் அகர்நாடக முதலமைச்சர்). சித்தராமையா மீண்டும் கர்நாடக முதலமைச்சராக வேண்டும் என நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். கொள்கை சார்ந்த விசயங்களும் நாங்கள் மோதிக்கொண்டாலும் பிற்படுத்தப்பட்ட மக்களை ஒற்றுமைபடுத்த ஒரே ஒரு இருவரும் உழைக்கிறோம்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications