ஊரடங்கை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு... குதிரையில் பவனி வந்த எம்.எல்.ஏ.மகன்
பெங்களூரு: கர்நாடக மாநிலம் குண்டுலுபேட் எம்.எல்.ஏ.நிரஞ்சன் குமார் மகன் ஊரடங்கை மீறி நெடுஞ்சாலையில் குதிரையில் பவனி வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள குண்டுலுபேட் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பாஜகவை சேர்ந்த நிரஞ்சன் குமார். இவரது மகன் புவன் குமார் ஊரடங்கை மீறி மைசூரு-ஊட்டி நெடுஞ்சாலையில் குதிரையில் சுற்றித்திரிந்தது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும், புவன் குமார் குதிரையில் ஒரு இளவரசரை போல் பவனி வந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் சூழலில் ஊரடங்கை முழுமையாக மக்கள் கடைபிடிக்க வேண்டும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அறிவுரை வழங்கி வரும் நிலையில், அவரது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரின் மகனே ஊரடங்கை பொருட்படுத்தாமல் நடந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசியுள்ள குண்டுலுபேட் பாஜக எம்.எல்.ஏ. நிரஞ்சன் குமார், ஊரடங்கின் போது குதிரையில் செல்லக்கூடாது என எந்த விதியும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், தாம் ஊரில் இல்லாததால் இந்த நிகழ்வு குறித்து தமக்கு முழுமையான தகவல் தெரியவில்லை என்றும், என்ன நடந்தது என்பது பற்றி மகனிடம் விசாரித்து அதில் தவறு இருந்தால் நிச்சயம் அதனை மகனிடம் சுட்டிக்காட்டுவேன் எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்பு மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ. வாசு, பெங்களூர் ஹொன்னவர் நெடுஞ்சாலையில் தனது பேரனுடன் ரிமோட் கன்ட்ரோல் காரை வைத்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலைன்னா சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? இன்று 12 மணிக்கு என்ன நடக்க போகுதோ -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே












Click it and Unblock the Notifications