வாரிசு அரசியல், பெண்கள் பெருமை பற்றி எப்படி பேசுவது?தேவகவுடா குடும்பத்தின் 'லீலைகளால்' பாஜக அப்செட்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தின் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டதால் பாஜகவுக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள்தான் என்கின்றனர் அக்கட்சித் தலைவர்கள்.

பாஜகவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை மிக கடுமையாக எதிர்ப்பது வாரிசு அரசியல் விவகாரத்தில்தான். பாஜக தலைவர்களின் வீட்டு பிள்ளைகளும் அரசியலில் இறங்கி இருந்தாலும் பாஜக தாங்கள் எதிர்க்கும் வாரிசு அரசியல் எது என்பதை பலமுறை விளக்கி இருக்கிறது.

Karnataka BJP upsets over ally praty JDS leaders Obscene Videos

வாரிசு அரசியல் எதிர்ப்பு ஏன்?: நாடாளுமன்றத்தில் வாரிசு அரசியல் எது என குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, அரசியல் கட்சிகளில் தலைவர்களின் குடும்பங்கள் தங்கள் சொந்த உழைப்பில் வளர்ச்சி அடைவதை பாஜக எதிர்க்கவில்லை. ஒரு குடும்பத்தால் ஒரு கட்சி நடத்தப்படுகிறது. ஒரே ஒரு மகனுக்காக அந்த கட்சி கவலைப்படுகிறது. நாட்டின் கோடிக்கணக்கான குடும்பங்கள் பற்றி அக்கறைப்படவில்லை. ஆகையால் காங்கிரஸ் கட்சியையும் கட்சியின் வாரிசு அரசியலையும் நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.

எது வாரிசு அரசியல்?: அதேபோல தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், ஒரு குடும்பத்தில் இருந்து 10 பேர் கூட அரசியலுக்கு வரலாம். ஆனால் ஒரு அரசியல் கட்சியையே ஒரே ஒரு குடும்பம் நடத்துவதுதான் கெடுதலானது என்கிறோம். ஒரே ஒரு குடும்பம் மட்டுமே கட்சியின் முடிவுகளை எடுக்கும் போது ஜனநாயகம் இருக்காது. என்னதான் அறிவுஜீவிகள் இருந்தாலும் அந்த கட்சியின் பிற தலைவர்கள் மேலே வர முடியாது. இதனால்தான் வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு எதிரானது என்கிறோம் என்றார் பிரதமர் மோடி.

குடும்ப கட்சி ஜேடிஎஸ்: பாஜகவின் இந்த வாரிசு அரசியல் குறித்த விமர்சனங்கள், கர்நாடகாவில் ஜேடிஎஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடனான கூட்டணியால் பேசு பொருளாகிவிட்டது. கர்நாடகாவில் வாரிசு அரசியல் பற்றி பாஜகவால் பேசவே முடியாத நிலைமைதான். ஏனெனில் பாஜக கூட்டணி வைத்திருக்கும் ஜேடிஎஸ் கட்சி, தேவகவுடாவால் உருவாக்கப்பட்டது. தேவகவுடாவின் மகன்கள் ரேவண்ணா, குமாரசாமி இருவரும் அரசியலில் இருக்கின்றனர். ரேவண்ணாவுக்கு ஹாசன் தொகுதி, குமாரசாமிக்கு மண்டியா தொகுதி என பங்கீடும் செய்து கொண்டனர். குமாரசாமிக்கு முதல்வர் பதவி என்றால் ரேவண்ணாவுக்கு அமைச்சர் பதவி கட்டாயம் என்பதாகிவிட்டது. அத்துடன் முடியவில்லையே.. குமாரசாமியின் மனைவி, மகன் ஆகியோரும் அடுத்ததாக அரசியலில் குதித்துள்ளனர். ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணாவும் அரசியலில் இருக்கிறார். ஜேடிஎஸ் கட்சி என்பது தேவகவுடா குடும்பத்தின் கட்சி. பிரதமர் மோடியின் வாரிசு அரசியல் விமர்சனம் 100-க்கு 100 சதவீதம் பொருந்தக் கூடிய கட்சியாக இருப்பதும் தேவகவுடாவின் ஜேடிஎஸ் கட்சிதான்.

குமாரசாமிக்கு முதல்வர் பதவி என்றால் ரேவண்ணாவுக்கு முக்கிய துறை ஒன்றின் அமைச்சர் பதவி கட்டாயம் என்பதாகிவிட்டது. அத்துடன் முடியவில்லையே.. குமாரசாமியின் மனைவி, மகன் ஆகியோரும் அடுத்ததாக அரசியலில் குதித்துள்ளனர். ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணாவும் அரசியலில் இருக்கிறார். ஜேடிஎஸ் கட்சி என்பது தேவகவுடா குடும்பத்தின் கட்சி. பிரதமர் மோடியின் வாரிசு அரசியல் விமர்சனம் 100-க்கு 100 சதவீதம் பொருந்தக் கூடிய கட்சியாக இருப்பதும் தேவகவுடாவின் ஜேடிஎஸ் கட்சிதான்.

பெண் சக்தியும் பிரதமர் மோடி பெருமிதமும்: அதேபோல பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும் பல்வேறு கருத்துகளை பேசி இருக்கின்றனர். பிரதமர் மோடி தமது ஒவ்வொரு கூட்டத்திலும், பெண்களுக்காகவே மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது என பட்டியலிட்டுப் பேசுவது வழக்கம்.

ஜி 20 மாநாட்டில் பேசும்போதுகூட, பெண்களின் முன்னேற்றத்தில்தான் உலக நாடுகளின் முன்னேற்றமும் இருக்கிறது என்றார் மோடி. நாடாளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்கியது உள்ளிட்டவை பெண்கள் முன்னேற்றத்துக்கான பாஜகவின் பங்களிப்பாக சொல்லிக் கொள்பவைதான்.

சுதந்திர தின உரைகளில் கூட பெண்களின் பங்களிப்பை மோடி சிலாகித்து பேசுவது வழக்கம். "தேசத்தின் வளர்ச்சிக்கு நமது பெண் சக்திக்கு நாம் துணையாக இருப்போம். பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். பெண்களின் மாண்பைக் குறைக்கும் சிறு வெளிப்பாடு கூட நம்மிடம் இருந்துவிடக் கூடாது. நம் தேசத்தின் மகள்கள், தாய்மார்கள் நாட்டுக்காக பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர் என்றெல்லாம் பெருமிதமாக பேசுவார் பிரதமர் மோடி.

3,000 ஆபாச வீடியோக்கள்: தற்போது தேவகவுடா குடும்பத்தின் "லீலைகள்" பாஜகவுக்கு ஆகப் பெரும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது. தேவ கவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா, அவரது மகன் அதாவது தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் இருவரும் அடித்த கூத்துகள் 3000 ஆபாச வீடியோக்களாக கர்நாடகாவையே அலற வைத்துக் கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் இந்த 3,000 வீடியோ விவகாரம் 5 மாதங்களுக்கு முன்னரே பாஜக தலைமைக்கு தெரிந்திருக்கிறது. இந்த 3,000 வீடியோக்களை சுட்டிக்காட்டியே, அய்யா சாமீ தேவகவுடா குடும்ப கட்சியான ஜேடிஎஸ்- உடன் கூட்டணியே வேண்டாம் என போராடியிருக்கின்றனர் கர்நாடகா பாஜக தலைவர்கள். இதனையும் மீறித்தான் லோக்சபா தேர்தலுக்கு ஜேடிஎஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்தது.

அதுவும் 3,000 வீடியோக்களில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவையே ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக்கவும் ஒத்துழைத்திருக்கிறது. இனி பெண்கள் விவகாரத்தில் பாஜக தலைமை எந்த முகத்தை வைத்துக் கொண்டு பேச முடியும் என ஆவேசப்படுகின்றனர் உள்ளூர் பாஜக தலைவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+