பெங்களூரில் இனி நள்ளிரவு 1 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதி.. பட்ஜெட்டில் அறிவித்த சித்தராமையா
பெங்களூர்: பெங்களூரில் நள்ளிரவு 1 மணி வரை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை திறந்து வைக்கலாம் என கர்நாடகா பட்ஜெட்டில் முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். மேலம் பெங்களூர் ஹெப்பாலில் வாகனங்கள் செல்லும் வகையில் சுரங்கபாதை அமைப்பது, எப்போதும் காவிரி குடிநீர் வினியோகம் செய்வது உள்ளிட்ட முக்கிய திட்டங்களை முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். சித்தராமையா தான் நிதித்துறையை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் தான் 2024-2025ம் ஆண்டுக்கான கர்நாடகா பட்ஜெட்டை இன்று முதல்வர் சித்தராமையா சட்டசபையில் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. மேலும் அரசின் சாதனைகளை முதல்வர் சித்தராமையா பட்டியலிட்டார். இந்த வேளையில் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவுக்கு பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்தார். அந்த திட்டங்கள் குறித்த விபரம் வருமாறு:
* பெங்களூர் நகரில் நள்ளிரவு 1 மணி வரை கடை, வணிக நிறுவனங்கள் திறக்க நீண்டநாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி பெங்களூர் மற்றும் 10 மாநகராட்சி பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்களை திறந்து வைக்க அனுமதி வழங்கப்படுகிறது.
* பெங்களூர் நகரின் ஹெப்பால் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இங்கு சாலையை அகலப்படுத்த போதிய இடவசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் சுரங்கபாதை அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஹெப்பால் சந்திப்பில் சோதனை அடிப்படையில் இந்த ஆண்டு சுரங்கப்பாதை அமைக்கப்படும்.
* பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகத்தில் (பிஎம்டிசி) 1,334 புதிய மின்சார பஸ்கள் வாங்கப்படும். அதேபோல் 820 பிஎஸ்-6 டீசல் பஸ்களும் வாங்கப்பட்டு போக்குவரத்து கழகத்துடன் இணைக்கப்படும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பஸ்களின் நகர்வை செல்போன் செயலி மூலம் கண்காணிக்கும் வகையிலான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
* பெங்களுருவில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பெரிஃபெரல் ரிங் ரோட்டை பெங்களூரு வணிக வழித்தடமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.27,000 கோடி செலவில் 73 கிமீ தொலைவுக்கு அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் நடப்பு ஆண்டில் தொடங்கப்படும்.
* பெங்களூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 20 லட்சம் சொத்துகளின் சொத்து வரி பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது. இதன்மூலம் 2024-25 முதல் சொத்து வரி செலுத்தும் விபரங்களை மக்கள் ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ள முடியும்.
* பெங்களூர் மாநகராட்சி சார்பில் கடந்த 2023-24 நிதி ஆண்டில் ரூ.4,300 கோடி வரி வசூல் கிடைத்துள்ளது. இது கடந்த 2022-23ஐ விட ரூ.1,000 கோடி அதிகம். வரும் 2024-25 நிதியாண்டில் வரி வசூல் என்பது ரூ.6,000 கோடியை எட்டும். இதற்கு திருத்தப்பட்ட விளம்பர கொள்கை உள்ளிட்டவை கைக்கொடுக்கும் என எதிர்பார்க்க்பபடுகிறது.
* * சுகம சஞ்சாரா-பிராண்ட் பெங்களூருவின் கீழ் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிபுணர் தலைமையிலான குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பெங்களுருவில் 250 மீட்டர் உயரமுள்ள ‛ஸ்கைடெக்' (Skydeck) கட்டம் கட்டுவதற்கான வடிவமைப்பை உருவாக்க சர்வதேச அளவில் புகழ்பெற்ற கட்டட கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
* 2025 மார்ச் மாதத்துக்குள் தற்போதுள்ள 74 கிலோமீட்டர் தொலைவிலான மெட்ரோ பாதையுடன் இன்னும் 44 கிலோமீட்டர் தொலைவிலான மெட்ரோ பாதை சேர்க்கப்படும். அவுட்டர் ரிங் ரோடு-விமான நிலைய ரோடு இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்தின் பேஸ் 2 மற்றும் பேஸ் 2ஏ பணிகள் 2026 ஜுன் மாதத்துக்குள் முடிக்கப்படும். மேலும் ரூ.15,611 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ 3வது கட்ட பணிகளுக்கு அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. மத்திய அரசின் அனுமதிக்காக கோப்புகள் காத்திருக்கின்றன.
* 2024 மே மாதத்துக்குள் பெங்களூர் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் ரூ.5,550 கோடி மதிப்பீட்டில் 12 லட்சம் மக்களுக்கு தினமும் 110 லிட்டர் குடிநீரை வழங்குவதற்காக 775 எம்எல்டி தண்ணீருக்கான காவிரி திட்டம் செயல்படுத்தப்படும். அதோடு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 110 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் 2ம் கட்ட திட்டம் என்பது ரூ.200 கோடியில் செயல்படுத்தப்படும்.
* காவிரி குடிநீருக்கான 5ம் கட்ட திட்டத்தின் கீழ் 2024 டிசம்பர் மாதத்துக்குள் பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்படும். 228 கிமீ தொலைவுக்கு குழாய் பதிக்கப்பட்டு, 100 எம்எல்டி கழிவுநீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட 13 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (எஸ்டிபி) கட்டப்படும். அதுமட்டுமின்றி 7 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.441 கோடி செலவில் மேம்படுத்தப்படும். இதன்மூலம் தினமும் 268 எம்எல்டி நீர் மறுபயன்பாட்டுக்காக சுத்திகரிப்பு செய்யப்படும் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications