தமிழ்நாடு பாணியில் கர்நாடகா- நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்- அமைச்சரவை ஒப்புதல்!
பெங்களூர்: தமிழ்நாடு அரசைப் போல கர்நாடகா மாநில அரசும் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து கர்நாடகாவுக்கு விலக்கு கோரும் தீர்மானத்தை அம்மாநில சட்டசபையில் நிறைவேற்ற இருக்கிறது. இந்த தீர்மானத்துக்கு முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடகா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடகாவில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; கர்நாடகா மாநில அரசே பொது நுழைவுத் தேர்வு நடத்தி 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசே நடத்த அனுமதிக்க வேண்டும்; என வலியுறுத்துகிறது கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் தந்த தீர்மானம்.
நீட் எதிர்ப்பில் தமிழ்நாடு: நீட் நுழைவுத் தேர்வு முறைக்கு தமிழ்நாடுதான் முதன் முதலில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நீட் நுழைவுத் தேர்வில் இருந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவுடன் விலக்கும் பெற்றிருந்தது தமிழ்நாடு. பின்னர் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பால் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு கட்டாயமானது.

நீட் விலக்கு மசோதாக்கள்: ஆனாலும் தமிழ்நாடு சட்டசபையில் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும்; 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாநில அரசே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனாலும் தமிழ்நாடு சட்டசபையின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் மத்திய அரசு கிடப்பில்தான் போட்டு வைத்துள்ளது.
தமிழ்நாடு தீர்மானம் என்ன?: தமிழ்நாடு சட்டசபையில் கடந்த மாத இறுதியிலும் நீட் தேர்வுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானத்தில் கிராமப்புற ஏழையெளிய மாணவர்களின் மருத்துவக் கல்லூரி வாய்ப்புக்களை கடுமையாக பாதிக்கும் வகையில், பள்ளிக் கல்வியை அவசியமற்றதாக்கும் வகையில் மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கும் வகையில் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். இந்த தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து பள்ளிக்கல்வியில் மாணவர்கள் பெறும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக, இந்த சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டும். தொடர்ந்து, பல முறைகேடுகளுக்கு வழிவகுத்து வரும் இந்த நீட் தேர்வு முறையை பல்வேறு மாநிலங்களும் தற்போது எதிர்த்து வரும் நிலையிலும் தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில், தேசிய மருத்துவ ஆணை சட்டத்தில் தேவைப்படும் திரு்த்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கர்நாடகா சட்டசபையில் தீர்மானம்: தற்போது தமிழ்நாடு அரசு வழியில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசும் நீட் தேர்வுக்கு எதிராக மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. கர்நாடகாவில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; கர்நாடகா மாநில அரசே பொது நுழைவுத் தேர்வு நடத்தி, 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசே நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதுதான் கர்நாடகா அரசு சட்டசபையில் நிறைவேற்ற இருக்கும் தீர்மானம். இந்த தீர்மானத்துக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையிலான மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து கர்நாடகா சட்டசபையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications