ஹைகோர்ட்டில் ஹிஜாப் வழக்கு இருப்பதால்.. அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை.. கர்நாடக அமைச்சர் பேட்டி
பெங்களூர்: பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் விவகாரம் குறித்து கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என கர்நாடக சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் மாதுசாமி கூறினார்.
கர்நாடகத்தில் ஹிஜாப், காவி ஷால் போராட்டம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடுப்பியில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து துவங்கிய இந்த பிரச்னை படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் பரவியது.
சிக்கமகளூரு, மண்டியா, சிவமொக்கா, பாகல்கோட்டை உள்பட பிற மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போட்டி போராட்டம் நடத்தினர். சிவமொக்கா, பாகல்கோட்டையில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதையடுத்து 3 நாட்கள் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

அமைச்சரவையில் விவாதம்
இந்நிலையில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கு நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இன்று மதியம் 2:30 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி நீதிபதி கிருஷ்ணா தீக்சித் உத்தரவிட்டார்.
இதற்கிடையே பெங்களூருவில் கர்நாடக அமைச்சரவை கூட்டம் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆலோசனை நடத்தும் விவகாரத்தில் ஹிஜாப் குறித்த பிரச்னை இடம்பெறவில்லை. இருப்பினும் அதுபற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி நேற்று அமைச்சரவை கூட்டத்தில் ஹிஜாப் தடை விவகாரம் குறித்து அமைச்சர்கள் விவாதித்தனர்.

முடிவு எடுக்கவில்லை
இதுகுறித்து சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் மாதுசாமி மறைமுகமாக கூறினார். அவர் கூறுகையில், ‛‛மாநிலத்தில் நடக்கும் விவகாரம் (ஹிஜாப்) குறித்து ஆலோசித்தோம். ஆனால் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை'' என்றார்.

அட்வகேட் ஜெனரல் சந்திப்பு
முன்னதாக கர்நாடக போலீஸ் துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசினார். அப்போது ஹிஜாப் தொடர்பான போராட்டத்தில் நடந்த கல்வீச்சு சம்பவம் தொடர்பான கைது நடவடிக்கை உள்ளிட்ட விவரங்களை தெரிவித்தார். கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்பான விசாரணை குறித்து அட்டர்னி ஜெனரல் பிரபுலிங்க் நாவடி எடுத்துரைத்தார்.
Recommended Video

போராட தடை
இதற்கிடையே பெங்களூரு நகரில் பள்ளி, கல்லூரிகளை சுற்றி 200 மீட்டர் பரப்பளவில் போராட்டங்கள் நடத்த தடை விதித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல் பந்த் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications