கோயிலுக்கு சென்ற கர்நாடக முதல்வர்.. திடீரென தடுத்து நிறுத்திய அதிகாரிகள்.. என்ன நடந்தது! பரபரப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் மே மாதம் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கோயிலுக்குச் சென்ற அம்மாநில முதல்வரின் காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இப்போது பசரவாஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, அம்மாநில தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அதன்படி கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்குகள் எண்ணப்பட்டு, வரும் மே 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

கர்நாடகா
தென்மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமாகக் கர்நாடகா இருக்கிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் எப்படியாவது வென்று ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதிலேயே பாஜக குறியாக இருக்கிறது. இதனால் பிரதமர் மோடியைக் கடந்த சில மாதங்களில் பல முறை கர்நாடக மாநிலத்திற்குச் சென்று பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார். அதேபோல அம்மாநில பாஜக தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.

பசவராஜ் பொம்மை
இதற்கிடையே கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, சிக்கபல்லாபுரா மாவட்டத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றபோது அவரது காரை தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். கர்நாடகாவில் வரும் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கே ஏற்கனவே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதன்படியே முதல்வரின் வாகனத்தைத் தேர்தல் அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

சோதனை
கர்நாடக முதல்வரின் வாகனத்தைத் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், முதல்வர் பசவராஜ் பொம்மை ஏற்கனவே தனது அதிகாரப்பூர்வ காரை ஒப்படைத்துவிட்டார். இதனால் பசவராஜ் பொம்மை தனது சொந்த காரில் கட்டி சுப்ரமணிய கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார்.. அப்போது அந்த கார் ஹோசாஹுத்யா செக்போஸ்ட்டில் நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டது.

அதிகாரிகள்
அவரது காரில் ஆட்சேபனைக்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதன் காரணமாக அதிகாரிகள் வாகனத்தைச் செல்ல அனுமதித்தனர், இதையடுத்து முதல்வர் தனது பயணத்தை வழக்கம் போலத் தொடர்ந்தார் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. கர்நாடகாவில் முதல்வரின் வாகனமே திடீரென தேர்தல் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உள்ளான சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

சோதனை
கர்நாடக முதல்வரின் வாகனத்தைத் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், முதல்வர் பசவராஜ் பொம்மை ஏற்கனவே தனது அதிகாரப்பூர்வ காரை ஒப்படைத்துவிட்டார். இதனால் பசவராஜ் பொம்மை தனது சொந்த காரில் கட்டி சுப்ரமணிய கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார்.. அப்போது அந்த கார் ஹோசாஹுத்யா செக்போஸ்ட்டில் நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டது.

அதிகாரிகள்
அவரது காரில் ஆட்சேபனைக்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதன் காரணமாக அதிகாரிகள் வாகனத்தைச் செல்ல அனுமதித்தனர், இதையடுத்து முதல்வர் தனது பயணத்தை வழக்கம் போலத் தொடர்ந்தார் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. கர்நாடகாவில் முதல்வரின் வாகனமே திடீரென தேர்தல் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உள்ளான சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

கர்நாடகா
கர்நாடகாவைப் பொறுத்தவரை தற்போது வரை வந்த பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சியே வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. சில கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் பெரும்பான்மையைப் பெறும் என்றும் கூட கூறப்பட்டுள்ளது. சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் அங்குத் தேர்தலை எதிர்கொள்கிறது. பசவராஜ் பொம்மை அரசு மீது இருக்கும் ஊழல் புகார்களை முன்வைத்து பிரசாரம் செய்கின்றனர்.

பாஜக பிளான்
மறுபுறம் பாஜக தேர்தலில் வெல்லக் கடுமையாக முட்டி மோதும். கடந்த தேர்தலிலே பாஜகவுக்கு முதலில் அங்கே தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இத்தனைக்கும் கடந்த தேர்தலை அங்கு எடியூரப்பாவை முன்வைத்து பாஜக எதிர்கொண்டது. ஆனால், எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு பொம்மை முதல்வராக்கப்பட்டார். இது பாஜகவுக்குச் சாதகமாக இருக்கும் எனத் தெரியவில்லை. அதேநேரம் பொம்மை அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. என்ன தான அதிருப்தி இருந்தாலும் பிரதமர் மோடியின் இமேஜ் தங்களைப் பாதுகாக்கும் என்று பாஜக கருதுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications