கர்நாடகா சட்டசபை க்கு மே 10-ல் தேர்தல்! "பாஜக" எம்எல்ஏக்களை இழுக்க காங். சதி என பரபர புகார்!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்; மே 13-ந் தேதி வாக்கு எண்ணிகை நடைபெற உள்ளது. இந்த நிலையில் கர்நாடகா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக பாஜக எம்.எல்.ஏக்களுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் வலைவீசி வருவதாக முதல்வர் பசவராஜ் பொம்மை பரபரப்பான புகாரை தெரிவித்துள்ளார்.
224 இடங்களைக் கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 113 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் எந்தக் கட்சியும் 113 இடங்களைப் பெறவில்லை. 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக 104 இடங்களில் வென்றது; காங்கிரஸ் 80; ஜேடிஎஸ் 37 இடங்களில் வென்றது. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜக ஆட்சி அமைக்க முயன்றது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பாஜக நிரூபிக்க முடியவில்லை. இதனால் காங்கிரஸ்- ஜேடிஎஸ் ஆட்சி அமைந்தது. முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசில் கலகமூட்டி அந்த ஆட்சியையும் பாஜக கவிழ்த்தது.

தற்போது கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே கர்நாடகா அரசியல் களம் அக்னி குழம்பாக தகித்துக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு அடுத்தடுத்து இடஒதுக்கீடு விவகாரங்களில் கை வைத்ததால் மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் பாஜக இம்முறையாவது அதிக இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கிறது. ஆனால் பாஜக அரன் நிலைப்பாடுகள், உட்கட்சி மோதல்கள் பாஜகவுக்கு சாதகமாக இருக்காது என்கின்றன கருத்து கணிப்புகள்.
அதேநேரத்தில் என்னதான் உட்கட்சி மோதல்கள் இருந்தாலும் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெறக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது என்கின்றன கருத்து கணிப்புகள்.
இந்த நிலையில், அடுத்தது காங்கிரஸ் ஆட்சிதான்.. அதனால் காங்கிரஸில் இணைந்துவிடுங்கள் என பாஜக எம்.எல்.ஏக்களுக்கு தொலைபேசி மூலம் கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டிகே சிவகுமார் அழைப்பு விடுப்பதாக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டி உள்ளார். இது கர்நாடகா அரசியலில் புதிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக எம்.எல்.ஏக்களை இழுப்பது, வளைப்பது என்கிற புகார்களுக்கு உள்ளாகக் கூடியது பாஜக; ஆனால் கர்நாடகாவில் நிலைமை தலை கீழாக இருப்பதாகவே முதல்வர் பசவராஜ் பொம்மையின் குற்றச்சாட்டு வெளிப்படுத்துகிறது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications