ஆரம்பமே அசத்தல்.. யாரும் காத்திருக்க கூடாது.. சிக்னலை ஓபன் செய்யுங்க.. சித்தராமையா அடித்த சிக்சர்
பெங்களூரு: கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சித்தராமையா, பொதுமக்கள் போக்குவரத்து சிக்கலில் பாதிக்கப்படுவதை தவிர்க்க 'ஜீரோ டிராபிக்' நடைமுறையை ரத்து செய்வதாக கூறியுள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், மாநிலத்தின் முதலமைச்சரை தேர்வு செய்வது குறித்து தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், ஒரு வழியாக சித்தராமையா முதுலமைச்சராகவும், டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்க ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து கடந்த 20ம் தேதி பதவியேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. முதலமைச்சர் சித்தராமையா தனது பணிகளை தொடங்கியுள்ளார்.

இவரது கான்வாய் சாலைகளில் பயணிக்கும்போதெல்லாம் அந்த சாலையில் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று சித்தராமையா தனது பேரன் தவான் ராகேஷின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து யெலஹங்காவில் உள்ள மன்சென்ஹல்லி சாலைக்கு பயணித்துள்ளார். சுமார் 20 கி.மீ தொலைவுள்ள இந்த பாதையில், இவர் பயணிக்கும் போது வழக்கமாக வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இது போக்குவரத்து பயணத்தில் பொதுமக்களுக்கு கடும் நெரிசலை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பலர் சோஷியல் மீடியாக்களில் விமர்சிக்க தொடங்கினர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் கமிஷ்னரை நேரில் அழைத்து கலந்துரையாடினார். இதில் தன்னுடைய கான்வாய் செல்லும் சாலைகளில் இதர போக்குவரத்துகளை நிறுத்தி வைக்கும் வழக்கத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "வழக்கமாக முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் எனில் அவருடன் குறைந்தது 5 கார்கள் செல்லும், இது தவிர அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் வந்தால் இந்த கார்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே இந்த வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இந்த சாலைகளில் பயணிக்கும் மற்ற வாகனங்கள் சில நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்படும். இதுதான் 'ஜீரோ டிராபிக்' முறை என்று அழைக்கப்படுகிறது.
இதில், வேலைக்கு செல்வோர், மருத்துவமனைக்கு செல்வோர், பள்ளி கல்லூரிக்கு செல்வோர் என பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், நேற்றைய பயணித்தின்போது சித்தராமையா இந்த விஷயத்தை நேரில் பார்த்திருக்கிறார். எனவே இனி தன்னுடைய கான்வாய்க்கு ஜீரோ டிராபிக் முறை பின்பற்ற வேண்டியதில்லை என்று கூறியுள்ளார்" என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது கர்நாடக மக்களிடையே குறிப்பாக பெங்களூரு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ஏனெினல் சர்வதேச அளவில் மிகவும் டிராபிக் மிகுந்த நகரங்களில் பெங்களூரு முதன்மையானதாகும். ஒட்டுமொத்த ஆசிய அளவில் அதிக டிராபிக் இருக்கும் நகரங்களில் பெங்களூரு 5வது இடத்தில் இருக்கிறது. எனவே ஒவ்வொருநாளும், வேலைக்கு செல்வோர், மருத்துவமனைக்கு செல்வோர், பள்ளி கல்லூரிக்கு செல்வோர் என பலதரப்பட்ட மக்களும் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
மட்டுமல்லாது, கோடை காலம் வேறு துவங்கியுள்ளதால் வெளியில் பொளந்து எடுத்து வருகிறது. இந்த வெயிலில் டிராபிக்கில் நிற்பது மக்களை எரிச்சலடைய வைத்துள்ளது. இந்நிலையில் இந்த ஜீரோ டிராபிக் புதியதாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சித்தராமையா மீது நெகட்டிவ் விமர்சனங்களை ஏற்படுத்தும் என்பதால் முதலமைச்சரிடமிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications