"தாலியை கழட்டுங்க.." அரசு தேர்வு எழுத சென்ற பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கர்நாடகாவில் சர்ச்சை
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதச் சென்ற பெண்களின் தாலியை அதிகாரிகள் அகற்றச் சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா என அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் அரசுப் பணியிடங்களுக்குத் தேர்வின் மூலமே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு அமைப்பையும் கொண்டிருக்கிறது.

இப்படி அரசு சார்பில் நடக்கும் தேர்வுகளில் அவ்வப்போது முறைகேடு நடப்பதாகவும் புகார்கள் எழுவது வழக்கம். இதனால் ஒவ்வொரு முறையும் அரசு தேர்வுகளில் புது புது கட்டுப்பாடுகளும் கூட வரும்
கர்நாடகாவில் பரபரப்பு: இதற்கிடையே கர்நாடகா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. எக்ஸாம் சென்டருக்கு செல்லும் போது அதில் பங்கேற்ற பெண் தேர்வாளர்களின் தாலியைக் கழற்றச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. மாங்கல்யம் தவிர, திருமணமான பெண்கள் கழுத்தில் இருந்த செயின், காதணிகள், மெட்டி என அனைத்தையும் அகற்றுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பான தகவல் வெளியான நிலையில், அது கர்நாடகாவில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தைக் கையில் எடுத்துள்ள கர்நாடக பாஜக, அதிகாரிகளின் நடவடிக்கையைக் கடுமையாகச் சாடியுள்ளனர்.. இந்துக்களை மட்டும் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றும் பாஜக எம்எல்ஏ பசங்கவுடா யத்னால் தெரிவித்துள்ளார். தாலியைக் கழற்றச் சொன்ன அதிகாரிகள், ஹிஜாப்பிற்கு மட்டும் அனுமதி தந்தது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண் தேர்வாளர்: இது தொடர்பாகப் பெண் தேர்வாளர் ஒருவர் கூறுகையில், "நான் இந்து மதத்தைப் பின்பற்றுகிறேன். மேலும், தேர்வு வழிகாட்டுதல்களில் எந்த இடத்திலும் தாலியைக் கழற்ற வேண்டும் என்று குறிப்பிடவில்லை. அதை வைத்து என்ன செய்ய முடியும் என நினைக்கிறார்கள் எனத் தெரியவில்லை. நாங்கள் இது குறித்து விளக்கம் தர முயன்றோம். ஆனாலும், அதிகாரிகள் அதைக் கேட்கத் தயாராக இல்லை. கண்டிப்பாகத் தாலியைக் கழட்டியே ஆக வேண்டும் எனச் சொல்லிவிட்டார்கள்.
இதனால் நான் உட்பட பலரும் தேர்வு அறைக்குச் செல்லும் முன்பு தாலியைக் கழட்டினோம். அதன் பின்னரே எங்களை உள்ளே அனுமதித்தார்கள். எங்களுடன் வந்த இஸ்லாமியப் பெண்களின் ஹிஜாப்பையும் அவர்கள் சோதனை செய்தார்கள். ஆனால், அதைக் கழற்றச் சொல்லவில்லை. சோதனை செய்துவிட்டு உள்ளே அனுமதித்தார்கள். அதேபோல எங்களையும் சோதனை செய்துவிட்டு அனுமதித்திருக்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.
என்ன காரணம்: சமீபத்தில் கர்நாடகாவில் பல்வேறு வாரியங்கள் மற்றும் நிறுவனங்களில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்பத் தேர்வு நடைபெற்றது. அதில் சில பேர் முறைகேடு செய்து மாட்டினார்கள். புளூடூத் கருவிகளைப் பயன்படுத்தி, அவர்கள் முறைகேட்டில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்கள் பிடிபட்டனர். அதன் பின்னரே இந்தத் தேர்வுக்குக் கர்நாடகா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications