ஒரே மாவட்டத்தில் 20 பேர் பலி.. கொரோனா தடுப்பூசியால் உயரும் மாரடைப்பு? சித்தராமையா திடீர் கருத்து
பெங்களூர்: கர்நாடகாவில் ஒரே மாவட்டத்தில் சில வாரங்களில் 20 பேர் மாரடைப்பால் உயிரிழந்தது சர்ச்சையானது. இதற்குக் கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் எனச் சொல்லி விசாரிக்க அம்மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். முதல்வரின் இந்த நடவடிக்கையைப் பலரும் விமர்சித்திருந்தனர். தடுப்பூசி குறித்து மக்களிடையே அச்சத்தை அதிகரிக்கும் எனச் சாடினர். இதற்கிடையே இந்த விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா முக்கிய விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஹசான் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 20 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். மேலும், அவர்களுக்கு எந்தவொரு இணை நோய்களும் இல்லை எனச் சொல்லப்படுகிறது.. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்தச் சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சித்தராமையா
இதையடுத்து இது தொடர்பாக 10 நாட்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை பலருக்கும் ஆச்சரியம் தருவதாகவே இருக்கிறது. இதற்கிடையே அவருக்குப் பதிலளித்த பயோகான் லிமிடெட் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா தடுப்பூசியின் பின்னணியில் இருக்கும் சயின்ஸை சித்தராமையா அங்கீகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி தொடர்பாக ஒரு முதல்வரே இதுபோல கேள்வி எழுப்பினால் அது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
இப்போது மஜும்தார்-ஷா கருத்துக்கு முதல்வர் சித்தராமையா பதிலளித்துள்ளார். பதில்களைத் தேடுவது என்பது குறை கூறுவது அல்ல என்றும் ஒவ்வொரு உயிரையும் மதிக்கும் அரசின் கடமையே இது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும், "எதிர்பாராத விதமாக அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் உண்மையான கவலைகளுக்குப் பதிலளிக்க வேண்டிய கடமை முதல்வராக எனக்கு உள்ளது.
அறிவியலுக்கு எதிரானது இல்லை
பெற்றோர்கள் தங்கள் இளம் குழந்தைகளையோ அல்லது குடும்பங்கள் தங்களுக்கு வருமானம் ஈட்டுத் தந்த குடும்ப உறுப்பினரைத் திடீரென இழக்கும்போது, தெளிவு தேடுவது தவறான தகவல் அல்ல; அது இரக்கத்தின் அடிப்படையில் அமைந்த செயல். அறிவியல் பூர்வமான எச்சரிக்கையாக இருப்பது என்பது அறிவியலுக்கு எதிரானது அல்ல.
தடுப்பூசிக்குப் பிறகு மாரடைப்பு மற்றும் இதயச் செயலிழப்பு அபாயம் குறித்துக் குறிப்பாக இளைஞர்களிடையே இந்தச் சிக்கல் இருப்பதைப் பல ஆய்விதழ்கள் (நேச்சர், சர்குலேஷன், ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி போன்றவை) விவாதித்துள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் அச்சமோ தயவோ இன்றி நன்மைகள் மற்றும் அபாயங்கள் இரண்டையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு!
தடுப்பூசியை அவசரமாக அறிமுகப்படுத்தினர் என நான் கூறியது குறித்து சிலர் விமர்சிக்கிறார்கள். "அவசரமாக' என்று நான் கூறியது, முழுமையான நீண்ட கால டேட்டா இல்லாமல் சீக்கிரமாக எடுக்கப்பட்ட முடிவுகளையே குறிப்பிடுகிறேன். உலக சுகாதார அமைப்பு உட்படப் பல அமைப்புகள் இதை கால்குலேடட் ரிஸ்க் என்றே குறிப்பிடுகிறது. உயிர்களைக் காப்பாற்ற அவசரமாகச் செயல்படுவது பாவம் இல்லை. ஆனால், அது எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தினால் அதை நாம் ஒப்புக்கொண்டே தீர வேண்டும்" என்றார்.
சுகாதார அமைச்சகம் பதில்
முன்னதாக இது குறித்து விசாரிக்க சித்தராமையா உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு மத்தியச் சுகாதார அமைச்சகம் பதிலளித்திருந்தது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் எய்ம்ஸ் அமைப்புகள் நடத்திய விரிவான ஆய்வுகளில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கும், திடீர் மரணங்களுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதியாகத் தெரிவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்றும் தீவிரப் பக்க விளைவுகள் மிகவும் அரிதானவை என்றே ஆய்வுகள் குறிப்பிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திடீர் மாரடைப்பு மரணங்கள் என்பது மரபியல், வாழ்க்கை முறை, ஏற்கனவே உள்ள இணை நோய்கள், கொரோனா பாதிப்பு ஏற்படுத்திய பக்கவிளைவுகளைப் பொறுத்தே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications