2976 ஆபாச வீடியோ: மத்திய பாஜக அரசு துணையுடன் பிரஜ்வலை தப்ப வைத்த தேவகவுடா 'ஸ்கெட்ச்'- சித்தராமையா
பெங்களூர்: மத்திய பாஜக அரசின் துணையுடன் 300 பெண்களை நாசமாக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை முன்னாள் பிரதமர் தேவகவுடாதான் வெளிநாட்டுக்கு தப்பி ஓடவிட்டார் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவின் ஹாசன் தொகுதி பாஜக கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் வேட்பாளரும் சிட்டிங் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பல நூறு பெண்களை நாசமாக்கினார் என்பது புகார். பிரஜ்வல் தொடர்பான 2976 ஆபாச வீடியோக்கள் கர்நாடகாவில் பகிரப்பட்டு வருகின்றன.

தப்பி ஓட்டம்: பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு எஸ்ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். மேலும் ஜேடிஎஸ் கட்சியில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்கெட்ச் போட்ட தேவகவுடா: இந்த நிலையில் பெங்களூரில் செய்தியாளர்களை முதல்வர் சித்தராமையா இன்று சந்தித்தார். அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவை மாநில அரசுதான் வெளிநாட்டுக்கு தப்ப அனுமதித்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டுகிறார்களே என சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சித்தராமையா அளித்த பதில்: வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட், விசா யார் கொடுப்பது? மத்திய அரசுதானே.. மத்திய அரசுக்கு தெரியாமல் பிரஜ்வல் ரேவண்ணா எம்பி வெளிநாடு சென்றுவிட முடியுமா? முன்னாள் பிரதமர் தேவகவுடாதான் பிரஜ்வல் ரேவண்ணாவை திட்டம் போட்டு வெளிநாட்டுக்கு ஓடவிட்டவர்.
அமித்ஷாவுக்கு கேள்வி: பெண்கள் சக்தி பேசுகிற மத்திய அமைச்சர் அமித்ஷா, பிரஜ்வல் ரேவண்ணா போன்ற நபர்களுக்கு சீட் தருவதற்கு ஏன் ஒப்புக் கொண்டாராம்? பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோக்கள் குறித்து ஏற்கனவே பாஜகவுக்கு தெரிந்துவிட்ட பின்னரும் ஏன் ஹாசன் தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டதாம்? பிரஜ்வல் ரேவண்ணா வீடியோக்கள் குறித்து தெரிந்தும் ஜேடிஎஸ் கட்சியுடன் ஏன் பாஜக கூட்டணி அமைத்தது? இதற்கு எல்லாம் என்ன அர்த்தம்? இது எல்லாம் எதனை வெளிப்படுத்துகிறது? இது குறித்து எனக்கு விளக்கம் தர வேண்டும்.
டிகே சிவகுமாருக்கு தொடர்பா?: துணை முதல்வர் டிகே சிவகுமார்தான் வீடியோக்களை லீக் செய்தார் என்கிறார் குமாரசாமி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஓட்டுநர் கார்த்திக். பிரஜ்வல் ரேவண்ணா வீடியோக்களை பாஜகவின் தேவேராஜ் கவுடாவிடம்தான் கொடுத்தேன் என்கிறார் கார்த்திக். டிகே சிவகுமாரிடம் கொடுத்தேன் என்றா கூறினார்? அப்படி இருக்கையில் டிகே சிவகுமார்தான் பிரஜ்வல் ரேவண்ணா வீடியோக்களை கசியவிட்டார் என எப்படி சொல்ல முடியுமாம்? தேவேராஜ் கவுடாவே தமக்கு வீடியோக்கள் கிடைத்தது என ஒப்புக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் தான் வீடியோக்களை ரிலீஸ் செய்யவில்லை என்றுதான் சொல்லி இருக்கிறார். டிகே சிவகுமாருக்கும் இந்த நிகழ்வுகளுக்கும் எந்த தொடர்புமே இல்லை.
சிஐடி விசாரணை: தற்போது சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் அனைத்து தகவல்களும் வெளியாகும். சிஐடி விசாரணை வெளிப்படையாகவே நடைபெறுகிறது. இவ்வாறு சித்தராமையா கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications