அதிருப்தியோடு அரசா? கர்நாடக முதல்வராகும் சித்து முன் 6 பெரிய சவால்கள்! ரொம்ப கஷ்டம் போலயே! லிஸ்ட்
பெங்களூர்: கர்நாடகா முதல்வராக நாளை சித்தராமையா பதவியேற்க உள்ளார். ஒருபக்கம் முதல்வர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் டிகே சிவக்குமார், மற்றொரு பக்கம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான நிதி ஏற்பாடு செய்வது என சித்தராமையா முன்பு 6 பெரிய சவால்கள் உள்ளன. இந்த சவால்களை பார்த்தால் ‛‛என்னங்க இது ஆரம்பமே இப்படி இருக்கு?'' என்ற கேள்வியை எழுப்புவதுடன், ‛‛ரொம்ப கஷ்டம் தான் போலயே'' என்ற பீதியையும் நிச்சயம் உருவாக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். சித்தராமையா 2013 முதல் 2018 வரை முதல்வராக இருந்த அனுபவம் கொண்டவர். இந்நிலையில் தான் அவர் மீண்டும் முதல்வராக உள்ளார்.

டிகே சிவக்குமார் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவராக கட்சிக்காக உழைத்தவர். இதனால் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் டிகே சிவக்குமாரும் முதல்வர் பதவியை எட்டிப்பிடிக்க முயன்ற நிலையில் அதற்கு காங்கிரஸ் மேலிடம் ‛ஓகே' சொல்லவில்லை.
இந்நிலையில் தான் நாளை பெங்களூர் கன்டீரவா மைதானத்தில் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பதவியேற்க உள்ளனர். இவர்களும் மூத்த தலைவர்கள் சிலரும் அமைச்சர்களாக பதவியேற்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் நாளை முதல்வராக பதவியேற்க உள்ள சித்தராமையா முன்பு 6 மிகப்பெரிய சவால்கள் உள்ளன. அதன் விபரம் வருமாறு:
முதல் சவால்: முதல்வர் பதவி கிடைக்காததால் டிகே சிவக்குமார் அதிருப்தியில் உள்ளார். இதனா்ல அவருடன் இணக்கமாக செல்ல வேண்டும். மேலும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களுக்கு உரிய பதவி வழங்க வேண்டும். இதில் பிரச்சனை ஏற்பட்டால் அது ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் சித்தராமையா கருத்து வேறுபாடு ஏற்படாமல் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை பெறுவதோடு, ஆட்சியும் சிக்கலை சந்திக்க வாய்ப்புள்ளது.
2வது சவால்: இந்த தேர்தலில் நிறைய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். முன்னாள் மத்திய அமைசசர் கேஎச் முனியப்பா, முன்னாள் அமைச்சர்களான ஆர்வி தேஷ்பாண்டே, சாமனூர் சிவசங்கரப்பா உள்பட டஜன் கணக்கில் மூத்த தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அமைச்சர் பதவியை எதிர்பார்க்கின்றனர். இது ஒருபுறம் இருக்க சித்தராமையா தனது ஆதரவாளர்களையும், டிகே சிவக்குமாரின் ஆதரவாளர்களையும் அரவணைத்து அமைச்சரவையை அமைக்க வேண்டும். இது நிச்சயம் எளிதான காரியமாக இருக்காது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
3வது சவால்: காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியாக முக்கிய 5 திட்டங்களை அறிவித்தது. பாஜக மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு இருப்பதாக கூறினாலும் கூட உண்மையில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த வாக்குறுதிகள் தான் அதிக ஓட்டுகளை பெற்று கொடுத்தன. பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம், டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.1,500, மாதம் 200 யூனிட் மின்சாரம் உள்பட 5 முக்கிய வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு அதிக நிதி தேவை என்பதால் இதுவும் சித்தராமையா முன் உள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக உள்ளது.
4வது சவால்: கர்நாடகாவில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.62 ஆயிரம் கோடி ஆண்டுக்கு தேவை என எக்னாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் இந்த வருவாயை ஈட்ட கர்நாடகா அரசு மாற்று திட்டத்தை யோசிக்க வேண்டும். இல்லாவிட்டால் கடன் வாங்க வேண்டும். இதுவும் சாதாரணமான விஷயம் அல்ல. ஒருவேளை இந்த திட்டங்களை காங்கிரஸ் கட்சி செயல்படுத்தாவிட்டால் மக்கள் கடும் அதிருப்தி அடைவார்கள். இதனால் செயல்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு சித்தராமையா தள்ளப்பட்டுள்ளார். இது சித்தராமையா முன் நிற்கும் 4வது மிகப்பெரிய சவாலாகும்.
5வது சவால்: கர்நாடகாவில் ஒக்கலிகர் சமுதாய மக்கள் எப்போதும் ஜேடிஎஸ் கட்சிக்கு தான் அதிகமாக வாக்களிப்பார்கள். இதனால் இந்த சமுதாய மக்கள் வசிக்கும் ஓல்டு மைசூர் மாவட்டங்களில் ஜேடிஎஸ் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் அதிக இடங்களை கைப்பற்றும். ஆனால் இந்த முறை காங்கிரஸ் கட்சி ஓல்டு மைசூர் மாவட்டங்களில் 58 தொகுதிகளில் 37 இடங்களை வென்றது. இதற்கு முக்கிய காரணம் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவரான டிகே சிவக்குமார் தான். ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த அவர் தான்தான் அடுத்த முதல்வர் என ஓட்டுகளை பெற்றார். தற்போது அவருக்கு முதல்வர் பதவி கைநழுவிய நிலையில் ஒக்கலிகர்களை சமாதானப்படுத்தும் வகையில் அமைச்சரவையில் அவர்களுக்கு உரிய அந்தஸ்து கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் ஒக்கலிகர் ஓட்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்காத நிலை உருவாகலாம்.
6வது சவால்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமையும் நிலையில் மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது. இதனால் மத்திய அரசுடன் இணக்கமான உறவை வைத்து கொண்டு திட்டங்களையும், நிதி ஒதுக்கீட்டையும் முறையாக பெற வேண்டியது சித்தராமையாவின் பொறுப்பாகும். அதேவேளையில் கர்நாடகா மாநிலத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை அவர் எதிர்க்க வேண்டும். இது ஒவ்வொரு முதல்வர்களுக்கும் இருக்கும் சவால் தான் எனினும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு இதனை எப்படி எதிர்கொள்ள உள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது சித்தராமையாவின் முன் உள்ள 6வது சவாலாகும்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications