Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிகே சிவக்குமாருக்கு செக்.. 50% அமைச்சர்களை மாற்ற முடிவு.. முதல்வர் பதவியை காக்க சித்தராமையா பிளான்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் பதவியை தக்க வைத்து கொள்ள சித்தராமையா 50 சதவீத அமைச்சர்களை மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு பதில் புது முகங்களுக்கு வாய்ப்பளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல்வர் பதவியை கைப்பற்ற துணை முதல்வர் டிகே சிவக்குமார் குறிவைத்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் சித்தராமையா இந்த முடிவை எடுத்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பொறுப்பேற்றனர். முதல்வர் பதவியை எட்டிப்பிடிக்க டிகே சிவக்குமார் முயன்றார். ஆனால் காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவை முதல்வராக்கியது.

karnataka-cm-siddaramaiah-may-drop-50-percent-of-ministers-as-2-5-years-term-nears-end

இதற்கிடையே தான் ஒரு தகவல் வெளியானது. அதாவது முதல் இரண்டரை வருடம் மட்டும் சித்தராமையா முதல்வராக இருப்பார். அதன்பிறகு அடுத்த இரண்டரை ஆண்டுகள் டிகே சிவக்குமார் முதல்வராக செயல்பட வைக்கும் வகையில் காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

முதல்வர் பதவிக்கு போட்டி

ஆனால் இதனை சித்தராமையா மறுத்துள்ளார். 5 ஆண்டுகளும் நானே முதல்வராக இருப்பேன் என்று கூறி வருகிறார். மறுபுறம் டிகே சிவக்குமார் முதல்வர் பதவியை கைப்பற்றும் முனைப்பில் செயல்பட்டு வருகிறார். அவரது ஆதரவாளர்கள் இந்த ஆண்டு இறுதியில் டிகே சிவக்குமார் முதல்வராக பொறுப்பேற்பார் என்று கூறி வருகின்றனர்.

50 சதவீத அமைச்சர்கள் மாற்றம்

இப்படியான சூழலில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது கர்நாடகா முதல்வர் சித்தராமையா தனது அமைச்சரவையில் 50 சதவீதம் பேரை மாற்ற திட்டமிட்டுள்ளாராம். வரும் நவம்பர் மாதம் அமைச்சரவையில் உள்ள 50 சதவீதம் பேரை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதில் புது முகங்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சித்தராமையாவின் கணக்கு என்ன?

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 2023 மே மாதம் ஆட்சிக்கு வந்தது. வரும் நவம்பர் மாதத்துடன் இரண்டரை ஆண்டுகள் முடிவுக்கு வர உள்ளது. இதனால் காங்கிரஸ் மேலிடம் முதல்வரை மாற்றலாம் என்ற யூகங்கள் கிளம்பி உள்ளது.

இப்படியான சூழலில் அதற்கு முன்பாகவே தனது அமைச்சரவையில் 50 சதவீத பேரை மாற்ற வேண்டும். அப்படி அமைச்சரவையில் மாற்றம் செய்யும்போது உடனடியாக முதல்வரை மாற்ற மேலிடம் விரும்பாது என்று சித்தராமையா கணக்க போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சர்களுக்கு டின்னர்

அதன்படி பீகார் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு கர்நாடகாவில் அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வர சித்தராமையா திட்டமிட்டுள்ளார். இதற்கு முன்பாக சித்தராமையா தனது கேபினட் அமைச்சர்களுக்கு அக்டோபர் 13ம் தேதி இரவு விருந்து ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே

இதுபற்றி சித்தராமையா அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் அமைச்சரவை மாற்றம் பற்றி எடுத்து கூறியுள்ளதாகவும், அதுபற்றி அக்டோபர் 13ம் தேதி நடக்கும் கேபினட் அமைச்சர்களுக்கான டின்னர் மீட்டிங்கில் சித்தராமையா தனது அமைச்சரவை சகாக்களிடம் எடுத்து கூற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதற்கட்டமாக 15 அமைச்சர்களை நீக்கி அவர்களுக்கு பதிலாக புதிய முகங்கள் 15 பேருக்கு வாய்ப்பளிக்கவும், இதன்மூலம் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மட்டுமின்றி பிற எம்எல்ஏக்களையும் தனக்கு ஆதரவாக இழுக்க முடியும் என்று சித்தராமையா நம்பி இந்த பிளானை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

டிகே சிவக்குமாருக்கு சொல்வது என்ன?

இருப்பினும் இதுபற்றி துணை முதல்வர் டிகே சிவக்குமாரிடம் கேட்டபோது அவர் தனக்கு எந்த தகவலும் தெரியவில்லை என்றார். இதுபற்றி டிகே சிவக்குமார், ‛‛அமைச்சரவை மாற்றம் தொடர்பாக எந்த தகவலும் எனக்கு தெரியாது. அது முதல்வர் சார்ந்த விஷயமாகும். நாங்கள் அனைவரும் கட்சிக்காக உழைக்கிறோம்.

மேலும் இதுபோன்ற விவகாரங்களில் நான் தலையிடுவதும் கிடையாது. இது கட்சி மேலிடம் மற்றும் முதல்வர் சார்ந்த முடிவாகும். என்னால் பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும். இதில் யாரும் குழப்பம் ஏற்படுத்த வேண்டும்'' என்றார். இருப்பினும் சித்தராமையாவின் பிளான் சக்சஸ் ஆகும் பட்சத்தில் டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+