தமிழ்நாட்டை பாருங்க! ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க அதிகாரிகளுக்கு சித்தராமையா உத்தரவு
பெங்களூர்: தமிழகத்தில் அரசு நிலம், கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது போல கர்நாடகாவிலும் தடை விதிப்பது குறித்து மதிப்பாய்வு செய்ய அம்மாநில தலைமை செயலாளருக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டு இருக்கிறார். தமிழ்நாட்டை பின்பற்றி அரசு கட்டிடங்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சித்தராமையாவுக்கு பிரியங்க் கார்கே கடிதம் எழுதிய நிலையில், சித்தராமையா இவ்வாறு கூறியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். அங்கு பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. தலைநகர் பெங்களூரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் விழா
அதேபோல், கலபுரகியில் உள்ள ஒரு அரசு பள்ளி கூடத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளும் கலந்து கொண்டனர். அரசு பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
குறிப்பாக ஆளும் காங்கிரஸ் கட்சியே கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அது மட்டும் இன்றி கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே, முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் எழுதினர்.
பாஜக கண்டனம்
இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தடை விதிக்க அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியிருப்பதாக பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் குற்றம் சாட்டியதுடன் கடும் கண்டனத்தையும் பதிவு செய்தனர். இதனால் இந்த விவகாரம் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது கடிதம் குறித்து விளக்கம் அளித்த பிரியங்க் கார்கே, கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கவே கோரினேன். அந்த அமைப்புக்கு தடை விதிக்க கூறவில்லை என்று கூறினார்.
தமிழ்நாட்டை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்
கர்நாடகாவில் அரசு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நடைபெற்றது அரசியல் ரீதியாகவும் விவாதப்பொருளான நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டை பார்த்து அதிகாரிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாகல்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா கூறியதாவது:-
"கர்நாடக ஐடி அமைச்சர் பிரியங்க் கார்கே, மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று எனக்கு கடிதம் எழுதினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது நிகழ்ச்சிகளுக்கு அரசாங்க இடத்தை பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டில் அந்த அமைப்பின் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல், கர்நாடகாவிலும் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்கு தடை
பிரியங்க் கார்கேவின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு பின்பற்றும் நடைமுறையை ஆய்வு செய்து கர்நாடக மாநிலத்திலும் அந்த அமைப்பின் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கும்படி தலைமை செயலாளருக்கு நான் உத்தரவிட்டு இருக்கிறேன்" என்றார்.
கர்நாடகாவில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்று துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியது பற்றி பேசிய சித்தராமையா, "இதுபோன்ற விவகாரங்களில் எம்.எல்.ஏக்களின் கருத்துகள் மற்றும் உயர்மட்ட குழுவின் முடிவு மிகவும் முக்கியமானது. அமைச்சரவை மாற்றத்திற்கும் அமைச்சர்களுக்கு இரவு உணவு விருந்து வைக்கப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை. நவம்பரில் எந்த புரட்சியும் இருக்காது" என்று கூறினார்.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications