சிக்கல்.. இலவச வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தடுமாறுகிறதா கர்நாடகா காங்கிரஸ் அரசு?
பெங்களூர்: கர்நாடகா தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றுவதாக கோப்பில் முதல்வர் சித்தராமையா கையெழுத்திட்டாலும் நடைமுறைப்படுத்துவதில் ஆளும் காங்கிரஸ் அரசு மிகவும் தடுமாறுவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை நாடு முழுவதும் பெரும் பேசுபொருளானது. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகள் பாணியில் கர்நாடகா காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.

இத்தேர்தல் அறிக்கையில், க்ருஹ லக்ஷ்மி திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000; . யுவா நிதியின் கீழ் வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு 2 ஆண்டுகள் வரை மாதம் ரூ.3000; வேலையில்லாத டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1500; 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. இந்த தேர்தல் வாக்குறுதிகளை பாஜக கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதனால் இந்த தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தவே முடியாது பொய் வாக்குறுதிகள் என்றெல்லாம் பாஜக கூறிப் பார்த்தது. ஆனால் மக்களோ இந்த வாக்குறுதிகளை மலைபோல நம்பி காங்கிரஸுக்கு வாக்கு அளித்து அரியணையில் அமர்த்தியும் விட்டனர். அத்துடன் இந்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றுகிறோம் என முதல்வராகப் பொறுப்பேற்ற உடனேயே கோப்புகளில் சித்தராமையாவும் கையெழுத்து போட்டார். இருந்த போதும் காங்கிரஸின் இந்த தேர்தல் வாக்குறுதிகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.
இது தொடர்பாக மாநில காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும் அமைச்சருமான சதீஷ் ஜர்கிஹோலி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் கால வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நாங்கள் நிறைவேற்றுவோம். அதேநேரத்தில் சில நிபந்தனைகளுடன் அவை நிறைவேற்றப்படும். அனைத்து நலத் திட்டங்களும் அனைவருக்கும் கொடுப்பது என்பது எப்படியும் சாத்தியமற்றது. ஒவ்வொரு வீடாக போய் வாக்குறுதி அட்டைகளை காங்கிரஸ் தொண்டர்கள் கொடுத்தனர். அதனை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் மாத உதவித் தொகை போன்றவற்றை அனைவருக்கும் தந்துவிட முடியாது. உண்மையான ஏழைகள் யார் என்பதை கண்டறிந்து அவர்களுக்குதான் நம்மால் வழங்கவும் முடியும்.
சில நலத் திட்ட உதவிகளை அதிக வருமானம் பெறுகிற தனிநபர்கள், அரசு ஊழியர்கள். வருமான வரி செலுத்துகிறவர்களுக்கு தர இயலாது. ஆகையால் பயனாளிகள் யார் என்பதை தெளிவாக கண்டறிந்து அதனடிப்படையில் நலத் திட்டங்கள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படும். அடுத்த கேபினட் கூட்டத்தில் இந்த விவரங்கள் முன்வைக்கப்படும். இதனை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. மக்கள் இதனைப் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு சதீஷ் ஜர்கிஹோலி கூறினார்.
கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் துணை முதல்வருமான டிகே சிவகுமார், பிரதமர் மோடி ரூ15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்துவதாக சொல்லி எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது? இன்னமும் போடவில்லைதானே... அப்படித்தான். முதலில் ரூ15 லட்சத்தை வங்கிக் கணக்கில் செலுத்த சொல்லுங்கள்.. நாங்கள் எங்கள் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக, படிப்படியாகவும் நிறைவேற்றுவோம் என்றார்.

ஆனால் கர்நாடகா பாஜக மேலிட பொறுப்பாளர்களில் ஒருவரும் தமிழ்நாடு பாஜக தலைவருமான அண்ணாமலை, காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற சுமார் ரூ65,000 கோடி தேவை என ஏற்கனவே சுட்டிக்காட்டி இருக்கிறோம். ஏடிஎம் கார்டுகளை கொடுப்பது போல வெற்று வாக்குறுதி கார்டுகளை வீடு வீடாகக் கொடுத்து காங்கிரஸ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுவிட்டது. ஆனால் இப்போது ஆட்சியில் அமர்ந்த பின்னர், வார்த்தை ஜாலங்களை வெளிப்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர். இது கிரிமினல் குற்றம். இத்தகைய குற்றத்துக்கான தண்டனையை 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அனுபவிக்கும் என்றார்.
இதேபோன்ற நிலைமைதான் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் திமுக வாக்குறுதிகளை வாரி வழங்கியது. இதில் பல திட்டங்கள் நடைமுறைக்கு வந்த போதும் பெண்களுக்கு மாதம் ரூ1,000 உதவி வழங்கும் திட்டம் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. இது மிகப் பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி கேட்டன. இதற்கு பதில், பயனாளிகளைத் தேர்வு செய்கிறோம் என்பதாக இருந்தது. இந்த 2 ஆண்டில் நிதி அமைச்சர் மாற்றப்பட்டு புதிய நிதி அமைச்சரும் வந்துவிட்டார். ஆனாலும் அறிவித்த திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்துவதில் திராவிட மாடல் திமுக அரசு இன்னமும் தடுமாறுகிறது. அப்படியான நிலையில் நேற்று ஜெயித்த காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் எப்படியெல்லாம் தடுமாறுமோ என்பதையே அமைச்சர்கள் பேட்டி வெளிப்படுத்துகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
எழும்பூர்.. திமுகவின் இரும்புக்கோட்டை.. தவெக ராஜ்மோகனுக்கு ‘டெபாசிட்’ கிடைப்பதே சவால்.. ஏன்? -
ரூ.4000 + ரூ.2000.. தவெக விஜய் சட்டென சொன்ன சர்ப்ரைஸ் வாக்குறுதி.. யாருக்கெல்லாம் வழங்கப்படும்? -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications