கர்நாடகா காங்கிரஸ் ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும்..திடுதிப்பென 'சங்கு ஊதும்' பாஜக கூட்டணி குமாரசாமி
பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும்; மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டது போல திடீர் அரசியல் திருப்பங்கள் கர்நாடகாவிலும் நிகழப் போகிறது என பாஜகவின் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி திடீரென தெரிவித்திருப்பது அம்மாநிலத்தில் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களைக் கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை விட கூடுதலான தொகுதிகளில் வென்றது காங்கிரஸ். பாஜகவுக்கு 66 இடங்களும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 19 இடங்களும்தான் கிடைத்தன.

என்னதான் காங்கிரஸ் கட்சியை பாஜக உடைத்தாலும் அதிகபட்சம் 20 எம்.எல்.ஏக்கள் கட்சி தாவினாலும் கூட காங்கிரஸ் அரசு தப்பித்துவிடும் என்பது அக்கட்சியினர் திடமான நம்பிக்கை. ஆனால் கர்நாடகா சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த குமாரசாமி, இடைவிடாமல் காங்கிரஸ் ஆட்சி கவிழப் போகிறது என கூறி வந்தார். அண்மையில் திடீரென இந்த பல்லவியைப் பாடுவதை நிறுத்தி இருந்தார்.
தற்போது மீண்டும் கச்சேரியை கூட்டியிருக்கிறார் குமாரசாமி. பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சியில் எதுவுமே நன்றாக இல்லை. சித்தராமையா தலைமையிலான அரசு எப்போது கவிழும் என்பது எனக்கு தெரியவில்லை. கர்நாடகா காங்கிரஸ் அரசில் உள்ள மிக முக்கியமான அமைச்சர் ஒருவர் (டிகே சிவகுமார்) தம் மீதான வழக்குகளில் இருந்து தப்பித்தால் போதும் என நினைக்கிறார். மத்திய அரசு அந்த அமைச்சர் மீது போட்ட வழக்குகளில் இருந்து அவரால் தப்பிக்கவே முடியாது.
மகாராஷ்டிராவில் (சிவசேனா கட்சி உடைக்கப்பட்டு காங்கிரஸ்-என்சிபி-சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது) எப்படி அரசியல் மாற்றம் நிகழ்ந்ததோ அதேபோல கர்நாடகாவிலும் நடக்கப் போகிறது. இந்த அரசியல் தலைகீழ் மாற்றமும் ஆட்சி கவிழ்வதும் கர்நாடகவில் எந்த நேரத்திலும் நடக்கலாம். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் தத்துவம், சித்தாந்தம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. தற்போதைய சூழ்நிலைகள் அரசியல் சூழ்நிலைகளை புரட்டிப் போடப் போகின்றன. இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications