மத்திய பாஜக அரசுக்கு எதிராக முதல்வர் சித்தராமையா தலைமையில் "சொம்பு" போராட்டம் நடத்திய கர்நாடகா அரசு!
பெங்களூர்: மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடகா அமைச்சர்கள் 'சொம்பு' போராட்டத்தை இன்று நடத்தினர்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவியது. இதனால் மாநிலத்தின் 236 தாலுகாக்களில் 223ஐ வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்தது கர்நாடகா காங்கிரஸ் அரசு.

அத்துடன் கர்நாடகா மாநில அரசுக்கு வறட்சி பாதிப்புக்கான ரூ18,171 கோடி நிதியை வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசிடம் கர்நாடகா அரசு கோரிக்கை விடுத்து வந்தது. இது தொடர்பாக நீதிமன்ற படிக்கட்டுகளிலேயும் கர்நாடகா அரசு ஏறியது.
இந்த நிலையில் வெறும் ரூ3,454 கோடியை வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசு, கர்நாடகாவுக்கு கொடுத்தது. இதற்கு கர்நாடகா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த பாரபட்சமான போக்கைக் கண்டித்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையில் அம்மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று சட்டசபைக்கு வெளியே போராட்டம் நடத்தினர். அப்போது கைகளில் சொம்பை ஏந்தி அவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இப்போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலாவும் பங்கேற்றார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications