‛‛விடமாட்டோம்’’.. 68 தொகுதியை ஒதுக்கியே ஆகணும்.. ஷாக் கொடுத்த லிங்காயத் ‛தலைகள்’..அலறும் காங்கிரஸ்
தங்கள் சமூகத்தை சேர்ந்த எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்கியதோடு மட்டுமல்லாமல், லிங்காயத்து மதத் தலைவர்கள் பலரை கைது செய்ததால் பசவராஜ் பொம்மை மீது லிங்காயத்து ஜாதியினர் கோபத்தில் உள்ளனர்.
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் வந்தாலும் வந்தது.. அங்கு ஜாதி தலைவர்கள் கொடுக்கும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அரசியல் கட்சிகள் விழிப்பிதுங்கி நிற்கின்றன.
குறிப்பாக, லிங்காயத்து, ஒக்கலிகர் சமூகங்களைச் சேர்ந்த பெருந்தலைகள், தங்களுக்கு இத்தனை தொகுதிகளை கொடுக்க வேண்டும் என பாஜகவையும் காங்கிரஸையும் மிரட்டாத குறையாக வலியுறுத்தி வருகின்றன.
அந்த வகையில், தற்போது லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் அக்கட்சியின் தலைவரை சந்தித்து தங்களுக்கு இந்த முறை 68 தொகுதிகளை ஒதுக்கியே தீர வேண்டும் என முரண்டு பிடித்திருப்பது கர்நாடகாவில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

தகிக்கும் கர்நாடகா தேர்தல் களம்
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி வரும் மே மாதத்துடன் முடிவடையவுள்ளது. எனவே, இன்னும் சில வாரங்களில் கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே அங்கு தேர்தல் பணிகளில் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இறங்கிவிட்டன. இந்த முறை பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் வாழ்வா சாவா தேர்தல் என்பதால் கர்நாடகா தேர்தல் களம் தகித்து வருகிறது. இந்த தேர்தலை பாஜகவுக்கு சரி; காங்கிரஸுக்கும் சரி.. அவ்வளவு எளிதானதாக இருக்கப் போவதில்லை.

பாஜக மீது லிங்காயத்துகள் அதிருப்தி
கர்நாடகா பாஜகவுக்குள் கடுமையான உட்கட்சி பூசல் நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆதரவாளர்களுக்கும், முதல்வர் பசவராஜ் பொம்மை ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. அதைவிட மேலாக, கர்நாடகாவில் தேர்தல் வெற்றி தோல்வியை தீர்மானிக்க வல்ல லிங்காயத்து சமூகத்தினர், முதல்வர் பசவராஜ் பொம்மை மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். தங்கள் சமூகத்தை சேர்ந்த எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்கியதோடு மட்டுமல்லாமல், லிங்காயத்து மதத் தலைவர்கள் பலரை கைது செய்ததால் பசவராஜ் பொம்மை மீது லிங்கயாத்து ஜாதியினர் கோபத்தில் உள்ளனர். இந்த அதிருப்தி பாஜக மீதானதாக மாறிவிட்டது.

மிரட்டும் லிங்காயத்து தலைவர்கள்
சரி.. இந்த அதிருப்தியை பயன்படுத்தி காங்கிரஸ் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற சூழலும் கர்நாடகாவில் இல்லை. காங்கிரஸுக்குள்ளும் பல அணிகள் உருவாகி உட்கட்சி பூசல் நடந்து கொண்டிருப்பதால் அக்கட்சி மீதும் மக்களுக்கு பெரிய அளவில் நம்பிக்கை வரவில்லை. இந்தப் பின்னணியில்தான், லிங்காயத்து, ஒக்கலிகா சமூகத்தினர் தற்போது இந்த இரண்டு கட்சிகளுக்கும் கடுமையான நெருக்கடியை கொடுத்து வருகின்றனர். அதில் லிங்காயத்து தலைவர்களோ இரு கட்சிகளின் கண்களிலும் விரலை விட்டு ஆட்டி வருகின்றன. தங்கள் சமூகத்தினருக்கு இந்த முறை அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

68 தொகுதிகள் வேண்டும்..
இந்நிலையில், காங்கிரஸில் உள்ள லிங்காயத்து தலைவர்கள் அடங்கிய 7 பேர் கொண்ட குழுவினர், கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமாரை இன்று சந்தித்தனர். அப்போது இந்த முறை கர்நாடகா தேர்தலில் லிங்காயத்து சமூகத்தினருக்கு 68 தொகுதிகளை கட்டாயம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதிக இடங்களை ஒதுக்குவதன் மூலம் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ள லிங்காயத்து சமூகத்தினரின் வாக்குகளை காங்கிரஸால் பெற முடியும் என்பது உண்மைதான். ஆனால், ஒக்கலிகா உள்ளிட்ட மற்ற பெரும்பான்மை ஜாதிகளும் அதிக சீட்களை கேட்டு மிரட்டி வருவதால் காங்கிரஸும் கையை பிசைந்து வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications