Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்லாமியர் அடித்து கொலை.. குற்றவாளிகள் எங்கே? பசு காவலர்களை கைது செய்ய கர்நாடகாவில் கூடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: மாடுகளை கொண்டு சென்றதற்காக, இஸ்லாமியர் ஒருவரை பசு பாதுகாவலர்கள் என்று கூறி கொள்பவர்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கர்நாடகாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.. என்ன நடந்தது?

கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி எண்ணப்பட உள்ளது.

எனவே, இந்த முறையும் ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு ஒட்டுமொத்த வியூகங்களையும் பாஜக அங்கு எடுத்துள்ளது.. காரணம், தென் மாநிலங்களிலேயே, பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா மட்டும்தான்...

 செக் செக்

செக் செக்

கடந்தமுறை தேர்தலின்போதே பாஜக நிறைய விமர்சனத்துக்கு ஆளாகியிருந்தது.. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைத்ததாக புகார்கள் வெடித்து கிளம்பின.. அதனால்தான் இந்த முறை பாஜகவின் செயல்பாடுகள் பலராலும் உற்றுகவனிக்கப்பட்டு வருகிறது. அநேகமாக இந்த முறையும் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள்.. அதற்கேற்றவாறு, வெளியாகிய கருத்து கணிப்புகளும், பாஜகவுக்கு போதுமான திருப்தியை தரவில்லை.

 வெறுப்பு பிரச்சாரம்

வெறுப்பு பிரச்சாரம்

ஏற்கனவே, அரசின் டெண்டர்களை எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு 40 சதவிகித கமிஷன், முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரங்கள், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு ரத்து, வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் என மக்களை பாதிக்கக்கூடிய பல பிரச்சனைகள் கர்நாடகாவில் உருவெடுத்து, நெருக்கடியை தந்து கொண்டிருக்கும் நிலையில், இம்மாநில அரசியலை ஒட்டுமொத்த நாடே உற்றுகவனித்து வருகிறது. இந்நிலையில், ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்து, அது விஸ்வரூபமெடுத்துள்ளது..

 யார் இந்த பாஷா?

யார் இந்த பாஷா?

கர்நாடகாவை சேர்ந்தவர் இட்ரிஸ் பாஷா.. இவர் ஒரு கால்நடை வியாபாரி.. நேற்று முன்தினம் அதாவது கடந்த சனிக்கிழமையன்று இவர், மாடுகளை வாகனத்தில் ஏற்றிச்சென்று கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பசு பாதுகாவலர்கள் கூறி கொள்ளும் நபர்களான புனீத் கேரேஹள்ளி மற்றும் அவரது கூட்டாளிகள், இட்ரிஸ் பாஷா சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தியதாகவும் சொல்கிறார்கள்..

 மறுப்பு

மறுப்பு

பிறகு, இட்ரிஸ் பாஷாவின் வாகனத்தை கண்டதுமே, மாடு ஏற்றிச்சென்றது தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு பாஷா, சந்தைக்கு சென்று வருவதாகவும், அங்குதான் மாடுகளை வாங்கி வருவதாகவும் கூறி, கால்நடை சந்தையில் இருந்து பெற்ற ஆவணங்களையும் அவர்களிடம் காண்பித்ததாக தெரிகிறது. ஆனால், புனீத் கேரேஹள்ளி நபர்களோ, பாஷாவின்அவர்கள் அதை ஏற்க மறுத்துள்ளனர்.. அத்துடன், அவர்கள் பாஷாவிடம் 2 லட்சம் ரூபாய் தருமாறு கேட்டதாகவும், அதற்கு பாஷா மறுப்பு சொன்னதாகவும் கூறப்படுகிறது.

 அடித்து கொலை?

அடித்து கொலை?

இதனால் ஆத்திரமடைந்த புனீத் கூட்டத்தினர், பாஷாவை சரமாரியாக தாக்க ஆரம்பித்ததாக சொல்கிறார்கள் அதற்குள் தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அங்கு சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றுள்ளனர்... மேலும், புனீத்திடமிருந்து பசு வதை தடை சட்டத்தின்படி புகார் பெற்ற போலீசார் பாஷாவை கைது செய்ய சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார்கள்.. அப்போதுதான், கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் உள்ள சாலையில் பாஷாவின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.. இதையடுத்து, இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்த துவங்கிவிட்டது..

 கட்டுக்குள் நிலைமை

கட்டுக்குள் நிலைமை

விஷயத்தை கேள்விப்பட்டதுமே, பாஷாவின் உறவினர்கள் ஆவேசமடைந்ததுடன், இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தினால் மேலும் பதற்றம் ஏற்பட்டது.. பாஷவின் மர்ம மரணத்திற்கு காரணமான பாதுகாவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.. இதற்கு பிறகு தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பாஷாவின் குடும்பத்தினரை சமாதானப்படுத்தினர்.. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி தந்துள்ளனர்.. பின்னர், நிலைமையையும் கட்டுக்குள் கொண்டு வந்தனர்..

 பைக் ஊர்வலம்

பைக் ஊர்வலம்

கேரேஹள்ளி உள்ளிட்டோர் மீது கொலை மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்... ஆனால், குற்றவாளிகளாக அறியப்படும் புனீத் கேரேஹள்ளி மற்றும் அவரது கூட்டாளிகள் உடனடியாக தலைமறைவாகி உள்ளனர்.. எனவே, அவர்களை பிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாக போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனினும், இந்த சம்பவத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் லாரி மற்றும் பைக்குகளில் ஊர்வலம் சென்றவாறு கர்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்துள்ள இந்த பகுதியானது, காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமாரின் தொகுதியில் உள்ளதால், பரபரப்புகள் எகிறி கொண்டிருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+