தனக்கு தானே எதிரி.. ராஜஸ்தான், ம.பி. போல கர்நாடகாவிலும் தப்பு செய்கிறதா காங்கிரஸ்?

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: ராஜஸ்தான் , மத்திய பிரதேசம் என காங்கிரஸ் வலிமையாக உள்ள மாநிலங்களில் எப்போதும் காங்கிரஸ் தலைமையே ஊக்கப்படுத்தும் கோஷ்டி பூசல் அரசியலை கர்நாடகாவிலும் 'செம கெத்தாக' அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. இதனால் முதல்வர் ரேஸில் சித்தராமையா வென்றாலும் அவரது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே டிகே சிவகுமார் இருக்கப் போகிறார்; இந்த கத்தி யார் மீது எப்போது பாயும் என்பது அடிவாங்கும் போதுதான் புரியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி யாரை முதல்வராக தேர்வு செய்வது என முடிவு செய்ய முடியாமல் இடியாப்ப சிக்கலில் சிக்கிக் கொண்டது. இது தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் டெல்லியில் இடைவிடாமல் நடைபெற்றன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோருடன் இந்த ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனைகளில் தற்போதைய நிலைமை வரை சித்தராமையா போட்டியில் முன்னணியில் இருக்கிறார். துணை முதல்வர் பதவி கொடுத்தாலும் டிகே சிவகுமார் நிராகரித்து வருகிறார். தங்களுக்கு முதல்வர் பதவி கிடைக்காத அதிருப்தியில் டிகே சிவகுமார் தரப்பு இருக்கிறது என்பது டெல்லி லேட்டஸ்ட் தகவல்.

 Karnataka Crisis: Congress not learn lessons From Rajasthan, MP?

இதனால் என்னதான் சித்தராமையா முதல்வராக பதவியேற்றாலும் மாநில தலைவராக தொடரும் டிகே சிவகுமார், எப்போது வேண்டுமானாலும் கலகக் குரல் எழுப்பக் கூடும் என்பதுதான் கள யதார்த்தம்.

காங்கிரஸ் கட்சி இதேபோன்ற சூழ்நிலைகளை பல மாநிலங்களில் எதிர்கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்த அனுபவங்களில் இருந்து அக்கட்சி பாடம் கற்றதாகத் தெரியவில்லை என்பதுதான் இப்போது புரிந்து கொள்ளப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் புதிய ஆட்சி அமைத்தது காங்கிரஸ். அம்மாநிலத்தில் ஜோதிராதித்ய சிந்தியா வலிமையான இளம் தலைவராக இருந்தார். அவரை அரவணைத்து தக்க வைப்பதில் காங்கிரஸ் மேலிடமும் சரி, கமல்நாத்தும் சரி கோட்டை விட்டனர். இதனால் என்ன ஆனது? கணிசமான எம்.எல்.ஏக்களுடன் சிந்தியா பாஜக பக்கம் தாவிவிட, ம.பி.யில் காங்கிரஸ் அரசாங்கமே கவிழ்ந்து போனது. முதல்வர் பதவியை பறிகொடுத்தார் கமல்நாத். அதாவது காங்கிரஸ் கட்சியே பாஜகவுக்கு ஆட்சியை இலகுவாகத் தாரைவார்த்து கொடுத்தது.

இதே நிலைமைதான் தற்போது ராஜஸ்தானில் நடந்து கொண்டிருக்கிறது. முதல்வராக பெரியவர் அசோக் கெலாட்; துணை முதல்வராக இளையவர் சச்சின் பைலட் என ஒரு பார்முலா முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்த பார்முலா ஒர்க் அவுட் ஆகவில்லை. இதனால் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக அவ்வப்போது தர்மயுத்தங்களை சச்சின் பைலட் நடத்தி வருகிறார். மதில் மேல் பூனையாக, பாஜகவுடன் ஒரு பக்கம் நட்பு பாராட்டிக் கொண்டு ஒருவழியாக முதல்வர் நாற்காலியை கெட்டியாக தக்க வைத்து வருகிறார் அசோக் கெலாட்.

இத்தகைய அனுபவங்கள், கெட்ட பாடங்கள் எத்தனையோ கிடைத்தும் கூட காங்கிரஸ் மேஎலிடம் டிகே சிவகுமார் தரப்பை அரவணைக்காமல் சித்தராமையாவை அரியணையில் ஏற்றி வைத்திருக்கிறது. சித்தராமையா பதவிக் காலத்தில் அவரது தலைக்கு மேலோ தொங்குகிற கத்தியாக டிகே சிவகுமார் இருக்கப் போகிறார்; இப்படி ஒரு எச்சரிக்கை உணர்வு சித்துவுக்கு இருக்கத்தான் வேண்டும் என்பது காங்கிரஸ் மேலிடத்தின் விருப்பமா? அல்லது நினைத்ததை செய்ய வேண்டும் என்ற டெல்லி பிடிவாதத்தின் வெளிப்பாடா? என்பதை காலம் சொல்லத்தான் போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+